வஞ்சகம் பேசேல்
கதையாசிரியர்: சுந்தர சண்முகனார்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: July 18, 2026
பார்வையிட்டோர்: 7
(1948ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வஞ்சகம் – பிறரை ஏமாற்றும் வஞ்சகமான பேச்சுக்களை, பேசேல் – நீ பேசாதே.
ஒரு காட்டில் ஒரு யானை கடை வைத்திருந்தது. அக்கடையில் ஒரு நரி சம்பளத்திற்கு வேலை பார்த்து வந்தது. நரி பொல்லாத வஞ்சகம் உடையது. கடைக்கு வருபவரிடம், நான்கணா சாமானைக் காட்டி ஐந்தணு என்று வஞ்சகமாக விலை சொல்லி விற்கும். அதிகமாக வந்த ஓர் அணாவை யானைக்கு தெரியாமல் தான் எடுத்துக் கொள்ளும்.
யானைக்குப் பலர் கடன் கொடுக்க வேண்டிய திருந்தது, அவர்களிடம் நரி சென்றது. யானை பணம் வாங்கி வரச் சொன்னதாக வஞ்சகம் பேசிப் பணத்தை வாங்கிக் கொண்டது. எல்லாவற்றையும் சுருட்டிக்கொண்டு வெளியூருக்கும் புறப்பட்டது. வண்டி ஏறும்போன இடத்தில் ஒரு திருடன் நரியைக் கண்டான். தந்திரமாகப் பேசிப் பணத்தை யெல்லாம் பறித்துக் கொண்டான்.
நரி ஏமாந்து போயிற்று. நாம் வருந்துவதுபோலத் தானே பிறரும் வருந்துவார்கள் என்று நரி எண்ணியது. பழையபடியாக யானையின் கடைக்குச் சென்றது. யானை கடையை விட்டுத் துரத்திவிட்டது. பணம் கொடுத்தவர்கள் எல்லோரும் நரியை நன்றாக உதைத்தார்கள். சிறையில் கொண்டு போய் அடைத்து விட்டார்கள். தனது வஞ்சகத்தை எண்ணி எண்ணி வருந்தியது. (ஆகையால்)
எவரிடமும் வஞ்சகமாகப் பேசக்கூடாது.
எழுதியவர்: மயிலம் தமிழ்க்கல்லூரியில் விரிவுரையாளரா யிருந்த வித்துவான் சுந்தர சண்முகனார்.
– ஆத்திசூடி அமிழ்தம், குழந்தைக் கதை மலர், முதல் பதிப்பு: 30-8-1948, பைந்தமிழ்ப் பதிப்பகம், புதுச்சேரி.
![]() |
பேராசிரியர் சுந்தர சண்முகனார் (ஜூலை 13, 1922 – அக்டோபர் 30, 1997) புதுச்சேரியில் வாழ்ந்து மறைந்த ஒரு மிகச்சிறந்த தமிழ்த்தேசிய அறிஞர், ஆராய்ச்சியாளர், கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். தமிழில் முறையியல் (Methodology) அடிப்படையில் புதிய ஆய்வுத் துறைகளை உருவாக்கிய முன்னோடியாக அவர் கருதப்படுகிறார். “சுந்தர சண்முகனார் புதுவையில் வாழ்ந்து மறைந்த தமிழ்நாட்டுத் தமிழறிஞர்; கவிஞர்; எழுத்தாளர்; தமிழில் புதிய துறைகளில் ஆய்வினை மேற்கொண்ட அறிஞர்.”, என தமிழ்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
அறம் செய விரும்பு
சுந்தர சண்முகனார்
July 18, 2026
ஆறுவது சினம்
சுந்தர சண்முகனார்
July 18, 2026
ஈவது விலக்கேல்
சுந்தர சண்முகனார்
July 18, 2026
