கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: July 25, 2021

10 கதைகள் கிடைத்துள்ளன.

நான் TV நடிகனான கதை

 

 நானும் ஒரு டிவி நடிகனாகத் தலை காட்டின ‘சோகக் ‘ கதைய உங்களிட்ட சொல்லித்தான் ஆகவேணும். அதைத் தெரிஞ்சு கொள்ளட்டால் உங்களுக்கு ஒண்டும் ஆகப் போறேல்லை. ஆனால் அதைச் சொல்லாட்டில் எனக்குத் தான் தலை வெடிச்சுப் போயிரும். கொழும்பு வாழ் தமிழ் மக்களுக்கு, அதிலும் குறிப்பாக எங்கிட யாழ்ப்பாணி யளுக்கு ஒரு நல்ல குணம் -ஆரையும் லேசில் நம்பாயினம். சந்தேகக் கண் ணோடதான் எல்லாரையும் பாம்பினம். எந்தப் புத்தில எந்தப் பாம்பிருக் குமோ ஆருக்குத் தெரியும்? அதால


நடக்காதென்பார்… நடந்துவிடும்!

 

 50 வயதில் ரவிக்குமாரின் வாழ்க்கையில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கக் கூடாதுதான்…. ஆனால் என்ன செய்வது?… உலகத்தில் நாகரீகம் வெகுவாகத்தான் மாறிப் போயிருந்தது. வாலிபத்தை முழுமையாகத் திரும்பப் பெறும் மருந்து ஒன்றை இந்தியாவில் ஒரு சித்த வைத்தியர் கண்டுபிடிக்க…. அம்மருந்து உடனேயே உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றது! அதன் காரணமாக ஆங்காங்கே சில நகைச்சுவையான சம்பவங்கள், சில சோகமான சம்பவங்கள், சில கொடூரமான சம்பவங்கள், என அவ்வப்போது நிகழ்ந்து கொண்டிருந்தது…. ரவிக்குமாரின் வாழ்க்கையில் ஒரு கொடூர சம்பவம்….


அவள் அன்பு தேவதையே

 

 வீதியை நோக்கி பார்த்தபடி முன் வாசல் படிக்கட்டில் இருந்து குருவிகள் ரீங்காரமிடுவதையும் வீதியால் வாகனங்கள் செல்வதையும் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான் ரகு. வீதியில் வழக்கத்துக்கு மாறாக வாகனங்கள் மிகக் குறைவாகத்தான் இருந்தன. கொரோனா தொற்று நோய் வீரியம் காரணமாக நடமாட்டம் மட்டுப்படுத்தப்பட்டிருந்தமையால் அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் மட்டுமே சென்றுகொண்டிருந்தன. இது தான் வாகனங்கள் குறைவாக காணப்படுகின்றமைக்கு காரணம். ஆயினும் வழக்கமாக காணக்கிடைக்காத சில குருவியினங்களுடன் பறவைகளின் தொகை அதிகமாகத்தான் காணப்பட்டது. வீதியில் மக்கள் நடமாட்டம் மிகக்குறைவாக இருந்தமையும் வாகன இரைச்சல்


காலம் மறந்த இடம்

 

 அத்தியாயம்:௨ | அத்தியாயம்:௩ துரோகி அந்தச் சில நாட்கள் ஏக்கத்துடனேயே கழிந்தன. லிஸ்ஸுடன் பேசுவதற்குச் சந்தர்ப்பங்கள் ஏதும் வாய்க்கவில்லை. அவளுக்கு மீகாமனின் அறையை ஒதுக்கி இருந்தேன். ப்ராட்லியும் நானும் மேல் தள அதிகாரியின் அறையை எடுத்திருந்தோம். கீழ் நிலை அதிகாரிகள் தங்கும் அறைகளில் ஓல்சன் மற்றும் இரு சிறந்த மாலுமிகளும் தங்கி இருந்தனர். நாப்ஸின் படுக்கையை லிஸ்ஸின் அறையில் போட்டிருந்தேன் அவள் தனிமையை உணராதிருக்க. ஆங்கிலக் கடல் பரப்பை விட்டு வந்தவுடன் பெரிதாக எதுவும் நடக்கவில்லை. கடல்


யார் தான் கொலையாளி?

 

 என் பேரு ஹரி.நான் தான் சென்னை சிட்டியோட நியூ கமிஸ்னர் என்றதும் பத்திரிகையாளர்கள் அனைவரும் சரமாரியாக கேள்விகள் கேட்க அதற்கு ஹரி பதில் கூறும் போதே முகத்தில் சட்டென தண்ணீர்துளிகள் பட்டன. உடனே ஹரி, அம்மா…நா எத்தனை தடவை சொல்லி இருக்கேன், இப்படி என்ன எழுப்பாதனு என்றான். ஹரியின் அம்மா வேணியோ,இப்பிடியே கனவு கண்டுடே இரு, நீ இன்ஸ்பெக்டர் ஆயி ரெண்டு வருஷம் ஆச்சு,முதல்ல ஒரு கல்யாணம் பன்னு அப்புறம் கமிஷனர் ஆகலாம் என்றாள். அவனோ என்


