சிறுகதைகள் (Short Stories in Tamil)
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்
google-play-storeiOS-App-Store

view this email online

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

https://www.sirukathaigal.com/2022/04/17/

கொழும்பு குதிரை

 எனக்கு நினைவு தெரிந்த நாட்களிலிந்து சைக்கிள் வீட்டிலிருக்கிறது. வாப்பாவிடம் கேட்டபோது அவர் சின்னபிள்ளையாக இருக்கும்போது அவரின் வாப்பா கொழும்பிலிருந்து கொண்டு வந்தது என பெருமையாக சொல்லுவார். சைக்கிளின் பின்பக்கம் இரண்டாக மடக்கி சிறிதாக்கிக் கொள்ளும் வசதியோடு ஒரு பெரிய கேரியர் உண்டு. ஒரு பங்சர் பெட்டி வேறு சைக்கிளோடு கூடவே இருக்கும். நாங்கதான் வெட்கப்பட்டு வாப்பா எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் பங்சர் பெட்டியை பிரித்து எடுத்தோம். சைக்கிள் சக்கரத்திலுள்ள கம்பிகளெல்லாம் ரொம்பவும் தடிமனானது. இப்போதுள்ள சைக்கிள்களிலெல்லாம் அப்படியான

அம்மாவின் பெட்டி

அம்பத்தூரில் வசிக்கும் தங்கை கலாவிடமிருந்து ராகவனுக்கு அலைபேசி அழைப்பு. “அண்ணே, அம்மாவுக்கு கொஞ்சம் ஒடம்பு அதிகமா இருக்கு. ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போறேன்னா வரமாட்டேன்னு அடம்…” “என்ன ஒடம்பு அவங்களுக்கு? நல்லாத்தானே இருந்தாங்க…” “ஆமாண்ணே. போன வியாழக்கிழமை வீட்டுல பூஜை வெச்சிருந்தேன். நிறைய டெவோட்டீஸ் வந்திருந்தாங்க. சுவாமிக்கு அலங்காரம், புஷ்ப ஜோடிப்பு எல்லாம் அவங்கதான். வழக்கம்போல வந்தவங்க சிலர் கிட்டே மூஞ்சியைத் தூக்கி வெச்சிகிட்டு, எரிஞ்சு எரிஞ்சு விழுந்தாங்க. வழக்கமா கூட்டு வழிபாட்டுக்கு வர்றவங்க எல்லோரும் என் மேல

அப்பா என்ற ஆகாசம்

காரில் பின் சீட்டில் சாய்ந்து உட்கார்ந்தாள் அனுராதா. அவள் கண்களில் இருந்து கண்ணீர் தானாக வழிந்து கொண்டிருந்தது.அவள் அருகில் ஏழு வயது தனுஜா உட்கார்ந்து கலங்கி அழும் அம்மாவின் கண்ணீரைத் தன் பிஞ்சு கரத்தினால் துடைத்தாள். முன் சீட்டில் டிரைவர் மாணிக்கத்தின் அருகில் பூவராகன் உட்கார்ந்து இருந்தான். அவன் மடியில் நான்கு வயது தர்ஷனா அமர்ந்து கொண்டாள். காஞ்சிபுரத்தில் இருந்து சென்னையை நோக்கி கார் புறப்பட்டது. சென்னையில் வடபழனியில் அனுராதாவின் பிறந்த வீடு. அனுராதாவின் அப்பா ராஜாமணி

காளியின் கண்கள்

 (1943ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 1 கிருஷ்ணகிரி அரசன் வீரமார்த்தாண்டன் மைசூர் ராஜ வம்சத்தில் பிறந்த ஒரு சிற்றரசன்; அமோகமான ஐசுவரியத்துக்குத் தலைவன். புகழ் பெற்ற கோமதி வைரங்கள் இரண்டும் அவனிடத்தில் இருந்தன. வைரமொன்று ஓர் எலுமிச்சம்பழம் அவ்வளவு பெரியது. விலை மதிக்க முடியாத இவ் வைரங்கள் ஒரு காலத்தில் ஸோமநாத் கோயிலுக்குச் சொந்தமாயிருந்தன என்றும் அவை எப்படியோ வீரமார்த்தாண்டன் வசம் வந்தனவென்றும் ஜனங்கள் சொல்லிக் கொண்டார்கள். கோமதி

புழுக்கம்..!

ஒரே புழுக்கமா இருக்கே … குளிக்கலாமா என்று நினைத்துக்கொண்டே துண்டை கையிலெடுத்தேன், அப்போது இண்டர்காம் சிணுங்கியது. யாரு இந்நேரத்துல என்று நினைத்தபடியே ரிசீவரை எடுத்தேன்.’ஹலோ… நான் முடிக்கும் முன் ‘சார், நா செல்வா ஹோட்டல் ரெசெப்க்ஷனிஸ்ட் பேசறேன்’. ‘எஸ்’…என்றேன் ‘சார் யாரோ கலைவாணியாம், லைன்ல இருக்காங்க, ஒங்க கூட பேசணுமாம், லைன் குடுக்கட்டுமா…? ‘ம்ம்ம்…’ ‘சார் நா கலை பேசறேன்.. சாரி டு டிஸ்டர்ப் யு. ஒங்ககிட்ட கொஞ்சம் பெர்சனலா பேசணும். ப்ரியா இருக்கீங்களா? எப்ப வரலாம்

