கதையாசிரியர்:
தின/வார இதழ்: கோகுலம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 8, 2026
பார்வையிட்டோர்: 160 
வாசிப்பு நேரம்: 13 நிமிடங்கள்

(2009ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தெறித்து ஓடி பயிர்களைக் கடிக்க ஆலாய்ப் பறக்கிற வெள்ளாடுகளை ஓடி ஓடி மடக்கி, பாதைக்குள்ளேயே பத்துவதற்குள் ஆத்தாடி, அம்மாடி என்றாகி விடுகிறது பூச்சிக்கு. வியர்த்துக் கொட்டுகிறது. முத்து முத்தான வியர்வையில் இளவெயிலின் ஒளித்தெறிப்பு. 

பாதையின் இருபக்கமும் மட்டுமல்ல, சுற்றிலும் பச்சைப் பசேலென்று மக்காச்சோள வெள்ளாமை. சமுத்திரமாக விரிந்து பரந்து கிடக்கிற கரிசல்காடு பூராவிலும், ஆளுயரத்துக்குப் பயிர்கள். குளிர்ப் பச்சையாக கிளி நிறப்பயிர், பூப்பருவம். பயிர்களின் உச்சந்தலையில் தோகை விரிக்கிற பூக்கள். 

பச்சைப் பயிரில் வாய் வைக்க தவியாய்த் தவிக்கிற ஆடுகள். கள்ளத் தாவல்கள். திருட்டு நழுவல்கள். இவளிடமிருந்து சிறகு முளைத்துப் பறக்கிற கற்கள். காற்றையும், வெயிலையும் அதிர வைக்கிற நாற வசவுச் சொற்கள். கம்பு வீச்சுக்கள். 

“செத்த நாய்களா… எடுபட்ட கழுதைகளா.” 

எரிச்சலும், கோபச் சீறலுமான பூச்சியின் வசவுகளில் ஒன்றிரண்டு. இன்னும் கெட்ட வார்த்தைகளெல்லாம் பேசுகிறாள். விரசமான வசவுகளும் தெறிக்கும். 

யாருக்கும் பயப்பட மாட்டாள். துணிச்சலானவள். இருட்டுக்கும், தனிமைக்கும், பேய்க்கும் பயப்படாதவள். 

ஊரைத் தாண்டி, காலனியைத் தாண்டி… கரிசல்காட்டுப் பெரு வெளியைத் தாண்டி… தாறுமாறாக நடக்கிற ஆடுகள். கன்னங்கரேலென்ற வெள்ளாடுகள். 

வெள்ளையன் செம்மறியாடுகள் பத்திக் கொண்டு வருவான். அவனுடன் கூடவே ஏழெட்டு வருஷமாக திரிகிறாள். இவளைவிட நாலைந்து வயது பெரியவன். அவனும் இப்படித்தான் கெட்ட வார்த்தைகளிலேயே ஆடுகளைத் திட்டி விரட்டுவான். கூச்ச நாச்சமில்லாமல் நாறப் பேச்சு பேசுவான். அவனிடமிருந்து வந்து ஒட்டிக்கொண்ட பழக்கம். 

ஆளற்ற வனாந்தரச் சுதந்திரம். கேட்பாரற்ற வாய்த்துணையற்ற தனிமைச் சூன்யம் தருகிற சலிப்பும், தைரியமும், வெட்ட வெளியின் தகிக்கும் வெயிலுடனேயே கருகிச் சாகிற மனத்துயரம். ஆட்டின் வாலிலேயே தொங்கித் துடிக்கிற வாழ்க்கையின் வெறுமையும், கசப்பும். 

கெட்ட வார்த்தைகள்தாம், மனத்துணை. சினிமாப் பாட்டுக்களை கெட்ட வார்த்தைப் பாட்டுக்களாக்கி… உச்ச குரலில் கத்திப் பாடுவாள். ரகசிய உறுப்புக்களை ஓர் ஆங்காரமாக – ஓங்காரமாக – சத்தம்போட்டு உச்சரிப்பதில் ஒரு மகிழ்வான மனநிறைவு. விதிக்கப்பட்ட வறுமை வாழ்க்கையின்மீதான வன்மத்துடன், காறித் துப்பிய சந்தோஷம்.ஆடு மேய்க்க ஆளற்ற வனாந்தர வெயிலில் தகிக்கவிட்ட தலையெழுத்தை செருப்பால் அடித்த மன ஆறுதல். 

கறுத்தூருணிக்குள் ஆடுகளை இறக்கினாள். இனி, கவலையில்லை. அதுகள் பாட்டுக்கு விட்டாத்தியாக புல்லைக் கடிக்கும். 

