பூரணி (இயற்பெயர்: சம்பூர்ணம்) என்பவர் 20-ஆம் நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க தமிழக எழுத்தாளர், கவிஞர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஆவார். நூறாண்டு காலம் வாழ்ந்த ஒரே தமிழ்ப் பெண் கவிஞர் என்ற சிறப்பைப் பெற்றவர்.
வாழ்க்கைக் குறிப்பு
- பிறப்பும் மறைவும். அக்டோபர் 17, 1913 அன்று பிறந்து, நவம்பர் 17, 2013 அன்று தனது 100-வது வயதில் மறைந்தார்.
- குடும்பப் பின்னணி. தமிழ்ப் பண்டிதரான ராமசாமி ஐயர் மற்றும் சீதாலட்சுமி அம்மாள் தம்பதியினருக்கு ஒன்பதாவது குழந்தையாகப் பிறந்தார். தந்தையின் தமிழ்ப் புலமையால் இளமையிலேயே இலக்கிய ஆர்வம் கொண்டிருந்தார்.
இலக்கியப் பங்களிப்புகள்
80 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து கவிதைகள், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளை எழுதி வந்தார். எளிய நடையில் சமகால நிகழ்வுகளையும் வாழ்வியல் உணர்வுகளையும் படைப்புகளாக்கியுள்ளார்.
முக்கிய நூல்கள்:
- பூரணி – கவிதைகள்
- பூரணி சிறுகதைகள்
- பூரணி நினைவலைகள்
- செவிவழிக் கதைகள்
மேலதிக விவரங்களுக்கு தமிழ் விக்கிப்பீடியா – பூரணி பக்கத்தைப் பார்க்கலாம்.
நூற்றாண்டு கண்ட பூரணி மறைவு – வல்லமை
பூரணி
எழுத்தாளரும் கவிஞருமான இவருக்கு இப்போது 100 வயது. 1913 அக்டோபர் 17ம் தேதி பிறந்தார். சாதாரண மத்தியதரக் குடும்பம். ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். 13 வயதில் திருமணம். பிறகு, இந்தி கற்றுக் கொண்டு அதில் ‘ராஷ்டிர பாஷா’ பரீட்சை எழுதி தேறினார். பலருக்கும் இந்தி கற்றுக் கொடுத்தார். இவரிடம் கற்றுக் கொண்ட மாணவிகளில் பிரபல மொழிபெயர்ப்பாளர் சரஸ்வதி ராம்நாத்தும் ஒருவர். கபீர் கவிதைகளையும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயியின் சில கவிதைகளையும், சமகால இந்திக் கவிஞர்கள் சிலரின் கவிதைகளையும் மொழிபெயர்த்திருக்கிறார்.
1937ல் பழநியில் இருந்து வெளி வந்த ‘சித்தன்’ பத்திரிகையிலும், கோவையிலிருந்து வெளி வந்த ‘பாரதஜோதி’ பத்திரிகையிலும் இவருடைய 5 சிறுகதைகள் வெளியாயின. 1929ல் ‘ஸ்வயம்வர கும்மி’ என்கிற தலைப்பில் கவிதைகளும், 1930–45க்கு இடைப்பட்ட காலத்தில் ‘நலங்குப் பாடல்கள்’ சிலவற்றையும் எழுதினார். ‘நலங்குப் பாடல்கள்’ தேசிய விடுதலை இயக்கம் சார்ந்த எழுச்சிப் பாடல்கள். மேலும் பள்ளிக் குழந்தைகளுக்காகவும், மாதர் சங்கத்துக்காகவும் சில பாடல்களை எழுதியிருக்கிறார். மரபுக் கவிதைகள், 2001-2005க்கு இடைப்பட்ட காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட புதுக் கவிதைகளையும் படைத்திருக்கிறார். இவர் புதுக் கவிதைகளை ‘புது மரபுக் கவிதைகள்’ என்றே குறிப்பிடுகிறார். சிறுகதை, கவிதை போன்ற புனைவுகள் தவிர நினைவலைகள், சுயவரலாறு, வேதாந்த விசாரங்கள் என்று நீள்கிற இவருடைய படைப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. திருப்பூர் ‘சக்தி இலக்கிய விருது’ உள்ளிட்ட விருதுகளையும் பல பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார். இவருடைய கவிதைகளும், சிறுகதைகளும், நினைவலைகளும் நூல்களாக வெளியாகி இருக்கின்றன. இப்போது சென்னையில் வசிக்கிறார். இவருடைய மகள் க்ருஷாங்கினியும் எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர். நவீன தமிழ்ப் பெண் கவிஞர்களில் முக்கியமான ஒருவர். வெகு யதார்த்தமான, அலட்டல் இல்லாத, மனதில் தோன்றி உண்மைகளை, அதன் இயல்பு சற்றும் குறையாமல் வெளிப்படுத்துபவை பூரணியின் எழுத்துகள். இவரின் இரு சிறுகதைகள் இங்கே…