நல்லானும் சின்னானும்
கதையாசிரியர்: புலவர் த.முருகேசன்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 10, 2026
பார்வையிட்டோர்: 82
(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

முன்னொரு காலத்தில் வள்ளியூர் என்னும் ஊரில் சின்னான், நல்லான் என இருவர் வாழ்ந்துவந்தனர். சின்னான் படிப்பில்லாதவன். நல்லான் ஓரளவு படித் தவன். சின்னான் இளமையிலிருந்தே தீய குணங்கள் உடையவனாயிருந்தான்; பிறரை ஏமாற்றியும் அச்சுறுத் தியும் வாழ்ந்துவந்தான்; உழைத்து முன்னேற வேண்டும் என்ற எண்ணமில்லாதவன்; பிறாது முயற் சியில் வந்த பொருளை ஏமாற்றித் தன் வாழ்க்கையை நடத்திவந்தான்.
நல்லான் இயல்பாகவே நல்ல குணம் உள்ளவன்; தன் உடல் வருந்தி உழைத்து அதனால் வந்த பொருளைக் கொண்டு வாழ்ந்துவந்தான்; குறைவாக வருவாய் வந்தபோதிலும் அதனைக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்தான்.
நல்லானும் சின்னானும் இளமை முதல் நண்பர்கள். நல்லானிடம் சின்னான் நல்லவன்போலவே நடித்து வந்தான்.
வள்ளியூரில் ஒருசமயம் கொடிய பஞ்சம் வந்தது மக்கள் உணவின்றி வருந்தினர். நல்லானுக்கு ஒரு வேலையும் கிடைக்கவில்லை. அவன் வறுமையால் துன்பமடைந்தான். வெளியூருக்குச் சென்று ஏதேனும் வேலை தேடிப் பிழைக்கலாம் என எண்ணினான்.
சின்னானும் மிகவும் துன்பமடைந்தான். ஒரு நாள் நல்லான் சின்னானைச் சந்தித்தான். அவனிடம். “நண்பா! நான் வெளியூர் செல்ல முடிவுசெய்துள்ளேன். ஏதேனும் வேலை செய்து பிழைக்கலாம். நமது ஊரில் பஞ்சம் நீங்கியதும் திரும்பலாம். கடுமையாக உழைத் தால்தான் நிறையப் பொருள் கிடைக்கும். ஊர் திரும் பியதும் அப் பொருளைக்கொண்டு ஏதேனும் தொழில் செய்து பிழைத்துக்கொள்ளலாம் என்று எண்ணியுள்ளேன்,” எனக் கூறினான். சின்னான், ‘நண்பா! நானும் உன்னோடு வருகிறேன். இருவரும் சேர்ந்தே உழைப்போம். பொருள் மிகுதியாகச் சேர்ந்தால் இருவரும் ஊர் திரும்பிவிடுவோம்” எனக் கூறினான். ”தனியே செல்வதைவிட நண்பனும் உடன் வந்தால் நல்லது,” என நல்லான் எண்ணினான், உடனே அவனையும் உடன் அழைத்துச்சென்றான்.
இருவரும் நெடுந்தூரத்திலுள்ள நகரத்தை அடைந் தனர். அவர்களுக்கு வேலை ஒன்றும் கிடைக்கவில்லை. ஊரிலிருந்தால் யாராவது சாப்பிட உணவாவது கொடுப்பார்கள். நகரத்தில் ஒருவரும் ஒன்றும் தர வில்லை. நல்லானும் சின்னானும் அலைந்து திரிந்து களைப்படைந்தனர். இரவு வெகுநேரம் ஆகிவிட்டது. இருவரும் சோர்ந்து ஒரு வீட்டின் முன்புறத்தில் படுத்தனர்.
