சிறுகதைகள் (Short Stories in Tamil)
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்
google-play-storeiOS-App-Store

view this email online

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

https://www.sirukathaigal.com/2022/04/11/

வைரமலை

 
 

நன்கு முடிவுறின் நலமே யனைத்தும்

 
 

கிராதார்ஜுனீயம்

பாகம் நான்கு | பாகம் ஐந்து ஒரே சமயத்தில் சிவனுடைய , அர்ஜுனனுடைய இருவரின் பாணங்களும் காட்டுப் பன்றியின் மீது தைத்தன. வேடன் உருவில் உள்ள சிவ பெருமான், ஒரு காட்டுவாசியை அர்ஜுனனிடம் அனுப்பி வைத்தார். அவன் அர்ஜுனன் சமீபம் வந்து போற்றி வணங்கி கூறுகிறான், “ஐயா, நீங்கள் அரசர்களில் சிறந்தவர் என்று நினைக்கிறேன். அதனால் எனது வணக்கங்களை உங்களுக்குத் தெரியப்படுத்திக் கொள்கிறேன். இந்த காட்டுப் பன்றியின் மீது பதிந்துள்ள பாணம் எங்கள் எஜமானருடையது. மஹாபுருஷரே, சிவனுடைய

 

களையெடுப்பு

பதவி உயர்வுடன் கிடைத்த இடமாற்றக் கடிதத்துடன் அந்த வங்கியின் கடமைகளைபொறுப்பேற்பதற்காக வந்திருக்கின்றேன்,வாடிகையாளர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கடன்கள்,மற்றும் நிலுவைகள் பற்றிய விபரங்களை பரிசீலித்துக்கொண்டிருக்கின்றேன், குறைந்தது இன்னும் மூண்றுநாட்களின் பின்புதான் முகாமையாளரின் ஆசனத்தில் அமரலாம் என நினைகிறேன்,அதன் பின்னர்தான் ஏற்கனவே கடமையாற்றிக்கொண்டிருக்கும் முகாமையாளரை அவருக்கு கிடைத்திருக்கின்ற கிளைக்கு சென்றுவிடுவார். காலை பத்து மணி “சார் சுகமாக இருக்கிறீர்களா”தேனீர்கப்புடன் என் முன்னால் நின்றுகொண்டிருந்தான்அங்கு சிற்றூளியனாக கடமையாற்றும் அருதயன், ”ஆ ..அருதயன் நீ எப்படி சுகமாக இருகிறாயா” பதிலிக்கு நானும் அதே வினாவை அவனிடம்கேட்டு

 

டாக்சி டிரைவர்

மனைவியின் நகை, பத்து வருசம் வேலைக்கு போய் சம்பாரிச்சு சேத்து வச்சிருந்த பணம் எல்லாத்தையும் வச்சு ஒரு “செகண்ட் சேல்ஸ்”ல ஒரு காரை வாங்கி வாடகை வண்டியா பதிவு பண்ணி எங்க ஏரியா “கார் ஸ்டேண்ட்ல” உட்கார்ந்து இரண்டு மூணு மாசம் இருக்கும். ஒரு நாள் காலை ஆறு அல்லது ஆறரை இருக்கலாம். டாக்சி ரயில்வே ஸ்டேசன் வரைக்கும் வருமா? தலையை நிமிர்த்தி பார்த்தேன், வயதான ஜோடி, வயது இருவருக்குமே சுமார் எழுபது வரை இருக்கலாம். கையில்

அவளுக்கு பதில் இவள்…!

சிவபாலனுக்கு மண்டை காய்ந்தது..தடவித் தடவி தலை வழுக்கையானதுதான் மிச்சம்.. “ஏன்யா…இளங்கோ.. இப்படி ஒரு குண்டத்தூக்கி போடுறியே..! போனவாரம் தான் அந்த பாட்டி கேரக்டர் சீரியசாயிருக்குன்னு சொல்லி ஒரு வழியா அவுங்களுக்கு மங்களம் பாடி அனுப்பி வச்சோம்.. இப்ப அப்பா நடிகர் துபாய்க்கு போகப்போறாருன்னு சொன்னா..? “சார்.. நான் எவ்வளவோ கெஞ்சிப் பாத்துட்டேன்..ஒரே பிடியாக நிக்குறாரு சார்.. பையன் உடனே வரச்சொல்லி டிக்கெட் அனுப்பிட்டான்னு சொல்றாரு சார்…!” “இந்த வாரம் தானே அவருக்கு முக்கிய ஸீன்…மருமகள வீட்ட விட்டு

நள்ளிரவு ஒன்றரை மணி

பதின்ம பருவத்திலிருக்கும் ராகுலுக்கு அப்பா இல்லை. ஒத்த பிள்ளையைப் பெற்ற, அநேக அன்னையரைப் போல், அவன் பத்து வயது வரை அவன் கால்கள் தரையில் படாத வண்ணம் பார்த்துக்கொண்டாள் அவள் அன்னை. இப்போது குடும்ப பொருளாதாரம் கருதி, இரவு பகலாய் வேலை பார்க்கலானாள் அவ்வன்னை. ஒரு நாள் பின்னிரவு, தன் வேலைகளையெல்லாம் முடித்து விட்டு வீடு திரும்பிய அன்னை, தன் மகன் எதோ ஒரு பதட்ட நிலையிலேயே இருப்பதை பார்த்தாள்… “ராகுல் கண்ணா.. என்னாச்சுப்பா..” ஏன் ஒரு

எங்காத்துக்காரருக்கு அரண்மனை வேலை…!

