கதையாசிரியர் தொகுப்பு: மோனிகா மாறன்

7 கதைகள் கிடைத்துள்ளன.

ஆழ்துயில்

 

  நிலத்தைச் சுற்றிலும் புங்க மரங்களும்,எட்டி மரங்களும்.புளிய மரங்களும் அடர்ந்திருந்தன.லண்டானா புதர்கள் சிவப்பு,ஊதா,மஞ்சள் ,வெண்மை என வண்ணக்கலவையாக பூத்திருந்தன. ஏரிக்கரையில் அமர்ந்திருக்கிறாள்.ஆனி ஆவணி மாதங்களில் இங்கு வெயில் பார்ப்பதே அரிது.காற்றில் எப்போழுதும் ஈரப்பதம் தான்.ஏரி நீரும் சோம்பலாய் இந்த குளிரை அனுபவிப்பது போல வீசும் காற்றில் அவ்வப்பொழுது சிலிர்த்து,சிறிய அலைகளில் புன்னகைக்கிறது.கரையில் சிவந்த மலர்களும்,இளஞ்சிவப்பு வண்ண ரேடியோப்பூக்களும் அந்த இடத்தை ரம்யமாக்குகின்றன.நீரில் உள்ள பாசிகளும் ,சிறிய சங்குகளும்,சின்னஞ்சிறு மீன் கூட்டமும் கண்ணாடி பிம்பம் போல தெளிவாகத் தெரிகின்றன.அடியிலுள்ள


விசும்பின் துளி

 

  வசு இன்று உனக்கு ஆறாவது கீமோ சிட்டிங்.ட்ரீட்மெண்ட் அறையில் உன்னை விட்டுவிட்டு வெளியில் நிற்கிறேன். இடது கன்னத்தில் எரிகிறது.நேற்று நீ தூக்கி எறிந்த முள்கரண்டி கீறிய வலி.நேற்றிரவு என்னிடம் உக்கிரமாய் சண்டையிட்டாய்.காலையில் ஒன்றுமே நடக்காதது போல குளித்து,எனக்குப் பிடிக்காத ப்ரௌன் வண்ண சுடிதார் அணிந்து போலாமா என்றாய். வசு ஆஸ்பிட்டல என்பது வேப்பமரங்கள்,காகங்கள், நீலநிற அறைகள்,நர்ஸ்கள்,வார்ட் பாய்கள்,அழுகைகள்,ஸ்பிரிட் வாசனைகள் என்று எல்லா ஊர்களிலும் ஒரே மாதிரியானவையே. சென்னை,வேலூர்,பெங்களூர் என எல்லா மருத்துவ மனைகளும் என்னை இம்சிக்கின்றன.


செம்பக வனம்

 

  “சார்வாள்! சொகமாயிரிக்கீறா?” இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் வள்ளிநாயகத்தின் குரலில் குமரித்தமிழ் கொஞ்சியது. “ஜே எம் எஸ் பஸ்ஸுல என்ன கூட்டம்.நல்ல குளுறு வேற. சமுனாமரத்தூர் எப்படி மாறிடுச்சு. நாப்பது வருசமாயிட்டுல்ல. தம்பி கல்யாணங்கெட்டாமலே இருந்துட்டீக. நம்ம ஊரு பக்கம் ஏதாச்சும் நல்ல நாயரு பொண்ண அம்பது பவுனோட முடிச்சிருக்கலா”. நான் சிரித்தேன். “நம்ம எளங்கோவன் மகளாட்டு நாரோல்ல தா கலியாணம் வச்சிருக்கு. நீரு வாரீரு. அந்தால என்னமாச்சும் சொல்லீட்டு இங்கனயே கெடந்தீரு. சவட்டி புடுவேன். ரிட்டைடாயிட்டு


வேழம்

 

  காலை என்பது மலைகளுக்கே உரியது.கோடையிலும் மெல்லிய குளிர் பரவுகிறது.நேற்றிரவு பெய்த கோடை மழை புற்கள் செடிகள் முட்கள் என எல்லாவற்றிலும் பனித்துளிகள் போல ஒளிர்கிறது. ரோஜாவும்,செவ்வந்தியும், யானைக்காது போன்ற சேம்பிலைகளும் நீர்த்துளிகளுடன் காலை சூரியனில் மின்னுகின்றன. கையில் தேநீருடன் நின்றேன்.அவள் வருமுன்னே என்னால் உணரமுடிகிறது.பூவும்,பௌடரும் கலந்த மணம்.கணேஷ்ஷ்ஷ் மெல்லிய சீறலாய் அழைக்கிறாள்.நான் திரும்பாமலே ம்ம்.. என்கிறேன்.நீ ஸ்கூலுக்கு போறதுக்கு முன்ன எனக்கு புக் தந்துட்டு போ. ,…. நைட் ரொம்ப நேரம் லைட் எரிஞ்சிச்சு தூக்கம்


பார் மகளே பார்!

 

  ரூபி உனக்கு ரெஜிஸ்டர் போஸ்ட் வந்திருக்கு. அன்பு மிக்க ரூபிக்குட்டிக்கு,அன்புடன் அப்பா எழுதுவது..ஆண்டவரின் பெரிதான கிருபையினால் நாங்கள் அனைவரும் நலம்.நம் வீட்டின் முன் புறமெங்கும் ஊதாவும் மஞ்சளுமாய் ஒற்றையிதழ் செவ்வந்தி மலர்களும்,ஒயின் சிவப்பும்,பொன்னிறமுமான டேலியாக்களும்,செந்தூரமும் செம்மண்ணும் கலந்த வண்ணமான மெர்ரி கோல்ட் பூக்களும் மலர்ந்து உன் நினைவுகளை எங்களுக்கு அளிக்கின்றன.மகளே, அம்மா இந்த ரூபி இருந்திருந்தால் தோட்டத்திலேயே இருந்திருப்பாளே என்கிறாள்.உன் நண்பிகள் ரீனா,ஜூலி,நான்சி,எல்லோரும் எப்படி இருக்கிறீர்கள்.அறையில் இன்னும் சோப்பங்கப்பா நடனம் நடக்கிறதா? அன்பு மகளே நேற்று