அந்த வீடு ஒரு பெரிய பணக்காரருடையது. நள்ளிரவு நேரம். சின்னான் நன்கு தூங்கிக்கொண் டிருந்தான். நல்லானுக்குத் தூக்கம் வரவில்லை; தன் வறுமை நிலையை எண்ணி வருந்திக்கொண்டிருந்தான். திடீரென்று வீட்டின் உள்ளிருந்து ஏதோ கூச்சல் கேட்டது. யாரோ சிலர் நடமாடும் ஓசை கேட்டது. சிறிது நேரத்தில் ஒருவர் ‘ஐயோ’ என அலறும் குரல் கேட்டது. நல்லான் சின்னானை எழுப்பினான். ஆனால் அவன் எழவில்லை. நல்லான் எழுந்து பக்கத்தில் இருந்த சாள ரத்தின் வழியே உள்ளே பார்த்தான். உள்ளே இரண்டு முரடர்கள் கையில், கத்தியுடன் காணப்பட்டனர். அவர்கள் இருவரும் வீட்டுக்காரரைக் கொலைசெய்ய முயன்றார்கள். நல்லானுக்குப் பயமாயிருந்தது. ஆயினும் வீட்டுக்காரர் கதறியழுததைப் பாத்ததும் மனம் இரங்கினான். எப்படியாவது வீட்டுக்காரரைக் காப் பாற்றவேண்டும் என முடிவுசெய்தான். உடனே உள்ளே நுழைந்தான். திடீரென நல்லான் வந்ததைக் கண்ட முரடர்கள் நல்லானைத் தாக்க முயன்றனர். நல்லான் நல்ல உழைப்பாளி. எனவே, அவன் உடல் உறுதி யுடன் இருந்தது. நல்லான் முரடன் கையிலிருந்த கத்தியைத் தட்டிவிட்டான். அதனை எடுக்கத் ‘ தலை குனிந்த முரடனைப் பலம்கொண்டமட்டும் உதைத்தான். அவன் பக்கத்தில் இருந்த தூணில் மோதிக்கொண்டான்; அதனால் மயக்கமடைந்தான். மற்றொரு முரடன் அதனைப் பார்த்ததும் தப்பி ஓடிவிட்டான். வீட்டுக்காரர் உயிர் பிழைத்தார். அடிபட்ட முரடனைக் காவலரிடம் ஒப்படைத்தான் நல்லான்.
அந்தப் பணக்காரர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். சின்னான் விழித்துக்கொண்டான்; நடந்ததைக் கேட்டு வியப்படைந்தான். அச் செல்வர் நல்லானிடம்,”தம்பி! நல்ல சமயத்தில் நீ வந்தாய். உன் உயிரைப்பற்றிக் கூடக் கவலைப்படாமல் என்னுயிரைக் காப்பாற்றினாய். உனக்கு எந்த ஊர்? எங்கு வந்தாய்?” எனக் கேட்டார். நல்லான், “ஐயா! நானும் என் நண்பன் சின்னானும் பிழைப்புத் தேடி இவ்வூர் வந்தோம். இரவு உங்கள் வீட்டின் முன்புறம் படுத்திருந்தோம். உள்ளே ஓசை கேட்டு ஓடிவந்தேன். என் கடமையைச் செய்தேன் எனப் பணிவோடு கூறினான். அப் பணக்காரர் மகிழ்ந்து “தம்பி! என் உயிரைக் காத்த உனக்கு என் நன்றி. உனக்கு நான் ஆயிரம் தங்க நாணயங்களைப் பரிசாகத் தருகிறேன். இதனைக்கொண்டு ஏதேனும் தொழில் செய்து நீயும் உன் நண்பனும் பிழைத்துக்கொள் ளுங்கள், எனக் கூறித் தங்க நாணயங்களைக் கொடுத்தார். நல்லான் செல்வருக்கு நன்றிகூறி, நண்பனுடன் ஊருக்குப் புறப்பட்டான்; தனக்குக் கிடைத்த பரிசில் நண்பனுக்கும் பாதி தந்தான்.
சின்னான் பேராசை கொண்டவன் பெரும் பகுதி நாணயங்களைத் தானே எடுத்துக்கொள்ளவேண்டுமென எண்ணினான். நல்லானை ஏமாற்றி நாணயங்களைப் பெற முடிவு செய்தான். உடனே நல்லானிடம், “நண்பனே! திடீரென்று மிகுந்த தங்க நாணயங்களுடன் ஊர் செல்லவேண்டா. நமது உறவினர் பலரும் வந்து கேட்பார்கள். வேறு சிலர் நம்மீது ஐயம் கொள்வார்கள். எனவே, நாம் சிறிதுசிறிதாக எடுத்துச் செல்வதே மேல்,” எனக் கூறினான். நல்லானுக்குச் சின்னானுடைய வஞ்சக எண்ணம் தெரியாது. எனவே, சின்னானைப் பார்த்து, “அப்படியானால் என்ன செய்யலாம்? நீயே ‘சொல்’ என்றான். சின்னான், “இந்த நாணயங்களில் ஆளுக்கு நூறு எடுத்துக்கொள்வோம். எஞ்சிய நாணயங்களை ஒரு பானையில் வைத்து ஒருவரும் அறியாமல் புதைத்துவிடுவோம். கையிலுள்ள நாணயம் தீர்ந்தவுடன் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக்கொள் வோம்,” எனக் கூறினான். அதன்படியே இருவரும் ஆளுக்கு நூறு நாணயங்களை எடுத்துக்கொண்டனர். எஞ்சிய எண்ணூறு நாணயங்களை ஒரு பானையில் போட்டு ஒரு பெரிய மரத்தடியில் புதைத்துவைத்தனர்.
