அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி

 

ஆசிரியர் குறிப்பு:

கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார்.

அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார்.

மனைவி டிப்ளமோ டெக்ஸ்டைல்ஸ் படித்ததால் சொந்தமாக துணிக்கடை வைத்து நடத்துகிறார். மகன் பொறியியல் படித்து விட்டு தற்போது வேலையில் இருக்கிறார்.மகள் மருத்துவப்படிப்பு இறுதியாண்டு படித்து வருகிறார்.

சிறுவயது முதல் எழுத்தார்வம் உள்ளவராகவும்,தினமும் புத்தகம் வாசிப்பவராகவும் இருந்துள்ளார்.
1988 முதல் 1998 வரை சிறுகதைகள்,கவிதைகள்,கட்டுரைகள்,துணுக்குகள்,கேள்வி-பதில் என பிரபல வார,மாத இதழ்களில் எழுதி வந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு 2022 முதல் தமது எழுத்துப்பணியை துரிதப்படுத்தி,பல புத்தகங்களை வெளியிட்டு வருகிறார்.

ஜோதிட ஆராய்ச்சி கட்டுரைகளை பல ஜோதிட இதழ்களில் எழுதியதோடு தொலைக்காட்சி,வானொலியில் ராசிபலன்களை வழங்கியவர்,தற்போது தனது பெயரிலேயே யூடியூப் சேனல் ஆரம்பித்து ராசிபலன்களை கூறி வருகிறார். தவிர பக்தி பாடல்களை எழுதி இசையுடன் வெளியிட்டு வருகிறார்.

வெளிவந்துள்ள இவரது நூல்கள்:

நலியும் நவீனம்-சிறுகதைகள்-2022
மனப்புதையல்-தத்துவங்கள்-2022
மூக்கணாங்கயிறு-தத்துவங்கள்-2022
காலப்பிறையகம்-அனுபவ சாஸ்திரம்-2022
அகப்பிரகணம்-தத்துவங்கள்-2022
வீதியில் கிடந்த வீணை-சிறுகதைகள்-2022

அலுவலக முகவரி:

அன்னூர் K.R.வேலுச்சாமி,
3/429- ஸ்ரீ வேலன் காம்ப்ளக்ஸ்,
கிருஷ்ணா கார்டன்,அல்லிக்காரன்பாளையம்,
NM மருத்துவமனை அருகில்,
கோவை ரோடு,அன்னூர்-641653,
கோவை மாவட்டம், தமிழ்நாடு.
செல்:9842236995
மின்னஞ்சல்: srivelanastro@gmail.com.
YouTube channel name: Annur KR Velusamy.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *