கதையாசிரியர் தொகுப்பு: பா.ஜீவிதா

1 கதை கிடைத்துள்ளன.

கலந்த கனவு

 

  “வசன், வெளியே என்னடா பண்ற காலங்கத்தாலேயே ? உள்ளே வந்து பல்ல விளக்கி புஸ்தகத்தைக் கையில் எடுக்குறத விட்டுட்டு” தாய் கல்யாணியில் குரல். சட்டென எழுந்துத் தன் தாயைக் கட்டியணைத்துக் கொண்டான். காலைக்கடன்களை முடித்துவிட்டு, புத்தகத்தைக் கையில் எடுத்துக் கொண்டு மீள்பார்வை செய்ய அமர்ந்தான். விடுமுறையில் கொஞ்சம் ஆட்டம் போடலாம் என்று தான் நினைத்தான், ஆனால் முடியவில்லை. சிறுவயதிலிருந்தே வசன்ராஜ் எனும் பெயரைச் சுருக்கி வசன் என்றே அழைக்கப்பட்டான். தற்போது தன் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றும்