கறுத்தூருணியில் தண்ணீர் இருக்காது. மஞ்சனத்தி, கருவேல மரங்களும், மத்தாங்கப் புல்லும், கோரைப் புல்லும், வற்றாத கொழை தழைகள் செழித்துக் கிடக்கும். உயரமான வட்டக் கரைகள். சரள் அள்ளிய பெரிய பெரிய கிடங்குகள். 

கொலை செய்து முண்டத்தைப் போட்டாலும், யாருக்கும் தெரியாது. அப்படியொரு மறைவு. ஊருணியை சுற்றியிருக்கிற நாலைந்து தரிசுக் கரிசலிலும் அடர்த்தியான மரங்கள். 

ஊருணிக்குள் சுதந்திரமாகிய வெள்ளாடுகள் பாய்ந்து, பாய்ந்து புல்லை வளைத்துப் பிடித்தன. ‘பர் ருச், பார்ர் ருச்’ சென்று மேய்கிற சத்தம். 

பூச்சிக்குக் களைப்பாக இருந்தது. உயிர் வடிந்து ஓய்ந்து போனமாதிரி உடம்பெல்லாம் அயற்சி. அடி வயிற்றிலிருந்து பீறிட்டு வருகிற ஆசுவாசப் பெருமூச்சு. “அம்…ம்…மாடி” என்று மனக்கூவலாக வெளிப்படுகிற வியர்வை மணிகள். செம்பட்டை முடியெல்லாம் கலைந்து கிடக்க… உள்ளிருந்து வழிகிற நீர்க்கோடுகள் விம்மி விம்மித் தணிகிற நெஞ்சு. ‘தஸ்ஸ்… புஸ்ஸ்’ஸென்று மூச்சிரைக்கிறது. குறுக்கெலும் பெல்லாம் ரண அதிர்வுகள். 

காற்றே இல்லை. மரங்களும், மக்காச்சோளப் பயிர்களும் எதையோ கண்டு அரண்டமாதிரி, ஆடாமல் அசையாமல் நின்றன. காலடிப் பாவாடையைத் தூக்கி, கூச்சமில்லாமல் முகத்து வியர்வையையும், கழுத்தடி நசநசப்பையும் துடைத்துக் கொள்கிறாள். தொடை வரைக்கும் வெயில் தொடுகிறது. 

‘இதுலே… கூசுறதுக்கும், பயப்படுறதுக்கும் என்ன இருக்கு? வேட்டி நுனியாலே ஆம்பளைக முகத்தைத் துடைக்கிறதில்லியா? அப்படித்தான் இதுவும்.’ 

செம்மறியாடுகளின் வாசம் வந்தது. மூத்திரமும், சாணியும், மூக்குச் சளியுமான ஒருவகை மணம். திரும்பிப் பார்த்தாள். வெள்ளையன்தான் செம்மறியாடுகளைப் பத்திக் கொண்டு வருகிறான். பீடிப்புகை அவன் தலைக்கு மேல் தெரிகிறது. நீலக்கலர் பனியன். கச்சிதமாக மடித்துக் கட்டிய கைலி. தலையில் வட்டக் கட்டாக துண்டு. அதற்குள் சொருகப்பட்டிருக்கும் தீப்பெட்டி. உருட்டுக் கட்டான திரேகம். முறுக்கேறிய தசைத் திரட்சி. லட்சணமான ஆள். தாட்டியமானவன். 

ஒன்பது வயதில் கம்பு தூக்கியவள் பூச்சி. அன்றிலிருந்து இவன் கூடவே சேர்ந்து ஆடு மேய்க்கிறாள். 

“யப்பா… வெள்ளையா, அப்பனைப் பறிகுடுத்த பொட்டப்புள்ள, பச்சைமண்ணு. வேறபுகல் இல்லாம கம்பெடுத்துக் குடுத்து, ஓங்கூட அனுப்புதேன்பா… கண்ணும் கருத்துமா பார்த்துக்கப்பா…” 

“ஆட்டும்க்கா… நா பாத்துக்கிடுதேன்.” 

இதுவரைக்கும் ‘பார்த்துக்கிட்டான்’; துணையாயிருந்தான். வேறு யாருக்கும் வாலையாட்டிப் பார்க்கிற தைரியம் வராமலிருந்ததில்… அவனது துணை, ஒரு காரணம்தான். இப்ப இப்ப… ஒரு தினுசாக பார்க்கிறான்; பார்வையில் கபடம். வெள்ளையன் மனசு கறுப்பாகி வருகிறது. 

‘என்ன செய்யப் போறானோ… என்ன கூத்து கட்டப் போறானோ… என்ன இழவு வந்து சேரப் போகுதோ…’ 

ஒரு புதிர் மயமான இருட்டான நினைவு அவளுக்குள் ஓடியது. 

