கதையாசிரியர் தொகுப்பு: கே.பி.பத்மநாபன்

2 கதைகள் கிடைத்துள்ளன.

ஊற்று வற்றாத மண்

 

 பெங்களூர் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் கோவை ரயிலில் தன் பெற்றோருடன் ஏறி இருக்கையில் அமர்ந்த ராஜேஷ், தனது எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தவரைப் பார்த்தான். மெஜஸ்டிக் ரயில் நிலையத்திலேயே ஏறி அமர்ந்திருப்பார் போலும். தழையத் தழைய வேட்டி கட்டிய, ஏறக்குறைய முப்பது வயதுக்கு மேற்பட்ட இளைஞர், எதிர் சீட்டில் சன்னலோரத்தில் உட்கார்ந்திருந்தார். கையில் ஒரு புத்தகம், மூன்றுபேர் அமர்வதற்கான அந்த இருக்கையில் அவர் மட்டுமே இருந்தார். மற்ற இருக்கைகளில் யாரேனும் ஓசூரில் ஏறலாம் அல்லது காலியாகவே இருக்கவும் சாத்தியமென்பதால்,


new.திருவிளையாடல்.com

 

 நாரதர் ஒரு கம்ப்யூட்டருடன் கைலாயத்துக்குள் நுழைந்தார். வழக்கம் போல கணபதிக்கும் முருகனுக்கும் அது யாருக்கு என்று சண்டை. “என்ன நாரதா, நீ வந்த நோக்கம் நிறைவேறிவிட்டதல்லவா?” என்று சிவன் கேட்க, “நாராயணா… அபசாரம்! அபசாரம்!” என்று நாரதர் பதற, “வேறு வழியில்லை சுவாமி, வழக்கம் போல் நீங்களே ஒரு போட்டி வைத்து, அந்த கம்ப்யூட்டர் யாருக்கு என்று முடிவு செய்யுங்கள்” என்றாள் பார்வதி. அதற்குள் முருகன் ‘ஓ’வென்று அழத் தொடங்கிவிட்டான். “கணபதி மவுஸை எடுத்துக்கொண்டு ஓடி விட்டான்.