கதையாசிரியர் தொகுப்பு: ரஞ்சகுமார்

8 கதைகள் கிடைத்துள்ளன.

அரசி

 

 “……பசிக்குப் பிச்கை கேட்க யாரிடமும் என்னேரமும் முடிகிறதா? தனக்கென ஒரு வீடு, தனக்கென்று ஒரு மனைவி, தன் பலவீனத்தை உணர்ந்ததில்தான் மனைவி என்கிற பாத்தியம் கொண்டாட இடமேற்படுகிறது ஆண்களுக்கு பெண்ணோ வெனில் தன் பலத்தை மறக்க, மறைக்கத்தான் மனைவியாகிறாள். ஒன்றிலும் கட்டுப்படாது தனியே நின்று உற்றுப் பார்ப்பதே பெண்மையின் பயங்கரக் கருவிழிகள் தான்….” – மெளனி நேற்றிரவு தூக்கமில்லை. சுதா விரைவில் போகப்போகிறாள்; அதைவிட, கிணற்றைப் பழுது பார்க்கும் வேலைகளும் நடந்து கெண்டிருக்கின்றன. தொப்பிக் கட்டு ஆங்காங்கே


காலம் உனக்கொரு பாட்டெழுதும்

 

 வெகுநாட்களுக்குப் பிறகு இன்று குளியல். இன்றையப் போத்தின் உதயகாலமே புதிய தோற்றத்துடன் எழுந்தது. மிகவும் வித்தியாசமாக, ஒரு சித்திரை மாதத்தின் கதகதப்பான விடியலாக இன்றிச் சற்றே குளிரூட்டியபடி, ஒவ்வொரு மயிர்க்காலிலும் நுழைந்து கிச்சு கிச்சு மூட்டுகிற குளிர். இளவெயிலில் பசைபரவிய பெருமிலைகளை விரித்துக் காட்டியபடி, எங்கு பார்த்தாலும் புகையிலைத் தோட்டங்கள் தெரிந்தன. கனவேகமாக நீரை உமிழ்ந்து கொண்டிருந்தன வாட்டர் பம்ப்புகள். புகையிலையின் இனிய மயக்கந்தரும் நெடியுடன் சேர்ந்து மண்ணென்ணெய் எரிந்துபோகிற புகை கதம்பமாய் மணத்தது. அருளுக்குத்தான் முதலில்


சுருக்கும் ஊஞ்சலும்

 

 வெயில் கொளுத்துகிறது. ஆனிமாதத்து வெயில். மூச்சு விடவே சிரமமாக இருக்கிறது. இங்கே, கல்லாப் பெட்டியில் இருந்துகொண்டு பார்த்தால் கிட்டத்தட்ட கால்மைல் தூரத்துக்கு முன்னால் ‘கண்டிவீதி’ விரிகிறது. வீதியின் இடது ஓடத்தில், கடை வாசலிலிருந்து சுமார் நூறுஅடி தூரம் தள்ளி இந்த ஊரின் பெயரைத்தாங்கிய சிமெந்துப் பலகை ஒன்று வெள்ளையாகத் தெரிகிறது. அதன்மேல் இந்த வெளியிலிலும் இரண்டு காக்கைகள் உட்கார்ந்து கொண்டு கரைகின்றன. அந்தக் காக்கைகளின் சத்தம் சன்னமாக, காதுக்கு சிரமந்தருவதாக இருக்கிறது. சுறுசுறுப்பாக, அங்குமிங்கும் பறந்து திரிந்து,


மோகவாசல்

 

 தேவர்கள் இறைவனிடம் ஓடினார்கள். விசுவாமித்தினின் தவவலிமையினால், அவர்களது தேஜஸ் குன்றிக் கொண்டே போயிற்று. இறைவனின் இதழ்களில் குமிண்சிரிப்பு. கண்களில் விஷக்கிறக்கம். “தேவ தேவா!…எமைக் காத்தருள்க…” என தேவர்கள் இறைவனிடம் இறைஞ்சிய ஒலியில் சப்த சமுத்திரங்களின் குமுறல்களும் தோற்று அடங்கின. இறைவன் மதனை அழைத்துவர பூதகனங்களை ஏவினான். கரும்பு வில்லும் பஞ்சமலர்களும் மணம் பரப்ப மதனம், அவனுடன் குளிந்த சிரத்துடன் ரதியும் வந்தனர். இறைவன் இதழ்களில் குமிண்சிரிப்பு மேலும் சற்றே விரிந்தது. ரதி நடுங்கினாள். தன் நாதனுக்காக ஏங்கினாள்.