அவளுக்குள் ஒரு தைரியம். துணிவு. ‘நம்மை என்ன கடிச்சா முழுங்கிருவான்?’ என்கிற மனத்தெளிவு. 

பூச்சி, சடங்காகி (பூப்பெய்தி) நாலைந்து வருஷமாயிற்று. ஊர் உலகத்துக்குச் சொல்லவில்லை. மிரட்சியும், அறியாமையுமாக ஊமையழுகை அழுத பூச்சிக்கு, அம்மாதான் அழுதுகொண்டே ஆறுதல் சொன்னாள். தைரியம் தந்தாள். 

“பொண்ணா ஜென்மம் எடுத்த எல்லாருக்கும் உள்ளதுதான். பயப்படாதே… செடி பூக்குறது, நல்லதுதான். பூக்காட்டாத்தான் கவலைப்படணும்.” 

“பெறகெதுக்கும்மா… நீ அழுகுதே?” 

“நம்ம விதிய நெனைச்சு.” 

அழுகையும், கண்ணீருமாகப் புலம்பிய அம்மா, 

“மணிக்கொத்து மாதிரி ஒத்தைப் பிள்ளை வயசுக்கு வந்திருக்கா. ‘எம்புள்ளே பூத்துட்டா’ன்னு ஊர் உலகத்துக்குச் சொல்ல முடியாம மருகித் தவிக்கிறேன்… அதை நெனைச்சுத்தாண்டி…” 

தலையில் ஓங்கியடித்து அழுது கதறுகிற அம்மா. 

“தாய் மாமன் சீர் வரிசையோட… மைக் செட் கட்டி. ரேடியோ போட்டு… மேளம் வைச்சு… பத்திரிகை அடிச்சு… ஊர் சொல்லி.. பந்தி வைச்சு… முறைப்படி நம்ம வழக்கப்படி சடங்கு நடத்துனா… எம்புட்டு நல்லா இருக்கும்? சாதி சனத்தைக் கூட்டி கொண்டாடுனா… பெருமையா இருக்கும்லே?” 

“ஆசையிருக்கு தாசில் பண்ண, யோகமிருக்கு கழுதைமேய்க்க’ன்னு சொலவடை சொல்ற மாதிரியிருக்கு நம்ம பொழைப்பு. வவுத்துப் பாட்டுக்கு வழியத்துப் போயிருக்கையிலே ரெண்டாயிரம், நாலாயிரம் செலவழிக்க ஏலுமா? சடங்குதான் வைக்க முடியுமா? இப்படியுமா எம்புள்ள தலையெழுத்து, கோண எழுத்தா அமையணும்? அட, குருட்டுப் பய தெய்வமே…ஓங் கண்ணும் அவிஞ்சு போச்சா? கருத்தழிஞ்சு போச்சா?” 

குமுறலும் குமைச்சலுமாகப் பாட்டம் பாட்டமாக அழுது தீர்த்தாள். ‘ஊமைக் கனா கண்டால், ஒருத்தரிடமும் சொல்லாதே’ என்கிறமாதிரி… யாருக்கும் தெரியாமல் தலைக்குத் தண்ணீர் ஊற்றி… சடங்கு முறை கழித்தாள். 

ஒரு புதுத் துணிக்குக்கூட வழியில்லை. 

சோகப்பாரம் நிறைந்த நினைவுகளுடன், கனத்த மனசுடன் தன்னைத்தானே பார்த்தாள். பூப்போட்ட பாவாடை. சுடிதார் பெண்கள் போடுகிற முண்டா பனியனைப் போன்ற உள்ளாடைகள் மூன்று ஓசி கிடைத்தன. ஒன்றிரண்டு ஓட்டைகள் தையல் இழை பிரிந்திருந்தது. அதைத்தான் உள்ளே போட்டிருக்கிறாள். செத்துப் போன அய்யாவின் பெரிய சைஸ் அரைக்கைச் சட்டையை அதற்கு மேல் போட்டிருக்கிறாள். 

கட்டம் போட்ட அரைக்கைச் சட்டை, ஒரு வசதி. தொள தொளப்பாக கிடக்கும். வயதை மறைக்கலாம். நெஞ்சுத் திரட்சியை மறைக்கலாம். சிறுமியாகவே தோற்றம் தரலாம். 

சீர்குலைந்து, சித்திரம் அழிந்த குறைகோலம். பூப்போட்ட பாவாடையும், ‘தொள தொள’ ஆண் சட்டையும், பார்க்கவே அசிங்கமாய்… அவலட்சணமாய்… அலங்கோலமாய்… 

அவளுக்குள் முட்டிக் கொண்டு வருகிற அழுகை. கண்ணுக்குள் நீர்முள்ளின் உறுத்தல். அழுத்துகிற மனக்கனம். அடி நெஞ்சில் அறைகிற இல்லாமையின் அவலம். 

