எனது சிறுகதைகள் மங்கையர்மலர், ஆனந்த விகடன், அமெரிக்காவின் தென்றல், கலைமகளில் வெளிவருகின்றன.
சிங்கப்பூரிலிருந்து வெளியாகும் தமிழ்முரசில் எனது படைப்புக்கள் வெளிவந்துள்ளன.. மேலும், சிங்கப்பூர் தேசியக் கலைக்கழகத்தார் நடத்தும் தங்க முனை விருதுப் போட்டியில், எனது கவிதைக்கு 2011-ஆம் ஆண்டு முதல்பரிசு கிடைத்தது. கெளரவத்துக்குரிய அப்பரிசை சிங்கப்பூரின் அமைச்சரிடமிருந்து பெற்றுக் கொண்டேன். (சிங்கப்பூர் வெள்ளி பத்தாயிரம்).
அது தவிரவும், சிங்கப்பூர் தமிழ்ச் சங்கம், சிங்கப்பூர் தமிழ் ஆசிரியர் சங்கம் போன்றவை நடத்திய கவிதைப் போட்டிகளிலும் முதல் பரிசு வென்றுள்ளேன்.
இந்தியாவின் பிரபல இதழான Womens’ Era / March 2013 – இல் Miles to Go என்ற எனது கதை வெளியாகியுள்ளது.
பானுரவி/சிங்கப்பூர்
contact@banooravi.com