பெயர் மாற்றம்! – ஒரு பக்க கதை

“யாரோ உங்களைப் பார்க்க வந்திருக்காங்க, ஸார்! மிஸ் இந்திராவாம்; வேலை வேணுமாம், நம்ம ஆபீஸில்” என்று பியூன் வந்து தெரிவித்ததும், மானேஜர் குண்டுராவ், “ஐயையோ! ஒரு தடவை அனுபவப்பட்டது போதும்! இனிமேல் நம்ம ஆபீஸில் எந்த ஸ்திரீயையும் வேலைக்கு வைத்துக் கொள்ள முடியாது! ‘மானேஜரை இப்போது பார்க்கமுடியாது’ என்று அந்த அம்மாளிடம் சொல்லி அனுப்பு, போ!” என்று உத்தரவிட்டார். ஆனால், அந்த உத்தரவைப் பியூன் நிறைவேற்றுவதற்கு முன்னமேயே மிஸ் இந்திரா, “நமஸ்காரம்” என்று கும்பிடு போட்டவாறு மானேஜர்

தென்றல் வந்து தீண்டும் போது

தென்காசி 25 கி.மீ. என்ற அறிவிப்பு பலகையை தாண்டி, நண்பர்கள் இருவருடன், நான்கு சக்கர வாகனத்தை தென்காசி நோக்கி செலுத்திக் கொண்டிருந்தேன். “மச்சி இவன் என்னமோ தென்காசினா அப்படி காத்து அடிக்கும், இப்படி சாரல் அடிக்கும்னு விதம் விதமா கத விட்டான், ஆனா வெயில் இப்படி மண்டய பொளக்குது!” என்றான் கௌதம். “அட பக்கி… அவன் சொன்னதல்லாம் நீ நம்பவா செஞ்ச? இந்த உலகத்துல எவன்டா அவனோட சொந்த ஊர பத்தி உண்மைய சொல்லியிருக்கான்? கொஞ்சம் எக்ஸ்டிரா

முன்னதாகவே வந்திருந்து…

பதினாலு வருடங்கள் என்பது ஒரு ஜெனரேஷன் என்று கணக்கு வைத்தால் சிவ முதலியார் ஐந்து ஜெனரேஷன்களைக் கடந்தவர். நல்லது கெட்டது எதுவாயிருந்தாலும் பத்திரிகையோ அழைப்போ வந்துவிட்டால் மட்டுமில்லை… தகவல் காதில் விழுந்துவிட்டால் கூடப் போதும், “பல வேலைகள்’ல நம்மை மறந்திருப்பாங்க …!” என்று சமாதானப்படுத்திக்கொண்டு, நேரில் சென்று கலந்துகொண்டு திரும்பவேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருப்பவர். அறுபத்தைந்து வயது வரை வீட்டில் யாரும் அவருக்குத் தடை சொல்லவில்லை. அறுபத்தைந்தாவது வயதில் ஒரு சஷ்டியப்தபூர்த்தி வைபவத்திற்காக திருக்கடையூர் சென்றபோது பஸ்ஸில்

அரம்பை

நான் மாலையில் வீடு திரும்பும்போது, என்னுடைய குதிரை வண்டிக்குக் குறுக்கே சென்ற குடிகாரர்கள் இருவரை வண்டிச் சாரதி சவுக்கால் அடித்துவிட்டான். “இறைவனால் கட்டப்பட்ட இலண்டன் நகரம் இப்போது குடிகாரர்களதும் போக்கிரிகளதும் சத்திரமாகிவிட்டது” எனச் சலிப்பாகச் சொல்லிக்கொண்டே, இரட்டைக் குதிரைகளை அவன் விரட்டினான். விடிந்தால் 26-ம் தேதி ஜூலை 1833. பிரிட்டிஷ் சாம்ராஜியத்தின் வரலாற்றில் மிக முக்கியமான நாள். எங்களது காலனிய நாடுகளில் அடிமை முறையை ஒழிப்பதற்கான மூன்றாவது சட்டவாக்க வரைவு நாடாளுமன்றக் கீழவையான பொதுச்சபையில் விவாதத்திற்கு வரயிருக்கிறது.

 

ஜக்கு

(1952ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 7. ஊர் திரும்புகிறான் | 8. வரவேற்பு ஜக்குவுக்குத் தஞ்சாவூர் ஸ்டேஷனில் குதூகலமான வரவேற்புக் கிடைத்தது. அவன் ஒருவருக்கும் தெரியாமல் லயன் கரை வழியாக ஊருக்குள் இறங்கிப் போய்விடலாம் என்று எண்ணினான். ஆனால் ஸ்டேஷனில், “இதோ இருக்காண்டா ஜக்கு!” என்று ஒரு குரல் வீச்சென்று கேட்டது. திரும்பிப் பார்த்தால், சீதாராமன் கையில் ஒரு சின்ன மாலை யுடன் வண்டிக்குள் ஏறி வந்துகொண்டிருந்தான். யாரோ

ஆசிரியர் பகுதி:

கதையாசிரியர் பகுதியில் இன்று ஜே.வி.நாதன் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய பெயர் இங்கே இடம் பெற, உங்களை பற்றி ஒரு பக்க விபரங்களை அனுப்பவும். ஏற்கனவே உங்கள் விபரங்களை அனுப்பி இருந்தால், அதனை கதையாசிரியர் பகுதியில் காணலாம், அடுத்து வரும் செய்திமடலில் இங்கே இணைக்கப்படும்.

ஜே.வி.நாதன் சிதம்பரத்தில் பிறந்தவர். கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக வேலூரில் வாசம். ‘ஆனந்த விகடன்’ நிறுவனத்தில் ஆசிரியர் இலாகா செயல் அலுவலராகவும், அப்போதைய விகடன் எம்.டி.யான திரு எஸ். பாலசுப்ரமணியன் அவர்களுக்கு நேர்முக உதவியாளராகவும் பணியாற்றியவர். விகடனுக்குப் பிறகு, ‘ஜன்னல்’ மாதமிருமுறை இதழில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தார்.
Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook Instagram
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2022]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.