பத்து நாளுக்கு முன்பு… 

ராத்திரி குளித்தாள். அரை குறையான கிடுகுகள், வீட்டுச் சுவரின் நிழலின் இருள் மறைப்பில் குளித்தாள். குளித்து முடித்துவிட்டு… துணி மாற்ற கூரை வீட்டுக்குள் போனாள். 

அம்மா இல்லாத தைரியத்தில் ஈரத்துணியை நழுவ விட்டு விட்டு… 

உலகின் கண்ணுக்குக் காட்டாத தன்னை, தனது முழுமையை – தேகவெளிச்சத்தை – தானே பார்த்தாள். அவளே அவளுக்கு புதுமையாக பேரழகியாகத் தோன்றினாள். ‘தான் இம்புட்டு அழகா’ என்று நினைத்து பிரமித்தது நினைவுக்கு வந்தது. போட்ட கோல ஓவியத்தை காலால் தடவி பரசி அழித்த மாதிரி… பாவாடையும், அரைக்கைச் சட்டையுமாக இருக்கிற தனது தோற்றம். 

தன்னிடம் ஒரு ஜாக்கெட்கூட இல்லை என்பதை நினைத்தவுடன்… அடி வயிற்றில் ஒரு பிசைவு. நெஞ்சில் பார அழுத்தம். குமுறிப் பீறிடுகிற அழுகை உணர்ச்சி. 

நெருங்கிவிட்ட செம்மறியாடுகள். கிட்டத்தில் வந்துவிட்ட வெள்ளையன். அவனிடம் தனது பலவீனத்தைக் காட்டிக் கொள்ளக்கூடாது என்ற சுயவிழிப்பு. சுதாரித்துக் கொண்டாள். முகத்தை மனசால் துடைத்துக் கொண்டாள். 

ஒரு வெள்ளாடு மஞ்சணத்தி மரத்தில் முன்னத்தி கால்களை போட்டு, நிமிர்ந்து, தொங்குகிற சிறு கிளையைக் கடித்தது. 

ஒரு கல்லை விட்டெறிந்தாள். “விர்ர்ர்” ரென்று பறக்கிற கல். “புல்லை மேயாம… மரத்து மேலே என்ன நக்குறே… பேய்க்…” என்று கோபமாகக் கத்தினாள். 

அவளது வசவின் நாராசம். விரச வசவு, வெள்ளையனுக்கு ‘என்னவோ’ போலிருந்தது. ஆண் கர்வம் பங்கப்பட்டதாக ரோஷப்பட்டான். 

‘தன்னை ஓர் ஆணாக மதித்திருந்தால்… இப்படி வசவு வையத் தோணுமா பொட்டைக் கழுதைக்கு?’ அவனுள் ஓடுகிற நினைவு. 

“பூச்சி அப்பதையே வந்துட்டீயா?” 

“இப்பத்தான் வந்து… மூஞ்சியை துடைச்சிருக்கேன்.” 

“இந்தா… தூக்குச் சட்டியையும், தண்ணிபாட்டிலையும் மரத்துலே தொங்க விட்டுரு.” 

வாங்கினாள். அவளது தூக்குச் சட்டியும், தண்ணீர் பாட்டிலும் தொங்குகிற அதே கருவேல மரத்தில் இதையும் தொங்க விட்டாள். 

மேலுதட்டை மேலாகப் பிதுக்கிக் கொண்டு செம்மறியாடுகளை மேயவிடாமல் காமக்கனைப்பு கனைத்துக் கொண்டே, தொல்லைபடுத்திய செம்மறிக்கிடாயை நோக்கி ஒரு வசவு தெறித்தது அவளிடமிருந்து. ஒரு கல்லும் பறந்தது. 

அவளையே கூர்ந்து பார்க்கிற வெள்ளையன். அவளது உருண்ட கையின் மினுமினுப்பை – உப்பிய கன்னத்தின் ஒளியைப் பார்க்கிற அவன். பார்வையில் மேலுதட்டுப் பிதுங்கல். 

ரெண்டு பாக்கட் ஊறுகாயை தலைப்பாகையிலிருந்து எடுத்தான். உரிமையோடு அவளது சட்டைப்பைக்குள் கைவிட்டான். ‘இதைப் பையிலே வைச்சிரு. மதியத்துக்கு ஆகும்.” 

பைக்குள் விட்ட கையை எடுக்காத வெள்ளையன். விரல்களின் சில்மிஷம். சதையை அழுத்துகிறான். ஒரு சிறிய கிள்ளல். 