சின்னான் ஆடம்பரமாகச் செலவு செய்தான். நல்லான் வழக்கம்போலச் சிக்கனமாகவே இருந்தான். தவறான வழிகளில் சின்னான் செலவு செய்ததால் அவனிடமிருந்த நாணயங்கள் விரைவில் தீர்ந்து போயின. நல்லவனைப்போல் நடித்த சின்னான் நல்லானிடம் போய், ”எனக்கு அவசரமாகப் பொருள் தேவை. வா, இருவரும் போய்ப் புதைத்துவைத்த நாணயத்தில் மேலும் கொஞ்சம் எடுத்து வருவோம், எனக் கூறினான். அவன் கூறியதை நம்பி நல்லான் சென்றான். இருவரும் ஆளுக்கு ஐம்பது தங்க நாணயங்கள் எடுத்துக்கொண்டு மீதியைப் புதைத்து விட்டு வந்தனர். சில நாள்கள் கழிந்தன. சின்னான் மீதியிருந்த நாணயங்கள் எல்லாவற்றையும் தானே எடுத்துக்கொள்ளவேண்டும் என ஆசைப்பட்டான். ‘நல்லான் என்னை முழுவதும் நம்பிவிட்டான். இப் போது அந்த நாணயங்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டால் என்மீது சந்தேகம் கொள்ளமாட்டான்,’ என எண்ணினான். ஒரு நாள் இரவு ஒருவரும் அறியாமல் சென்று நாணயங்களை எடுத்துக் கொண்டான்; வெறும் பானையை அங்கேயே புதைத்து வைத்துவிட்டான்.
மேலும் சில நாள்கள் கழிந்தன. நல்லானின் உறவினர் ஒருவர் திருமணத்திற்குப் பணம் இல்லாமல் வருந்தினார். அவருக்கு உதவ நல்லான் எண்ணினான். உடனே சின்னானிடம் சென்று, “எனக்குப் பணம் தேவை. நாம் சென்று எஞ்சிய நாணயங்களை எடுத்து வருவோம்” என்றான். சின்னான்,”சரி வா. எனக்கும் பணம் தேவை. நானே உன்னைக் கேட்க எண்ணி யிருந்தேன்” எனக் கூறினான். இருவரும் சென்று பானையைத் தோண்டி எடுத்தனர். பானை காலியாக இருந்தது. உடனே சின்னான், “அட பாவி! எனக்குத் தெரியாமல் நீ வந்து எடுத்துவிட்டாயே. உன்னை நம்பி மோசம் போய்விட்டேனே. உன்னை நான் விடப்போவ தில்லை. வா நீதிமன்றத்துக்கு,” எனக் கூக்குர லிட்டான். நல்லான், “எப்படிப் பணம் போயிற்று?” என அறியாமல் திகைத்தான். வழக்கு நீதி மன்றத்துக்கு வந்தது.
வழக்கினை விசாரித்த நீதிபதிகள், “இந்த வழக்கில் சாட்சியங்கள் இருந்தால்தான் தீர்ப்பு வழங்க முடியும். நல்லான் திருடினான் என்பதற்கு என்ன சாட்சி” எனச் சின்னானிடம் கேட்டனர். வஞ்சகனான சின்னான் உடனே, “ஐயா! நாங்கள் பணத்தைப் புதைத்து வைத்த மரத்தில் ஒரு பேய் இருக்கிறது. அதுதான் நல்லான் திருடியதாக என்னிடம் கூறியது. நீதிபதிகள் அங்கு வந்தால் அப் பேய் கூறுவதை உங்கள் காதால் கேட்கலாம். நாளை இரவு நீங்கள் வந்தால் நான் சாட்சியினைக் காட்டுகிறேன்.” என்றான். நீதிபதிகளும் உடன்பட்டனர்.
அன்றிரவு சின்னான் தன் தந்தையிடம் பின்வரு மாறு கூறினான். “அப்பா! நான் தண்டனையிலிருந்து தப்புவதற்கு நீங்கள்தான் உதவவேண்டும். நாளை இரவு நீங்கள் அந்த மரத்தடிக்கு என்னுடன் வரவேண்டும். அந்த மரத்துப் பொந்தில் உங்களை ஒருவரும் அறியாமல் ஒளித்துவைத்துவிடுவேன். நீதிபதிகள் அங்கு வருவார்கள். அப்போது நான் ‘பேய் சாட்சி கூறும்’ எனச் சொல்வேன். நீங்கள் உள்ளிருந்த படியே நல்லான்தான் பணத்தைத் திருடினான். அதனை நான் பார்த்தேன்’ எனக் கூறவேண்டும். நீதிபதிகள் பேய் சாட்சி கூறுவதாக நம்பி எனக்கு விடுதலை தருவார்கள். நல்லான் தண்டனை அடைவான். எல்லாப் பணத்தையும் நாமே வைத்துக் கொள்ளலாம்’ எனக் கூறினான். அவனுடைய தந்தை மகனைத் திருத்தவில்லை. மகனுடைய தீய செயலுக்கு அவரும் சம்மதித்தார். அன்றிரவு அவரைச் சின்னான் ஒருவரும் அறியாமல் மரப் பொந்தில் ஒளித்து வைத்தான்.
