இடியும் மின்னலும்
கதையாசிரியர்: ச.வே.பஞ்சாட்சரம்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: October 11, 2026
பார்வையிட்டோர்: 15
(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மண்மங்கையின் மார்பகங்களான மலைமுடிகள் வரு ணன் நெஞ்சாம் கார் மேகங்களின் நடுவில் புதைந்து கிடந்து கிளுகிளுக்கும் மழைக்காலம்! மேனியில் பட்டுத் தழுவும் குளிர்வாடையில் உணர்ச்சிகள் நெக்கி நெகிழ்ந்து காதல் நினைவுகள் குமிழியிட, ஏமாந்த நெஞ்சம் இடியும் மின்னலுமாகத் துயர்பட கண்ணீர் மழையாகப் பொழியக் கட்டிலில் கிடந்து புரண்டாள் மேரி!
அவன் எப்படி எல்லாம் அவளோடு அன்பாகப் பேசி யிருக்கிறான். “மேரி! உன் குரலுக்கேன்டி இத்தனை இனிமை?” என்று கண்கள் கனிவான். அவள் முகத்தைக் கூர்ந்து பார்த்து “இதோ கன்னம் சிவக்கிறது. ஆகா! கண் சிவக்கிறது. சிரிக்குங் கன்னம் குழிவிழுகிறது! ஐயை யோ! மயிர்க்கூச்செறிகிறது! இதோ நீலமேனியில் இன்ப நடுக்கம்” என்று கொஞ்சிக் குழைந்து மகிழ்வான்.
“ஏன்டி கள்ளி இத்தனை அழகு?” என்று உருகுவான். அவள் எச்சித் தேனீரைப் பறித்துப் பருகி “என்ன இனிமை!” என்பான். அவள் கைக்குட்டையைப் பிடுங்கி முத்தமிடுவாள். எத்தனை இன்பமான நிகழ்ச்சிகள். அவள்மீது பைத்தியமாக இருந்த பஸ்தியானை அவன் பெற்றார் அவளிடமிருந்து பிரித்துக் கொண்டு இந்தியா சென்றுவிட்டார்கள்.
“என் செல்லக்கிளியை எப்படியும் மூன்று ஆண்டிற்குள் வந்து அழைத்துச் செல்வேன்!” என்று கண்ணீர் வடித்துச் சென்றவனை எண்ணி எண்ணித் துடித்துக் கொண்டிருந்தாள் அவள். அவன் அவளுடன், எப்படி வாழ்வது, பிறக்கும் பிள்ளைகளை எப்படி வளர்ப்பது என்று கலந்தாலோ சித்த சந்தர்ப்பங்களை, அவள் கண்ணீரை அவன் துடைத்து விட்டதும் அவள் தலையை அன்போடு கோதி விட்டதுமான நிகழ்ச்சிகளை நினைக்கும்போது அவனது அன்பளிப்பான ஆயிரமாயிரம் பொருட்களைப் பார்க்கும்போது நெஞ்சில் ஏக்க இருள்சூழ்ந்து இடியும் மின்னலுமாகக் கண்ணீர் மழை பொழியலாயிற்று.
மாதமொரு கடிதம் அவன் தூதாக வந்து மேரியை தலையணைக்கு முத்தமிடவும், பிச்சைக் காரரைத்தேடி உணவு அளிக்கவும் ஆறுநேரம் தேவனுக்கு நன்றி செலுத் தவும், தேவாலயம் செல்லவும் அடிக்கடி கண்ணாடியின் முன் னால் நின்று அழகுபார்க்கவும் தூண்டும்.
ஆனால் இன்று வந்த பஸ்தியானின் இறுதிக் கடிதமோ அவளைக் கிணற்றிலோ ஆற்றிலோ விழத்தூண்டுவதாக, உயிர் உள்ளவரை அவள் நெஞ்சில் இடியும் மின்னலும் ஓங்காரமிட வைப்பதாக அமைந்துவிட்டதே! ஆம் தனது பெற்றார் இருவர் தற்கொலையைத் தடுப்பதற்காக அவர்கள் காட்டிய பெண்ணின் கழுத்தில் மாலைசூட்டிக் கொண்டு அழு தழுது மேரிக்குக் கடிதம் எழுதியிருந்தான் அவன்.
– சின்னஞ்சிறு கதைகள் (முதலாம் தொகுதி), முதற் பதிப்பு: 1969, தமிழருவிப்பதிப்பகம், சுன்னாகம்.
தொடர்புள்ள சிறுகதைகள்
தானியங்கி பண இயந்திரம்
ரா.நீலமேகம்
October 18, 2026
ரத்தம் ஒரே நிறம்
காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன்
October 18, 2026
அமைதியின் குரல்
புஷ்பராஜ் கந்தசாமி
October 18, 2026