தேள் கொட்டின மாதிரியிருந்தது பூச்சிக்கு. ரௌத்ரமாகிய அவள், கோபாவேசமாக கையைத் தட்டிவிட்ட பூச்சி. 

காமக்கிடாயைப்போல இளிக்கிற வெள்ளையன். 

எல்லாம்… வார்த்தையாகாத மௌன நாடகம். அடி மனசுகளின் அந்தரங்க உரசல். உரசலில் எழும் தீப்பொறி. 

ஒன்றும் நடக்காத பாவனையில் வெள்ளையன், 

“என்ன… இம்புட்டு தூஷணமான வசவா வைய்றே?” 

“ஆடுக பண்ணுற சேட்டைக, கொஞ்சமா? அதுகளை அப்படித்தான் வையணும். இந்த வசவுகள்ல்லாம் உங்ககிட்டேயிருந்துதானே… வந்துச்சு?” 

“நா ஆம்பளை. எனக்குச் சரி. நீ பொம்பளை. ஒரு கூச்சம், ஒரு வாயொடுக்கம் வேணாம்?” 

“ஆம்பளைக்கொரு சட்டம், பொம்பளைக்கொரு சட்டம்னு ரெண்டு சட்டமா? ஒழுக்கம்னா… ரெண்டு பேருக்கும் பொதுதானே?” 

அவனது சகஜமான இயல்பான பேச்சு… அவளிடமோ கூடுதல் சீற்றம். மார்பில் அவன் கிள்ளிய கபடம். தேள் கடிபட்ட வலியின் கோப அதிர்வு பூச்சியிடம். 

“நீயென்ன, புதுச்சட்டம் போடுதே? சாண்புள்ளையானாலும், ஆண்புள்ளே சிங்கம்லே? பொட்டச்சி ஈடாயிருவாளா?” 

“ஆம்பிளைன்னா பதினோரு மாசமா? அவனுக்கு மட்டும் கொம்பா மொளைச்சிருக்கு? கொம்பு மொளைச்சிருந்தா… ஒடிச்சிரத்தான் செய்யணும்.” 

வாயடைத்துப் போனான். வார்த்தைகளற்றுப் போன மனச்சூன்யம். எப்பவும் போலவே… இப்பவும் சரி மல்லுக்கு நின்றாள். பின் வாங்க மாட்டாள். பயம் என்ற பேச்சே அவளிடம் அண்டாது. தெளிவான மனசின் துணிச்சல். துணிச்சலின் வெடிப்பான அனல் சொற்கள். நேர்படப் பேசுவாள். நிமிர்ந்து பார்ப்பாள். தளராத தலை நிமிர்வு. 

சட்டைப் பையில் கிடந்த ஊறுகாய்ப் பொட்டலம், தேளாக உறுத்தியது. அவன் விரல் விஷமத்தின் தீ நினைவு. அழுத்திய அழுத்தத்தில் தெரிந்த ஆண்திமிர். 

முந்தியெல்லாம் இப்படியில்லை. இவளை சிறுமியாக மட்டுமே நினைப்பான். பாசமும் காட்ட மாட்டான். பாதகமும் செய்ய மாட்டான். அவனது உடனிருப்பே ஒரு பாதுகாப்பாக இருந்தது. 

அதற்காக வெள்ளையன் யோக்கியனுமில்லை. காட்டுத் தனிமையில் – வெட்ட வெளிப் பரப்பில் – ஒற்றையாக – வெக்கை வெயிலில் மொத்தப் பொழுதையும் கழிக்கிறவனின் மனசு, கோணலாகாமல் இருப்பது சிரமம். உள்ளுக்குள்ளேயே உழல்கிற நினைவு, பகிர்வதற்கு ஆளில்லாமல் குமைந்து குமைந்து வக்கிரமடையும். 

பூச்சிக்கும் அதுதான். சபலமடைகிற மனசையும், உடம்பையும், கெட்ட வார்த்தைப் பாடல் கத்தலில் ஆற்றிக் கொள்கிறாள். வாய் வார்த்தைகளில் மனக்காமம் தணியும். 

அவனும் அப்படித்தான். நாலைந்து புஞ்சைகள் தாண்டி, தூரத்தில் எருமைகளைப் பத்திக் கொண்டு மேய்க்கிற நடு வயதுப் பெண்ணாக இருந்தாலும் சரி, “ஆட்டைப் பாத்து மேய்… அந்த ஓட்டை மூக்கும், வவுத்து வெள்ளையும் கள்ளத்தனம் பண்ணி… நழுவும் பார்த்துக்கோ…” என்பான். 

