இராஜகோபால் என்ற இயற்பெயருடைய செம்பியன் செல்வன் (சனவரி 1, 1943 – மே 20, 2005) ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். பேராதனைப் பல்கலைக் கழக புவியியல் சிறப்புப்பட்டதாரியான இவர் விவேகி சஞ்சிகையின் இணையாசிரியராக இருந்தவர்.
செம்பியன் செல்வன் யாழ்ப்பாணம், தின்னவேலியில் பிறந்தவர். இவருக்கு சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தார். தாய்வழிப் பாட்டி நாகமுத்து இவரையும் இவரது தமையன் கணேசபிள்ளையையும் வளர்ந்தார். நாவல், சிறுகதை, நாடகம், உருவகம், குறுங்கதை, திரைப்படம், சஞ்சிகை என இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளிலும் தனது ஆளுமையினைப் பதித்தவர் செம்பியன் செல்வன். தனது தனிப்பட்ட வாழ்வில் இவர் ஆசிரியராக, அதிபராகக் கல்விப் பணிப்பாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.


விவேகி, புவியியல், நுண்ணறிவு ஆகிய சஞ்சிகைகளின் இணை ஆசிரியராகவும், அமிர்தகங்கை, கலைஞானம் ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியராகவும் கடமையாற்றியவர். ஈழத்துப் படைப்பாளிகளைப் பற்றிய ‘ஈழத்துச் சிறுகதை மணிகள்’ என்னும் நூலினை எழுதியுள்ளார். இவரது ‘சர்ப்பவியூகம்’ சிறுகதைத்தொகுதி இலங்கை சாஹித்யவிருது பெற்றது. கலைக்கழகம் நடத்திய நாடகப்போட்டியில் தொடர்ந்து 4 வருடங்கள் முதல் பரிசு பெற்றவர். யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ஈழநாடு பத்திரிகை தனது வெள்ளிவிழா பொருட்டு நடாத்திய சிறுகதைப் போட்டியில் இவரது சிறுகதை இரண்டாவது பரிசினைப் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
செங்கை ஆழியான் எழுதிய வாடைக் காற்று திரைப்படமான பொழுது, அதற்கான திரைக்கதை, வசனங்களை எழுதியவர்.
இவரது நூல்கள்
- சர்ப்பவியூகம் – சிறுகதைத்தொகுதி
- அமைதியின் இறகுகள் (சிறுகதைகள்)
- குறுங்கதைகள் நூறு (குறுங்கதைகள்)
- கானகத்தின் கானம் – நாவல்
- நெருப்பு மல்லிகை (நாவல்)
- விடியலைத் தேடும் வெண்புறாக்கள் (நாவல்)
- மூன்று முழு நிலவுகள் (நாடகம்)
- ஈழத்துச் சிறுகதை மணிகள் (விமர்சனம்)
- நாணலின் கீதை (தத்துவம்)
‘செம்பியன் செல்வன்’ ‘எழுத்துத் துறையில் புகுந்த வெள்ளிவிழா ஆண்டைச் சிறப்பிக்குமுகமாக இவரின் குறுங்கதை: நூறு என்னும் இந்நூல் வெளிவருகின்றது.
கடந்தகாலங்களில் சிறுகதை நாவல், கவிதை, கட்டுரை வீமர்சனம், நாடகம்- திரைக் கதை வசனம் ஆன்மீகம் எனப் பலதுறைக் கடலவடிவங் லெல்லாம் தனது முத்திரையைப் பொறித்து வைத்திருப்பவர்.
சிந்தனையாளர்; சிறந்த பேச்சாளர்; பத்திரிகையாளர்,
‘இலக்கியம் மட்டுமல்லாது இலக்கியக் கருவியான மொழியும் வளர வேண்டும். புதுப்புதுச் சொல்லாக்கங்களையும் ஊரநடை அழகுகளையும் பெற்றோங்கீ மிளிரவேண்டும் என எண்ணுபவர். இறுக்கமாகவும், சுருக்கமாகவும் கருத்துக்களைக் கலைவடிவங்களாக் வாசகர்களைத் தீர்க்க மாகச் சிந்திக்கச் செய்வதில் வல்லவர். இப் பண்புகளை இக்கதைகளில் காணலாம்.
அமைதியின் இறகுகள் (சிறுகதைக்கோவை) மூன்று முழு நிலவுகள் (இலங்கை இலக்கியப் பேரவையின் சிறந்த நாடகப் பரிசு) ஈழத்துச் சிறுகதை மணிகள் (விமர்சனம்) நெருப்பு மல்லிகை (வீரகேசரியினரின் அதிசிறந்த பிரதேசப் பரிசு நாவல்) நாணலின் கீதை (ஆன்பிகம்) விடியலைத் தேடும் வெண்புற (ஈழமுரசு வெளியீடு நாவல்) – இவரது சில நூல்கள்.
இவரின் பல நாடகங்கள் இலங்கைக் கலைக்கழகம், இலங்கைக் கலாச்சாரப் பேரவை, ஈழநாடு பத்திரிகைகளில் முதல் பரிசிட்டியவை.
திரைப்படச் சுவடி-திரைப்படக் கூட்டுத்தாபனத்தினரால் A -தரம் பெற்றது.
இவர் யாழ் – இலக்கிய வட்டம் / இலங்கை இலக்கியப் பேரவையின் தலைவர், ‘அமிர்தகங்கை’ கெளரவ ஆசிரியர்;
வி. பி. – வெளியீட்டினருக்காக.
– குறுங்கதை : நூறு, முதற் பதிப்பு: டிசம்பர் 1986, நான் வெளியீடு, யாழ்ப்பாணம்.