ஏகாம்பரம் வயது 52. தன் இருக்கையில் அமர்ந்தபடி அக்கம் பக்கம் பார்த்து அலுவலகத்தை நோட்டமிட்டார். சுந்தரியைக் காணோம். ‘அப்பாடா!’ என்று உள்ளுக்குள் நிம்மதி பெருமூச்சு விட்டவர்… அடுத்து அமர்ந்திருந்தவனைப் பார்த்தார். கணேசன் வயது 25. மும்முரமாக இயங்கிக்கொண்டிருந்தான். “உச்..!” அவன் பக்கம் சாய்ந்து மெல்ல சத்தம் கொடுத்தார். அவன் கவனம் இவர் பக்கம் திரும்பவில்லை. இன்னொருதடவையும்…. “உச்!” இந்த முறை ஒலியை கொஞ்சம் உயர்த்திக் கொடுத்தார். ம்ஹும்…அவன் காதில் இவர் அழைப்பு விழவே இல்லை! அதற்கு மேல்

ஆலமரம்

ஊர் எல்லையைத் தொட்டு ஓடிய ரயில் பாதை. சற்று தொலைவில் சின்னச்சின்ன வீடுகளும், குடிசைகளும். இடையே கரடுமுரடான பாதை, சில மரங்கள், அடர்த்தியில்லாத புதர்கள். அங்கே நின்ற ஒரு பிரும்மாண்டமானஆலமரம்! அதன் நூற்றுக்கணக்கான விழுதுகளை மெல்லிய காற்று உசுப்பிவிட, தரையுடன் கொஞ்சின. அந்தஆலமரம் எத்தனை காலமாக அங்கே இருந்ததோ… ஊரில் யாருக்கும் தெரியாது. ஆனால் ஊராரின்இன்பதுன்பங்களை அதுவே சுமப்பது போல அதன் கிளைகள் பரவிக்கிடந்தன. ஆலமரத்தடியில் ரயில் பாதையை நோக்கி ஆவலுடன் உட்கார்ந்திருந்தது ஒரு சிறுவர் கூட்டம்.

 

ஜக்கு

(1952ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 5. இருளில் | 6. நாடகம் நடந்தது “அடேடே, நம்ம எதிர்வீட்டுக் குழந்தையா? நான் யாரோன்னுல்லே பயந்து போய்த் தடியைத் தூக்கிக்கிட்டு ஓடியாரேன்?” என்றான் தோட்டக்காரன். ஜக்குவுக்கு அப்பொழுது தான் நல்ல மூச்சு வந்தது. “நல்ல காலம். யாரோ என்னமோன்னு ஓங்கின தடியை மண்டையிலே பாடாமெ இருந்தாயே!” என்று சொல்லிவிட்டு மாடியை அடைந் தான். ஒரே இருட்டாய் இருக்கவே விளக்கைப் போட்டான். தலையணை

ஆசிரியர் பகுதி:

கதையாசிரியர் பகுதியில் இன்று தோப்பில் முஹம்மது மீரான்பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய பெயர் இங்கே இடம் பெற, உங்களை பற்றி ஒரு பக்க விபரங்களை அனுப்பவும். ஏற்கனவே உங்கள் விபரங்களை அனுப்பி இருந்தால், அதனை கதையாசிரியர் பகுதியில் காணலாம், அடுத்து வரும் செய்திமடலில் இங்கே இணைக்கப்படும்.

முகமது மீரான் கன்னியாகுமரி மாவட்டத்தில், தேங்காப்பட்டினம் என்ற ஊரில் பிறந்தார். இவரது மனைவியின் பெயர் ஜலீலா மீரான். இவர் 5 புதினங்களையும் 6 சிறுகதைத் தொகுப்புகளையும் சில மொழிபெயர்ப்புகளையும் எழுதி வெளியிட்டுள்ளார். இவரது புதினம் சாய்வு நாற்காலி 1997 இல் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது. தனது 74 வயதில் (மே 1, 2019) உடல்நிலை குறைவு காரணமாக திருநெல்வேலி மாவட்டம், பேட்டை எனும் இடத்தில் இறந்தார்.
Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook Instagram
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2022]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.