ஆணி வைத்து தைத்த செருப்பு ‘சர்ர்ருக், சர்ர்ருக்’ கென்று கிரீச்சிட நடப்பான். போய் ‘மேய்ந்து’ விட்டு ஆற அமர வருவான். ஆத்துப் பாலம் பக்கம் மேய்ச்சலுக்குப் போனால்… காய்ந்த முள் நறுக்கவும், விறகு பொறுக்கவும் தூரந்தொலைவில் தட்டுப்படுகிற பெண்களைக் குறி வைத்துப் போவான். சில நேரம் ‘மேய்வான்’. பல நேரம் கல்லெறி வாங்கி ஓடி வருவான். 

‘எங்கே போனான், என்ன செய்தான்’ என்று சொல்ல மாட்டான். காட்டிக் கொள்ள மாட்டான். இவளுக்குத் தெரியும். இவளும் கண்டு கொண்டதாகக் காட்டிக் கொள்ள மாட்டாள். 

அந்தச் சேட்டைகளை – தினவுகளை – காமத் திமிரை இவளிடம் காட்டியதில்லை. இவளை சின்னஞ்சிறுமியாகவே நினைத்து, பொருட்படுத்தியதில்லை. 

இந்த மூணுமாசமாக இவன் பார்வையே சரியில்லை. கண்ணில் வழிகிற காமம். வெள்ளையனின் மனம், கரிய இருளாகி வருகிறது. ‘குர்ர்ர், குர்ர்ர்’ரென்று விடாத பார்வைத் துரத்தல். இதோ… இன்னைக்கு விரல் விஷமம்… 

மூணு மாசத்துக்கு முந்தி… ஆத்துப் பாலம் பக்கம் வெட்ட வெளித் தரிசில் வெள்ளாடுகளும், செம்மறிகளும் மேய்ந்தன. ஒரு செம்மறியின் காலில் முள் விளார் குத்தி இழுபட்டது. 

“பூச்சி… அந்த முள்ளைப் பிடுங்கி விடு.” ஒருச்சாயலாக ஊன்றிய கம்பில் கட்கத்தைப் போட்டு, மொத்த உடல் பாரத்தையும் அதில் இறக்கி நின்றுகொண்டிருந்த வெள்ளையனின் கனிவான குரல், குழைவான தொனி. 

போனாள். அந்தச் செம்மறியைக் காலைப் பிடித்து நிறுத்தி, இவளும் உட்கார்ந்து முள்ளைப் பிடுங்க யத்தனிக்கிற போது, 

முதுகில் வந்து இன்னொரு செம்மறி. 

அதன் நாசிக்குள் நுழைந்த ஈயின் கூச்சம் தாளாமல், செருமிய செருமலில் இவளது சட்டை முதுகெல்லாம் மூக்குச்சளி. அதே சமயத்தில் முள் பிடுங்கிய செம்மறியும் தும்மித் தலையாட்ட, சட்டையின் முன்பக்கம் ஆட்டுச்சளி. 

அவள் அசிங்கப்படவில்லை. ஆனாலும் சளியைக் கழுவணுமே. 

கேலியாக சிரித்த வெள்ளையன், 

“ரெண்டு நாய்களும் தும்மியிருச்சா? முன்னும், பின்னும் சளியா? அய்யய்யே… சரி… பாலத்துக்கு அடியிலே பாறைக் குழியிலே தண்ணி கிடக்கும். சட்டையை கழுவிட்டு வா…” 

“ஆட்டைப் பார்த்துக்கிட்டு… இங்கேயே இருக்கணும்.” 

“நா வந்து… ஒன்னைப் பாத்து என்ன செய்யப் போறேன்? போய்ட்டு வா… சின்ன நாயி… வெருசா வந்து சேரு.” 

வேலிமுள் குவியலைத் தாண்டி, பாலத்துக்கு அடியில் இறங்கினாள். சுற்றும் முற்றும் பார்த்தாள். வெயிலைத்தவிர வேறொரு சுடு குஞ்சுகூட இல்லை. 

சட்டை பட்டனை கழற்றினாள். உள்ளே பார்த்தாள். உள்ளாடை சற்று பெரிது. இறக்கமாக இருந்தது. மார்பை மறைக்காமல் இருந்தது. அம்புட்டு இறக்கம். 