எனக்கான காற்று

 

 இன்றைக்குத் தூங்கி எழுந்திருக்கும் போதே காலை 7 மணி. கண்ணிமைகளைத் திறக்கவே முடியவில்லை. விடியற்காலை 4 மணி வரை தூங்காமல் இருந்தது அசதியாக இருந்தது. நல்ல வேலை கொரோனா காலம் என்பதால் வேலை செய்யும் அம்மாவும் வரவில்லை. மூன்று மணி நேர தூக்கம கிடைத்தது. சோம்பல் முறித்துக்கொண்டு படுக்கையை விட்டு எழுந்தேன். வீட்டில் ஒரு சத்தமும் இல்லை. கணவரும் பையனும் எழுந்திருக்க 12 மணியாவது ஆகும். ‌ அடுப்பைப் பற்றவைத்து அவசரமாக ஒரு காபி போட்டுக் குடித்துவிட்டு


ஆட்டோ

 

 பிரபு பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்தான்.. பேருந்துகளின் வித்தியாசமான வேகமான ஹாரன் சத்தங்கள்.. இரண்டு பேருந்து ஓட்டுநர்கள் சீட்டில் இருந்தபடியே வெளியே தலைநீட்டி திட்டிக்கொண்டிருந்தார்கள்.. ஒரு குள்ளமான பெண் பரிதாபமான கண்களுடன் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தாள்.. எதிரும் புதிருமாக அரக்க பரக்க “அந்த பஸ்ஸூ வந்துருச்சா பாரு..?” என்று கேட்டுக்கொண்டிருந்தார்கள்.. பிரபு ஆட்டோ ஸ்டேண்ட் போகலாம் என்று நினைத்தபோது அந்தாள் வந்து நின்று..;ஆட்டோவா சார்..?” என்றார்.. அவரை மாதிரி பேருந்து வெளியே போகும் கேட்டில் வரிசை போட்டு நின்றிருந்தார்கள்


மஜீத்!

 

 2011 வெளியே மழ இப்பத்தான் விட்டுருந்துச்சு.மழ விட்டுட்டுப் போன குளிர்சில இந்த உச்சி மத்தியானம் கூட குளுகுளுன்னு இருக்கு.மழ விட்ட தைரியத்துல ஈஸி சேர போர்டிகோல கொண்டாந்து போட்டுச் சாஞ்சிகிட்டு அந்த சிலுசிலுப்ப மேல்ல வாங்கிகிட்டேன். எப்படா மழ விடும்னு காத்துகிட்டு இருந்தமாதிரி வாசல்ல ரெண்டு சிட்டுகுருவி ங்க வந்து கீச்சு கீச்சுன்னு என்னமோ பேசிகிட்டு என் கண்ணுக்கு தெரியாத அதோட இரையக் கொத்திகிட்டு இருந்துச்சுங்க. அப்பப் பார்த்து இந்த பக்கத்து வீட்டு வாண்டு ஒரு வெடி


ராமனாதனின் கடிதம்

 

 யாருக்கு எழுத… எல்லாருக்கும்தான்… நாளைக்கு இந்நேரம்… ‘சற்றுப் புத்தி சுவாதீனமில்லாதபொழுது பிராணத்யாகம் செய்து கொண்டான்’ என்ற தீர்ப்புக் கூறியாகிவிடும். ‘சற்றுப் புத்தி சுவாதீனமில்லாதபொழுது’ அட முட்டாளே! உனக்குத்தான் அப்படி. இந்த இரண்டு கால் ஓநாய் இருக்கிறதே அதற்கு வெறி… சீச்சி! உன்னைப்பற்றி எனக்கென்ன! நாகரிகம், நாகரிகம், படிப்பு, அந்த இழவுதானே! என்னை என் இஷ்டப்படி செய்து கொள்ள உரிமையில்லையாம்! உன்னைக் கேட்டுக்கொண்டா நான் பிறந்தேன்? நான் துடிதுடித்துக் கொண்டு இருந்தேனே. அப்பொழுது வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க உரிமையுண்டு


ஆறுகால்மடம்

 

 என்னுரை யாழ் இந்துக்கல்லூரியின் , நூற்றாண்டு நிறைவு ஆண்டில், அக்கல்லூரியில் க. பொ. த. சாதாரணதர மாணவனாக இருந்த 1957 ஆம் ஆண்டுக்கால கட்டத்தில் என்னால் எழுதப்பட்ட ‘ஆறுகால் மடம்’ என்ற சிறுவர் நாவல் இன்று எதுவிதமாற்றமுமின்றி வருவதில் மகிழ்ச்சி அடைகின்றேன். அக்காலத்தின் சிறுவர் பத்திரிகையாகத் தமிழ் நாட்டிலிருந்து வெளிவந்த ‘கண்ணன்’ என்ற பத்திரிகை நடத்திய தொடர்கதைப் போட்டிக்காக எழுதப்பட்டு, அனுப்பப்பட்டு, கண்ணன் ஆசிரியரால் பாராட்டப்பட்டது. பின்னர் 1965 ஆம் ஆண்டில் ‘சுதந்திரன்’ பத்திரிகையின் ஆசிரியராக இருந்த