குறிப்பிட்ட நேரத்தில் அனைவரும் அந்த இடத் துக்கு வந்தனர். நீதிபதிகள், “பேயே! நல்லான் பணத்தைத் திருடியது உண்மையா?” எனக் கேட்டனர். “ஆம். நல்லான்தான் பணத்தைத் திருடினான்” எனப் பதில் வந்தது. நல்லான் திருடவில்லை என்ப தற்குச் சாட்சி இல்லை. எனவே, நீதிபதிகள் நல்லானே குற்றவாளி என முடிவு செய்தனர். நல்லானுக்கு ஒன்றும் புரியவில்லை. மரத்திலிருந்து பேசுவது பேயன்று எனத் தெரிந்துகொண்டான். ஆனாலும் தான் சொல்லுவதை எவரும் நம்பமாட்டார்கள் என எண்ணினான். உடனே நீதிபதிகளைப் பார்த்து, “ஐயா! என்னை மன்னியுங்கள். நான்தான் பணத்தை எடுத்தேன். அப்போது யாரோ வருவதுபோல் இருந்தது. உடனே பண மூட்டையை இந்த மரப் பொந்தில் போட்டுவிட்டேன். சிறிது நேரம் கழித்து எடுக்க முயன்றேன். ஆனால், அப்பொந்தில் ஒரு பெரிய யாம்பு இருந்தது. அது கடிக்க வந்தது. நான் பயந்து வந்துவிட்டேன். அந்தப் பணமூட்டை பொந்தில்தான் உள்ளது. பாம்பு இருப்பதால் எடுக்கமுடியாது. எனவே, இந்த மரத்தினை நெருப்பிட்டு எரித்தால் பாம்பு வெளி யாகிவிடும். பணத்தை எடுக்கலாம்” என்று கூறினான். நீதிபதிகள் மரத்தை எரிக்க உத்தரவிட்டனர்.
சின்னான் பயந்து நடுங்கினான். ஆனாலும் ஒன்றும் சொல்ல முடியவில்லை. உடனே மரத்துக்கு நெருப்பு வைக்கப்பட்டது. உள்ளிருந்த சின்னானின் தந்தை அலறினார். அனைவரும் திடுக்கிட்டனர். அவர் நெருப்புக் காயங்களுடன் வெளியே ஓடிவந்தார். உடனே நீதிபதிகள் அவர்தாம் உள்ளேயிருந்து சாட்சி சொல்லியவர் எனத் தெரிந்து கொண்டனர். சின்னானின் சூழ்ச்சி வெளிப்பட்டது. அவனது தந்தை நெருப்புக் காயங்களால் இறந்துபோனார். சின்னா னுக்கும் கடும் தண்டனை கிடைத்தது. பேராசையால் தகாத வழியில் பணம் தேடியதால் சின்னான் தந்தையை இழந்தான்; சிறைத் தண்டனையும் பெற்றான். தல்லான் மிகவும் நல்லவனாக இருந்தாலும் தீயவனாகிய சின்னா னுடன் சேர்ந்ததால் துன்பம் அடைந்தான்.
‘கெடுப்பது ஒழி.” – ஆத்திசூடி
”ஓரஞ் சொல்லேல்.” -ஆத்திசூடி
“அடுத்தவரை ஒருநாளும் கெடுக்க வேண்டாம்.” – உலகநீதி
– கதைத் திரட்டு, ஆறாம் வகுப்பு, முதற் பதிப்பு: 1980, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை.
![]() |
புலவர் த. முருகேசனார் என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு சிறந்த தமிழறிஞரும், மாகாணத் தமிழாசிரியர் கழகத்தின் முக்கிய ஆளுமையும் ஆவார். புலவர் த. முருகேசனார் (24.06.1921 -18.02.2005) - முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: சிதம்பரம் புலவர் த. முருகேசனார் அவரைப் பற்றிய முக்கியத் தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன: மாநாடுகள் ஒருங்கிணைப்பு: இவர் 1954 ஆம் ஆண்டில் மாகாணத் தமிழாசிரியர் கழகத்தின் நான்காவது மாநாட்டினை அண்ணாமலை நகரில்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
உயிர்காப்பான் தோழன்
ஸ்ரீ.தாமோதரன்
October 12, 2026
போலித் துறவி
புலவர் த.முருகேசன்
October 10, 2026
வறுமையில் செம்மை
புலவர் த.முருகேசன்
October 10, 2026