எச்சரிக்கை உணர்வில் மறுபடியும் ஒரு பருந்துப் பார்வை. மிச்ச பட்டனைக் கழற்றினாள். கட்டம் போட்ட அய்யா சட்டை. பாறையின் குழித்தண்ணீரில் நனைத்தாள். அகல மறுக்கிற சளிப் பிசுபிசுப்பு. வெயில் பார்க்காத மார்பக முழுமை வெயிலைப் பார்க்கிறது. வெயிலை மிஞ்சுகிற தங்கத் தகதகப்பு. குழிக்குள் இறங்கி மொத்தமும் முங்கியெழுந்தாள். வெயில் சூட்டில் தண்ணீர் வெதுவெதுப்பாகியிருந்தது. சட்டையை மட்டும் நன்றாக அலசிப் பிழிந்து… உதறி… ஈரச் சொட்டடிக்கிற தேகத்தில் மாட்டிக் கொண்டாள். மேடேறிப் பார்த்தால்- 

பாலத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்த வெள்ளையன், குற்ற உணர்வில்லாத வியப்புச் சிரிப்பு. 

“அட…! குட்டி நாயின்னு நெனைச்சுக்கிட்டிருக்கேன்… நீ என்னடான்னா… முழுத்த கொமரியாயிட்டீயே…  சூப்பராயிருக்கீயே…” 

அவனை வெறுப்புடன் ஓரப் பார்வையால் வெட்டினாள். 

“பிஞ்சுன்னு நெனைக்க… நீ என்னடான்னா… பழுத்துக் கனிஞ்ச மாம்பழமாயிட்டீயே…’ அன்றிலிருந்து வெள்ளையனின் கரிய மனமாற்றம், இருளான குணமாற்றம். கொம்பு முளைத்த செம்மறிக்கிடாயின் காமக் கனைப்பு. 

என்னைக்கு வெளிப்படையா வாரானோ…? ‘வந்து, படுடி’ என்பானோ? உரிமையோட சூறையாடுவானோ? மாம்பழங்களைக் கடித்துத் தின்ன வருவானோ? 

அவளுக்குள் நினைவுச் சரடுகள். பயமோ, நடுக்கமோ… பதற்றமோ… படபடப்போ இல்லாத வெற்று நினைவுகள். தெளிந்த மனசின் துணிவான நினைவு. 

‘எப்படிச் சமாளிக்க? என்ன மாதிரி தப்பிக்க? பொட்டச்சின்னா மட்டம்… பொண்ணுன்னா பூன்னு அலட்சியமா நசுக்க நெனைக்குற வெள்ளையன் கிட்டேயிருந்து எப்படி மீள்றது?’ காரியார்த்தமாக யோசிக்கிற பூச்சி. கலங்காமல், அஞ்சாமல் நிதானமாக யோசிக்கிற அவள். 

வெயில் உக்கிரமாகிறது. உச்சி மதியத்துக்கு வந்துவிட்ட பொழுது. மேய்கிற வெள்ளாடுகளைப் பார்க்கிறாள். செம்மறிகளையும் கவனிக்கிறாள். காமக் கனைப்போடு செம்மறியைத் துரத்துகிற கிடாயி. அதன் திருகுக் கொம்பு. 

“கொம்பு மொளைச்சிருந்தா… ஒடிச்சிருவீயா?” 

காதோரத்தில் கேட்கிற வெள்ளையனின் கோபக்குரல். சட்டென்று திரும்புகிற பூச்சி. தோளில் நாடி உரசுகிற அண்மை. அவனது வெப்ப மூச்சு செவி மடலில் சுடுகிறது. 

“பயந்துட்டீயா?” 

“என்னத்துக்குப் பயப்படணும்? சிங்கமா, கரடியா? கடிச்சி முழுங்கிர முடியுமா?” 

“ஆம்பளை நா, நெனைச்சா… கடிச்சுப் பார்க்க முடியாதா?பொட்டச்சியாலே ஆம்பளைய மீற முடியுமா?” “பொட்டச்சி சம்மதமில்லாம, பொடி ரோமத்தைக்கூட தொட்டுர முடியாது. தெரியுமா?” 

தோளில் கை வைத்தான். அழுத்தினான். தோளைப் பற்றிய வேகத்தில் சுழற்றி இழுத்தான். நெஞ்சில் மோதிச் சாய்ந்த அவளை அப்படியே இறுக்கினான். 

“பூ மாதிரி பொண்ணு. ஆம்பளை நெனைச்சு அமுக்குனா… தப்பிச்சிட முடியுமா? பொட்டச்சின்னா… அடங்கித்தானே ஆகணும்? ஆம்பளைன்னா மேலேதான்… பொம்பளைன்னா கீழ்தான். தெரியுமா? காலங்காலமாகதை இதுதானே?” 

அவளது நடு முதுகில் அவனது வலது கையின் மூர்க்க இறுக்கம். 

மிரட்டலான குரலில், “வுட்ருங்க… வுட்ருங்க… ஞாயமில்லே, ஒங்களுக்கு நல்லதுல்லே,” என்கிறாள். அவளது அச்சுறுத்தும் குரலின் தொனி, அவனைச் சீண்டுகிறது. 

