Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதையாசிரியர் தொகுப்பு: பவித்ரன்

10 கதைகள் கிடைத்துள்ளன.

கொலையும் சா(த்)தியம்

 

  ” சூடான சூடான சுண்டல்.. சுட சுட இருக்கு சார்..”, தனியாக கட்டு மரத்தின் அமர்ந்த என்னிடம் கேட்டான், வேண்டாம் என தலையை அசைத்தேன். அவள் இன்னும் வரவில்லை அவளுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன். கரை ஒதுங்கிய ஒரு செருப்பும், மாலை நாறும்; தூரத்தில் நண்டு மண்ணில் புதைந்து வெளியே வருகையும், அதன் கூர்மையான கால் தடங்கள் ஈர மண்ணில் கோலம் இடாமல் புள்ளி வைத்தார் போல இருக்க; இந்த அலைகளாய் முன் வந்து பின்னே சென்றது என்


வெற்றி முன்னாடி..நடேசன் பின்னாடி..

 

  வெயில் சாய நேரு விளையாட்டு அரங்கத்தின் மின் விளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருந்தன. போகப் போக அம்மின்னொளி படர்ந்து பகல் போல காட்சியளித்தது. எப்போதும் பரபரப்பிற்கு மட்டும் பஞ்சமில்லாத சென்ட்ரல் இரயில் நிலையம் அன்று மாலையும் அவ்வாரே மல்லுக்கட்டியது. கால்பந்து போட்டி நடைப்பெற்றுக் கொண்டிருக்க ரசிகர்களின் ஆரவாரமும், சீட்டிகளும் தனி உற்சாகத்தைக் கிளப்பியது. மக்கள் கூட்டம், கட்டடம் போல் அடிக்கிக் கொண்டு போக, இரயில்கள் தாமதம் எனும் செய்தி தாமதமில்லாமல் ஒலித்தது. “டன்… டன்ன்… டொன்., பயணிகளின்


ஈயும்-தேனீயும்

 

  அது ஒரு அடர்ந்த காடு, அதில் புன்னை மரங்கள் அதிகம். பலவகையான மா மரங்கள் நிறைந்திருந்தன, வரிசையாக நெட்டிலிங்க மரங்கள் உயர்ந்திருந்தன எங்கும் கண்டிராத செயலை மரங்களே அந்தக் காட்டின் அடையாளம். வில்வ மரங்கள், ஆங்காங்கே செம்மரங்கள் மிகவும் பெரிதாக இருந்தது, முற்புதர்களும் சப்பாத்தி கள்ளிகளும் படர்ந்து இருந்தன.சில மூங்கில்கள் முளைத்து பெரிய குத்தாக மாறி இருந்தது. பல வண்ண பூக்கள் மிளிரும் காடு அது. அல்லி மலர்கள் சிறிய குளத்தில் தண்ணீருக்கான அடையாளமே தெரியாமல்


இரண்டு இட்லி

 

  வரிசையில் நின்று கொண்டிருந்தான். அம்மாவுக்கு என்ன வாங்கலாம்? என்று யோசித்துக் கொண்டிருக்கையில், பின்னால் நின்று கொண்டிருந்த ஒருவர், “தம்பி…! அவரு வந்துட்டாரு, நீ போப்பா…!” -என்றார். எழிலும் உள்ளே சென்று பணத்தை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தான். மீண்டும் ஆழ்ந்த சிந்தனையில், அம்மாவுக்கு புடவை வாங்கலாமா? இல்லை இருக்கும் இந்த காசுக்கு ஒரு குண்டுமணி தங்கமாவது வாங்கலாமா? என்று பலவாறாய் யோசித்து நடந்து போய்க்கொண்டிருக்கையில், ஒரு தாய் தன் குழந்தைக்கு உணவு ஊட்டிக்கொண்டிருந்தாள். தன் அம்மாவும்


சரியான இளிச்சவாயன்…

 

  ‘திருவல்லிகேணியிலிருந்து எண்ணூருக்கு போவது சிரமம் தான் அதைவிட வெயில் வேளையில் புழதி மழையோடு மோட்டார் சைக்கிளில் செல்வது மிகவும் கோரம், வேறென்ன செய்வது போய்தானாகாணும், ஏ. சி மெக்கனிக்னா சில்லுனே இருக்குமா, உழைச்சு வியர்வை நாத்தம் வந்தா தான் சாம்பார் வாசனைய நுகர முடியும்’. “ஹலோ …ஹலோ சார்.. கூப்டே இருக்கன்.. எங்கயோ யோசனையா இருக்கீங்க, சரி… எவளோ லிட்டர் ” ” ஏதோ ஞாபகத்தில இருந்துட்டேன்… ஒரு லிட்டர் போடு பா”. “ஆறு மனமே