கதையாசிரியர் தொகுப்பு: சரோஜ் நீடின்பன்

10 கதைகள் கிடைத்துள்ளன.

துளசி, நீ மாடு மேய்க்கத்தாண்டா லாயக்கு!

 

  துளசி என் பள்ளித் தோழன். தெலுங்கு தாய்மொழி ஆயினும் என்னுடன் தமிழ் மீடியத்தில் படித்து வந்தான். அவனுக்கு விளையாட்டுக்களில் ஆர்வம் அதிகம். படிப்பில் நாட்டமில்லை. புத்தகங்களைத் தொடவே மாட்டான். காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் எடுப்பான். இறுதித் தேர்வில் மட்டும் உருப்போட்டுத் திக்கு முக்காடி பாஸாகத் தேவைப் படும் மதிப்பெண்களைப் பெற்று அடுத்த வகுப்பிற்கு வந்து விடுவான். கணக்குப் பாடத்தில் மட்டும் சூரப்புலி! துளசியின் நண்பர்கள் வட்டம் பெரிது. பள்ளிக்கூட நண்பர்கள் மட்டுமல்லாது,


எக்ஸ்சேஞ்ச் ஆபர்

 

  வீட்டில் ஏதாவது பிரச்சனை என்றால் டைனிங் டேபிளில் நான் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது, “உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும், டென்ஷனாகாமக் கேளுங்க” என்று முன்னறிவிப்புக் கொடுத்து என்னை டென்ஷன் படுத்திவிட்டு விஷயத்தைச் சொல்லுவது தான் என் மனைவிக்கு வழக்கம். அன்றும் அதே பீடிகையுடன் ஆரம்பித்து, “நம்ப கம்ப்யூட்டர் அறையிலிருக்கும் டேபிள் பேன் ரிப்பேராயிடுச்சி, ஸ்பீடே இல்லை, சீலிங் பேனும் ட்ராக்டர் மாதிரி சத்தம் போடுது, ரெண்டுத்தையும் மாத்தணும்” என்றாள். நாளில் பாதி நேரம் அவள் அந்த


கர்மயோகி

 

  முனைவர் ராகவன் ஒரு நிர்வாக இயல் கல்லூரியில் பேராசியராகப் பணி புரிகிறார். ஆசிரியப் பணியை விருப்பத்துடன் எடுத்துக் கொண்டவர். ஆகவே உற்சாகத்துடன் பாடங்கள் நடத்துவார். ஒவ்வொரு பாடம் துவங்கும் போதும் அதன் பின்னணிக்கு ஒரு கதையோ அல்லது வரலாற்றுத் துணுக்கோ, ஆச்சரியப் படவைக்கும் புள்ளி விவரங்களைச் சொல்லியோ அல்லது யோசிக்க வைக்கும் கேள்வியைக் கேட்டோ தான் பாடத்தை ஆரம்பிப்பார். பாடங்களில் வரும் விஷயங்களை விளக்கும்போது ஆன்மிகத்திலிருந்தும், அரசியலிலிருந்தும் மேற்கோள்கள் காட்டி விளக்குவார்.. எம்பிஏ படிப்புக்கு ஆங்கிலத்தில்


வேகம்

 

  தேசிய நெடுஞ்சாலை 4. ஹுண்டாய் கார் பாக்டரிக்கு அருகில் சிகப்பு சிக்னலுக்கு நிற்காமல், அந்த மாருதி ஸ்விப்ட் கார் சென்னையை நோக்கிப் பறந்தது. சாலையோரத்தில் இருந்த ட்ராபிக் போலீஸ்காரர் சைகை காட்டியும், விசிலடித்தும் நிற்காமல் வேகமாகப் பறந்தது. போலீஸ்காரர் அந்த காரின் எண்ணை தன் பாக்கெட் நோட்புக்கில் குறித்துக் கொண்டார். அந்தக் காரை ஓட்டிக் கொண்டிருந்த வாலிபன் ஆக்சிலரேடரையும், ஹாரனையும் அழுத்தியபடி முன்னால் செல்லும் வாகனங்களை வேகமாகத் தாண்டிக் கொண்டிருந்தான். அவனால் முந்தப்பட்ட வாகனங்களின் டிரைவர்கள்


முகத்தில் பரு, கண்களில் கண்ணீர், இதயத்தில் ஈரம்

 

  பூஜா கண்ணாடிமுன் அமர்ந்திருந்தாள். நாளை மாலை அவளைப் பெண் பார்க்க வருகிறார்கள். உறவினர் கொண்டுவந்து கொடுத்த போட்டோவில், அவளைப் பார்க்க வரும் மாப்பிள்ளை ஸ்மார்ட்டாக சிரித்துக் கொண்டிருந்தார். அவளுக்குப் பிடித்திருந்தது. பூஜாவின் அப்பா இரண்டு ஜோசியர்களிடம் ஜாதகப் பொருத்தம் பார்த்து நன்றாக இருப்பதாகச் சொன்னார். மாப்பிள்ளை நல்ல உத்தியோகத்தில் கை நிறைய சம்பாதிப்பதாகவும், வேலை நிமித்தம் அடிக்கடி வெளிநாடு போய்வர வாய்ப்பிருப்பதாகவும் அப்பா சொன்னதைக் கேட்டு அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷம். “இந்த வரன் பூஜாவுக்கு வாய்க்கணும்,