சல்மா (பி. 1968)
சல்மா (Salma) ஒரு தமிழ்ப் பெண் கவிஞர் மற்றும் அரசியல்வாதி. இவர் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் பிறந்தார். இவர் தொண்ணூறுகளின் இறுதியில் எழுதத் தொடங்கினார்.
இயற்பெயர் ராஜாத்தி (எ) ரொக்கையா. திருச்சி மாவட்டம் பொன்னம்பட்டி சிறப்பு ஊராட்சி மன்றத் தலைவியாகவும் சமூக நலத்துறை வாரியத் தலைவியாகவும் பணியாற்றினார். இரண்டு கவிதைத் தொகுப்புகள், ஒரு நாவல், ஒரு சிறுகதைத் தொகுப்பு வெளிவந்துள்ளன. ‘கனவுவெளிப் பயணம்’ என்ற பயணநூலும் வெளியாகி உள்ளது. இவருடைய ‘இழப்பு’ சிறுகதை ‘கதா காலச்சுவடு’ போட்டியில் பரிசு பெற்றது.
சேனல் 4 தயாரிப்பில் இவரது வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்ட ‘சல்மா’ என்கிற ஆவணப்படம் கிம் லாங்கினாட்டோ என்கிற பிரிட்டிஷ் இயக்குநரால் இயக்கப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளின் உலகப்பட விழாக்களில் திரையிடப்பட்டு 14 சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளது. 2006ஆம் ஆண்டு ஃபிராங்பர்ட் புத்தக விழா, 2009 லண்டன் புத்தகக் கண்காட்சி, 2010 சீனாவின் பெய்சிங் புத்தகக் கண்காட்சி ஆகியவற்றில் பங்கேற்றார். சல்மாவின் படைப்புகளை முன்வைத்து நார்மன் கட்லர் நினைவுக் கருத்தரங்கு சிகாகோ பல்கலைக்கழகத்தில் 2007 மே மாதம் நடைபெற்றது.
‘இரண்டாம் ஜாமங்களின் கதை’ ஆங்கிலம், மலையாளம், மராத்தி, ஜெர்மன், கடாலன் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. வோடோ போன் (Vodafone) க்ராஸ்வோர்டு பரிசு, மான் ஆசியா பரிசு ஆகியவற்றின் தேர்வுப் பட்டியலில் இடம்பெற்றது. ‘சாபம்’ சிறுகதைத் தொகுப்பு மலையாளத்திலும் வெளிவந்துள்ளது.
பெற்றோர் சர்புனிஷா, சம்சுதீன். கணவர் அப்துல் மாலிக். மகன்கள் சலீம், நதீம்.
பொன்னாம்பட்டி துவரங்குறிச்சி பேரூராட்சித் தலைவராகவும் இருந்துள்ளார். 2006ல் மருங்காபுரி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார். இவர் பல கவிதை நூல்களை எழுதியுள்ளார். பின்னர் தமிழ்நாடு சமூகநல வாரிய தலைவியாக, கவிஞர் சல்மா நியமனம் செய்யப்பட்டார். தி.மு.க.வில் மகளிர் அணி பிரச்சாரக்குழு செயலாளராக பணியாற்றி வருகிறார்.
சோனாலி நவாங்குலால் மராத்தியில் மொழியாக்கம் செய்யப்பட ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’ நாவலுக்கு மொழியாக்கத்திற்கான சாகித்ய அகாதமி பரிசு கிடைத்தது.
புதினங்கள்
- இரண்டாம் ஜாமங்களின் கதை
- மனாமியங்கள்
- அடைக்கும் தாழ்
சிறுகதை தொகுப்புகள்
- சாபம்
- பால்யம்
தொலைபேசி : 9444918604
மின்னஞ்சல் : tamilpoetsalma@gmail.com