அவள் கண்ணில் கலக்கமில்லை. நடுக்கமில்லை. பதைப்போ… மிரட்சியோயில்லை. பயமற்ற அவளது முகம், அவனது ஆண் கர்வத்தை சீண்டியது. அவனை வெறி கொள்ள வைத்தது. 

‘பொட்டச்சின்னா… தாழ்த்திதான்’ என்று அவளை உணர வைக்க வேண்டும் என்கிறவன் வெறி. 

அவளது உடல் சூடு தருகிற உன்மத்தம். ஆணாதிக்கத் திமிரோடு சேர்ந்து கொண்ட காம மூர்க்கம். 

“என்னடி, நல்லதுல்லே? அத்துவானக் காடு. ஊருணிக் கிடங்கு. கொலை நடந்தாலும் வெளியே தெரியாத மறைவு. இங்க… அப்படியே பூப்பந்தா ஒன்னைத் தூக்கி… மலர்த்திப் போட்டு… நாசக்காடு பண்ணுனா… ஒன்னாலே என்ன செஞ்சுர முடியும்?” 

இறுக்குகிற அவன். திமிறுகிற அவள். மூச்சுத் திணறுகிறது. “நா என்னைக் காப்பாத்திக்கிட முடியும். ஆனா உங்க ஜென்மம் நரகமாயிரும்.” 

திணறலிலும் அச்சுறுத்துகிற அவள். அது அவனை மேலும் வெறியேற்ற… 

பூப்போட்ட பாவாடையை… நாடாவை உருவி நழுவ விட்டான், இடது கையால் இறுக்கிப் பிடித்துக் கொண்டு வலது கையால் அவளது மேல் சட்டையை மேல் நோக்கி உயர்த்தினான். திமிறி மீறுகிற அவளது முகத்தை எச்சிலாக்குகிற அவனது முரட்டு யத்தனிப்பு. 

முழுமையாகிவிட்ட அவனது ஆக்ரமிப்பு. மீளமுடியாத முற்றுகைக்குள் நிர்வாணமாகிற தேகம். அவளுள் ரௌத்ரம். பொங்கிச் சீறுகிற மனத்தீ. பத்ரகாளியாக ருத்ரமாகிற உக்கிரம். பரபரப்பாகிற பூச்சி. 

அவளது இடது கை உயிர்த் தலத்தை அழுத்தமாகப் பற்றியது. 

உச்சந்தலையில் உலக்கையடி வாங்கிய பன்றியைப்போல துடித்தான் வெள்ளையன். 

“ஐயோ…” என்று கத்தக்கூட முடியாமல், அப்படியே உள் மடங்காக குன்றிக் குனிந்த அவன். 

தரையில் உட்கார்ந்து சுருண்ட அவனால், உட்காரவும் முடியாமல், சரிந்து துடிக்கிற அவனை எரிக்கிற சூரிய வெயில். 

தரையில் கிடந்த பாவாடையை உயர்த்தி இடுப்பில் கட்டிக் கொள்கிற பூச்சி, புழுவைப் பார்ப்பதுபோல அவனது துடிப்பையும், கதறலையும் கேட்கிற அவள். 

பத்ரகாளியாக – ருத்ரகாளியாக – கற்காலத்து தாய்வழிச் சமூக ஆதிப் பெண்ணாக கனன்ற நிலையில் நகர்கிற பூச்சியை… காதுகள் விடைக்கப் பார்க்கிற வெள்ளாடுகள். 

ஜனவரி 2009, கோகுலம் கதிர்.ஆதிகாலத்தீ 

– ஜனவரி 2009, கோகுலம் கதிர்.

– அக்னி வாசம் (சிறுகதைகள்), முதற்பதிப்பு: டிசம்பர் 2009,கங்கை புத்தக நிலையம், சென்னை.

மேலாண்மை பொன்னுச்சாமி மேலாண்மை பொன்னுச்சாமி (செ. பொன்னுச்சாமி; கலைக்கண்ணன்; அன்னபாக்கியன்; அன்னபாக்கியச் செல்வன்; ஆமர்நாட்டான்) (1951- அக்டோபர் 30, 2017) எழுத்தாளர். வட்டார வழக்கில் பல சிறுகதைகளையும், புதினங்களையும் படைத்தார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்து செயல்பட்டார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார். மேலாண்மை பொன்னுச்சாமி படிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். கல்வி தடைப்பட்டதால் நாளிதழ்கள், நூல்கள் வாசித்து தனது வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். வாசித்த ஜெயகாந்தனின் நூல்கள் இவருள்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *