கதைத்தொகுப்பு:மல்லிகை

ஈழத்து இலக்கியச் சிற்றிதழ் வரலாற்றில் மல்லிகை எனும் சிற்றிதழ் முக்கியமானது. 1966 ஓகஸ்ட் மாதம் முதலாக, 47 ஆண்டுகள் வெளிவந்து, இலக்கியச் சாதனை நிகழ்த்திய இந்த மாதாந்த இதழின் ஆசிரியர், எழுத்தாளர் டொமினிக் ஜீவா. ஆரம்பத்தில், யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த இவ் இதழ், பின்னர் கொழும்பிலிருந்து வெளியாகியது.

சுதந்திர இலங்கையில் நிகழ்ந்த அரசியல் நிலவரங்களைப் பல்வேறு படைப்புகளூடாக வெளிப்படுத்தியதுடன், இலங்கைத் தமிழ் இலக்கியத்தைத் தமிழக எழுத்துலகிற்கு அறிமுகப்படுத்தும் பணியையும் மல்லிகை மேற்கொண்டது. இலங்கைத் தமிழ் எழுத்தாளர் பலரும் மல்லிகையில் எழுதினர். தமிழகத்தின் முக்கிய எழுத்தாளர்கள் பலரும் மல்லிகையில் எழுதியுள்ளனர்.

இலங்கையின் முற்போக்கு இலக்கிய முக்கியஸ்தர்கள் மல்லிகைக்கூடாகவே நன்கறியப்பட்டனர். அவர்களின் எழுத்துக்களை அறிவதற்கு மல்லிகை பயன்படும். இன்னும், கருத்துநிலை ரீதியில் மாறுபட்ட எழுத்தாளர்கள், விமர்சகர்கள், ஆய்வாளர்கள் முதலியோரின் எழுத்துக்களையும் மல்லிகையில் காணலாம். பிற்காலத்தில் வரலாற்றில் நன்கறியப்படும் பலரும் மல்லிகையூடாகவே அறிமுகம் பெற்றனர். மல்லிகையின் பெரும்பாலான இதழ்களின் அட்டைப்படங்கள் இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், விமர்சகர்கள் முதலியோரில் ஒருவரின் ஒளிப்படத்தைத் தாங்கியிருந்ததுடன், அவர் பற்றிய அறிமுகம் கட்டுரையாகவும் இதழினுள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.. கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், நேர்காணல்கள், இலக்கியச் சர்ச்சைகள், நூல் அறிமுகங்கள், வாசகர் கடிதங்கள் முதலிய பலவும் மல்லிகையில் வெளியாகின. மேலைநாட்டு இலக்கிய மேதைகளின் படைப்புகள் பலவும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு மல்லிகையில் வெளியாகின. தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள எழுத்தாளர்களில் பெரும்பாலானோரின் படைப்புகள் மல்லிகையில் வெளியாகின. மல்லிகையில் வெளிவந்த இவர்களது படைப்புகள் பலவும் பின்னர் மல்லிகைப் பந்தல் வெளீயீடாக வெளிவந்தன. ஒவ்வொரு வருடமும் தைமாத இதழ் ஆண்டுச் சிறப்பிதழாக வெளிவந்தது.

தமிழ் இலக்கியம் என்ற பெருவெளியில், இலங்கைத் தமிழ் இலக்கியம் என்ற அடையாளத்தைத் தக்கவைத்ததிலும், விரிவாக்கி வளர்த்ததிலும், நவீன இலக்கியத்தைச் சனநாயக மயப்படுத்தியதிலும், பிரதேச இலக்கியத்தளத்திற்கு முதன்மையளித்ததிலும் தமிழ் உலகில் மிக நீண்டகாலம் வெளிவந்து பணியாற்றிய ஒரே இதழ் என்றவகையிலும் மல்லிகைக்கு முக்கிய பங்குண்டு. 04.07.2001 இல், இலங்கைப் பாராளுமன்றத்தின் ஹன்சாட்டில், பாராட்டுடன் கூடிய பதிவைப் பெற்றது.

191 கதைகள் கிடைத்துள்ளன.

சுவர்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2025
பார்வையிட்டோர்: 3,229

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மெல்லிய நீலநிறப் பூச்சிடப்பட்ட அறைச்சுவர் தண்ணெண்ற...

முடிவில் தொடங்கும் கதைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2025
பார்வையிட்டோர்: 3,183

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்(2003ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கூடத்துச் சுவரில் மாட்டப்பட்டிருந்த அந்தப் பெரிய...

உணர்வுகள் கட்டுடைத்தால் …?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 5, 2025
பார்வையிட்டோர்: 3,478

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) யோகநாதன் விட்டெறிந்த ஐம்பது சத நாணயம்...

மிசின் பெட்டி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 5, 2025
பார்வையிட்டோர்: 3,404

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்(1982ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வீட்டின் இடது பக்கச் சுவரோடு செழித்து...

புதியவர்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 12, 2025
பார்வையிட்டோர்: 3,392

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அது பழைய நாற்சார் வீடு. தொண்ணூற்றைந்து...

சபலம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 12, 2025
பார்வையிட்டோர்: 2,396

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்(2002ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ‘ஒரு முறை வீட்டுப் பக்கம் வந்து...

துணை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 12, 2025
பார்வையிட்டோர்: 2,324

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்(2002ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அந்தப் பசெஞ்சர் தாமதமாகப் புறப்பட்டது. இரவு...

பழக்கம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 12, 2025
பார்வையிட்டோர்: 2,023

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) எழுபதுகளில் அது நடந்தது. புத்தூரில் அவன்...

முடிவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 12, 2025
பார்வையிட்டோர்: 1,808

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அது அசைந்தது. அசைவில் இருந்து உயிர்...

ஒருவகை உறவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 12, 2025
பார்வையிட்டோர்: 1,940

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்(1983ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அந்த விமர்சனக் கூட்டத்திற்கு அவன் தாமதமாகவே...