கோசலை

 

 “குலம்!….மாடுகளுக்குக் கொஞ்சம் வைக்கல் இழுத்துப்போடு மேனே” குலம் மல்லாந்து படுத்துக் கிடந்தான். ஓலைப்பாயில் தலையணைகூட இன்றித்தான் இவன் படுப்பான். முதுகு வலிக்குமா, இல்லையா? இவன் ஏன் ஒரு காட்டுப் பிறவி மாதிரி இருக்கிறான்! அம்மா திண்ணைக் குந்தில் கால் நீட்டி உட்கார்ந்தவாறே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தான். “கொஞ்சம் வைக்கல் இழுத்துப் போடன் அப்பன்….மாடுகள் கத்துதெல்லவே!……” குலம் நெற்றியில் முழங்கைகளை அழுந்தப் போட்டவாறு, கால்களை ஆட்டியவாறு படுத்துக் கிடந்தான். அம்மா இவனையே பார்த்துக் கொண்டிருந்தான். மார்பில் உரோமங்கள்


கோளறுபதிகம்

 

 பார்வையாளர்களை அனுமதிக்கும் நேரம் முடிவடைந்து விட்டது. அனேகமாக எல்லோரும் வெளியேறி விட்டார்கள். மாலை மங்க ஆரம்பிக்கும் போதுதான் நான் உள்ளே நுழைந்தேன். ஆஸ்பத்திரிகளுக்கே உரிய அந்த நெடி கனமாக வீசிற்று. கூடவே ஈக்களும் திரிந்தன. நான் OPD க்குள் நுழையும் தருவாயில் எனக்குப் பின்னே ஒரு கனமான வாகனம் உறுமியபடி வந்து நின்றது. தன்னிச்சையாகத் திரும்பிப் பார்த்தேன். ஒரு கை வெளியே நீட்டிக் கொண்டிருந்தது. மணிக்கட்டுக்கு ஓரங்குலம் மேலே ஒரு எலுமிச்சம்பழத்தைப் புதைத்து வைக்கலாம் எனத்தோன்றுபடி ஒரு


கபரக்கொய்யாக்கள்

 

 சாதாரணமான எல்லா ஊர்களையும் போலவே இங்கும் ஓர் அரசமரம். நடந்து போகிறவர்களின் தலைகளை வருடிக்கொடுப்பதைப்போல, கிளைகளைத் தாழ்ந்து தொங்கவிட்டபடி. கீழே அழகிய தூய பீடமொன்றில் கண்மூடி ஏதோ அதிசய உலகத்தை நிஷ்டையில் தா¢சிக்கும் புத்தனின் சிலை. ஒரு பள்ளிக்கூடம், ஏதோவொரு ‘பாலிக மஹா வித்தியாலய’ என்று பெயர். பையன்களும்கூடப் போனார்கள்! சிறு பஸ் நிலையத்திலிருந்து கடைத்தெரு தொடங்குகிறது. அங்கிருந்து ‘சறுக்கீஸ்’ விட்டால் அந்தத்திலிருக்கிற கருவாட்டுக் கடையில் முடிவடைகிறமாதிரி லாவகம் கொண்டு வளைந்து போகிற தெரு. பளபள வென்றிருந்தது.


நவகண்டம்

 

 நான் உங்களுக்கு ஒரு காதல் கதையைச் சொல்லப்போகிறேன். காதலும் வீரமும் செறிந்தது பழந்தமிழர் வாழ்க்கை என்ற பெருமை எங்களுக்கு உண்டு. நேற்றுவரை வாழ்ந்து வீழ்ந்தவர்கள் எல்லோரும் என்னைப் பொறுத்தவரை பழந்தமிழர்களே. இந்தக் கதையின் வீரம் மிக்க நாயகன் கொல்லப்பட்டு ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. எனவே அவனும் பழந்தமிழன் என்பதை நீங்கள் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். ‘முப்பது ஆண்டுகள்’ என்னும் இந்தக் கணக்கு மிக முக்கியமானது. முப்பது ஆண்டுகள் ஏறத்தாழ ஒரு தலைமுறைக் காலம் எனப்படுகிறது. தற்காலத்