குணமது கைவிடேல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: July 18, 2026
பார்வையிட்டோர்: 13 
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்

(1948ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒர் ஊரில் ஒரு முதலாளி கடை வைத்திருந்தார். அவருக்குக் கடையில் வேலை செய்ய ஒரு பையன் தேவையாய் இருந்தான். அவ்வூரில் கண்ணன் காளி என்று இரண்டு சிறுவர்கள் இருந்தார்கள். அவர்களை அவர்களின் தகப்பன்ர்கள் கடையில் கொண்டு வந்து விட்டார்கள். 

அவர்களுள் கண்ணன் நல்ல குணம் உடையவன். பொய் சொல்ல மாட்டான். திருட மாட்டான். காளி குணம் கெட்டவன். பொய்யும், திருட்டும் அவனுக்குச் சினேகிதர்கள். கடையிலும் சாமான்களைத் திருட ஆரம்பித்தான். 

ஒருநான் முதலாளி இருவரிடத்திலும் தனித்தனியாக நான்கணா கொடுத்துக் காய்கறி வாங்கி வரும்படி அனுப்பினார். கண்ணன் நான்கணாவுக்கும் வாங்கி வந்து கொடுத்தான். காளி மூன்றணாவுக்கு வாங்கிவந்து கொடுத்துவிட்டு, மீதி ஓர் அணாவைத் தான் எடுத்துக் கொண்டான். முதலாளி எப்படியோ கண்டு பிடித்துவிட்டார். 

மற்றொரு நாள் முதலாளி கண்ணன் எதிரில் ஒரு ரூபாவைப் போட்டுவிட்டுத் தெரியாதவர் போல் இருந்தார். உடனே கண்ணன் எடுத்துக் கொடுத்து விட்டான். அதே போல் காளி எதிரிலும் ஒரு ரூபாவைப் போட்டார். அதைக் காளி அமுக்கிக் கொண்டான். உடனே முதலாளி காளியை அடித்துக் கடையை விட்டுத் துரத்திவிட்டார். கண்ணன் நல்ல குணத்தைக் கைவிடாமல் இருந்ததால் அவனுக்கு அதிக சம்பளம் கொடுத்துப் பாதுகாத்து வந்தார். (ஆகையால்) 

எப்போதும் நல்ல குணத்தைக் கைவிடலாகாது.

எழுதியவர்: மயிலம் தமிழ்க்கல்லூரியில் விரிவுரையாளரா யிருந்த வித்துவான் சுந்தர சண்முகனார்.

– ஆத்திசூடி அமிழ்தம், குழந்தைக் கதை மலர், முதல் பதிப்பு: 30-8-1948, பைந்தமிழ்ப் பதிப்பகம், புதுச்சேரி. 

சுந்தர சண்முகனார் பேராசிரியர் சுந்தர சண்முகனார் (ஜூலை 13, 1922 – அக்டோபர் 30, 1997) புதுச்சேரியில் வாழ்ந்து மறைந்த ஒரு மிகச்சிறந்த தமிழ்த்தேசிய அறிஞர், ஆராய்ச்சியாளர், கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். தமிழில் முறையியல் (Methodology) அடிப்படையில் புதிய ஆய்வுத் துறைகளை உருவாக்கிய முன்னோடியாக அவர் கருதப்படுகிறார். “சுந்தர சண்முகனார் புதுவையில் வாழ்ந்து மறைந்த தமிழ்நாட்டுத் தமிழறிஞர்; கவிஞர்; எழுத்தாளர்; தமிழில் புதிய துறைகளில் ஆய்வினை மேற்கொண்ட அறிஞர்.”, என தமிழ்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *