ரகுராமன் சீனிவாசன்

கதைத்தொகுப்பு: கருத்து
இணைய வெளியீடு: November 18, 2026
பார்வைகள்: 48

ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம்! தங்களின் பெருமிதமான அறிவிப்பு பார்த்து மகிழ்ந்தேன் ! வாழ்த்துக்கள்!கதைகள் எழுதுவது, வாசிப்பது என்பது வெறும் பொழுது போக்கு அல்ல! இது மனிதர்களை மேம்படுத்தும் ஒரு வாழ்வியல்! சில நூறு கதைகள் வாசிக்கும் ஒருவன் ஒரு நூற்றாண்டை கூட கடந்து வாழ முடியும்! மன ரீதியாகா! அனுபவங்களால் பெற இயலாத ஒன்றை கதைகளாலும் , கதை மாந்தர்களாலும் பெற முடியும்! பெற்றோர்களும், கல்வி நிறுவனங்களும் நவீன படைப்பிலக்கியத்தை அடுத்த தலைமுறைக்கு முறையாக இங்கு கொண்டு செல்லப்படாததே பல பெரும் துயரங்களுக்கு காரணமாக அமைந்து விட்டது!. சிறுகதைகள்.காம் இது வெறும் இணைய தளம் அல்ல! ஆரோக்கியமான ஒரு நல்ல சமூகத்தை உருவாக்கும் ஒரு அற்புதமான இயக்கம்!

தலையங்கங்கள், கடிதங்கள்..மூலம் வாசகர்களுடன் எப்போதும் தொடர்பில் இருங்கள்! இது வாசகனுக்கும் இணைய தளத்திற்கும் இடையே மகத்தான உறவை உருவாக்க உதவும்! தங்களுக்கு மீண்டும் என் நன்றி , வாழ்த்துக்கள்! அன்புடன் ரகுராமன் சீனிவாசன்.

ரகுராமன் சீனிவாசன்