கதைத்தொகுப்பு: ஒரு பக்க கதை

546 கதைகள் கிடைத்துள்ளன.

மாற்றம் – ஒரு பக்க கதை

 

 மகாத்மா காந்தி சிலை கம்பீரமாக நின்றது. சிலைக்கு எதிரே ஒரு கடை உதயமானது. திறப்பு விழா அன்றுதான் தெரிந்தது அது ஒரு மதுக்கடை என்று. மது அருந்திவிட்டு மகாத்மா காந்தி முன் களித்தனர் மதுப் பிரியர்கள். முகம் சுழித்தனர் ஊரார். கலெக்டருக்கு மனு போட்டார்கள். அரசியல் செல்வாக்கு கலெக்டரின் கைகளைக் கட்டிப் போட்டது. மதுக் கடையை அகற்ற முடியாது என்பதை உணர்ந்தார் கலெக்டர். தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி மகாத்மா காந்தி சிலையை வேறு இடத்திற்கு மாற்றினார். ஏதோ


அன்புள்ள அப்பா – ஒரு பக்க கதை

 

 திருவிழாவில் ஜேஜே என்ற திரளான கூட்டம். திரும்பிய இடமெல்லாம் மனித தலைகள். அம்மா,நான்,தங்கச்சி உட்டட எல்லாரையும் அரவணைத்து கூட்டிக்கொண்டு வந்தார் அப்பா. பாத்து சூதானமா என்னையே ஃபாலோ பண்ணிட்டே வாங்க. கூட்டத்தில மிஸ் ஆயிடுவீங்க. பின்னாடி திரும்பி பாத்து பாத்து போய்கொண்டே இருந்தார். கூட்டம் குறைவாக இருந்த ஒரு இடத்தில் எங்களை நிற்க வைத்துவிட்டு திரும்பிய சமயம், அங்கு ஒரு இளைஞன் வம்பு செய்தான் தங்கையிடம். அவ்வளவுதான் அந்த இளைஞனை துவம்சம் செய்தார் அப்பா. அப்படி பார்த்ததில்லை


அலட்சியம் – ஒரு பக்க கதை

 

 சுந்தரேசன் tvs50 யை நிறுத்திவிட்டு வரிசையில் நின்றார். இவருக்கு முன்னால் பத்து பேர். என்ன பெரியவரே இந்த வயசான காலத்துல நேர்ல வந்துதான் கரன்ட் பில் கட்டணுமா? EB க்குன்னு ஒரு App இருக்கு, அதுல கட்லாமில்ல எனக் கேட்டார் ஒரு இளைஞர். நானும் wife உம் தான். Pension credit ஆன உடனே வழக்கமா வந்து கட்டிட்டு போயிடுவேன். இப்பெல்லாம் எங்க போனாலும் digital payment தான். கைல பணம் கொண்டு போறதே இல்ல. ஈசியா


ஆடி அடங்கல் – ஒரு பக்க கதை

 

 மாடிப் பால்கனியிலிருந்து ஹரிணியின் பெற்றோர் எதிர் வீட்டு ரோமியோ ‘ஹரனை’க் கண்காணித்தார்கள். மகள் ஹரிணி ஆபீஸ் கிளம்புகிற போது அவளைப் பார்த்து ஹரன் செய்யும் சேட்டைகளை செல்போனில் வீடியோ எடுத்தார் தகப்பன் குரு. “ஹரனோட தகப்பனுக்கு இந்த வீடியோவை அனுப்பி. இதுக்கு ஒரு முடிவு கட்டறேன்.!.” என்று கருவினார். அப்போது ‘க்ளிங்..’ என வாட்ஸ் ஆப் மெசேஜ் வந்தது குருவிற்கு. ‘அரசு உயர் பதவி வகிக்கும் என் மகனை வளைத்து போடப் பார்க்கும் உங்கள் மகளைக் கண்டித்து


வஞ்சம் – தஞ்சம் – ஒரு பக்க கதை

 

 ஊரே மெச்ச நடந்தது சரவணன்-மீனாட்சி நிச்சயதார்தம். கல்யாணத்துக்கு ஒரு வாரம் முன்னால் மீனாட்சிக்கு சிறு தீவிபத்தில் கழுத்துக்கு கீழ் வெந்துபோக தசைகள் சுருங்கி சற்று விகாரமானது. பெண்வீட்டார் போனை சரவணன் வீட்டில் யாரும் எடுக்கவில்லை. சரவணன் கூட மீனாட்சியின் போனை தவிர்த்தான். நிச்சயம் தானே நடந்துருக்கு.. நிறுத்திடலாம் என்றனர் கூலாக. உறுவகேலி செய்யாமல் செய்துகாட்டினர். மாதங்கள் கடந்தன. ஒரு வளைவான பாதையிலே விபரீத விளைவு. சிறுமூளை மயக்கநீர் அருந்தியதால் கட்டுப்பாடிழந்த பைக். சரவணன் கால்முறிந்து இன்று மருத்துவமனையில்.


காலமே கெட்டுக்கிடக்கு – ஒரு பக்க கதை

 

 கண்ணாடியின் முன் காஸ்மெட்டிக்ஸோடு கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் உட்கார்ந்ந்தாள் ஹரிணி. முழு நிலவாய் முகம் பிரகாசிக்க பீரோவைத் திறந்தாள். ‘எந்த டிரஸ் போடலாம்!’ என அரை மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசித்து, சந்தனக்கலர் உடுப்பில் தேவதையாய் ஒளி வீசினாள். கல்லூரிக்குச் செல்லும் ஹரிணியை வழியனுப்ப வாசலுக்கு வந்தாள் பாட்டி. பரட்டைத் தலையும், அஜித் மீசையுமாய் கூலிங் கிளாஸ் அணிந்து ஹீரோ போல் புல்லட்டில் கிளம்பிய எதிர்வீட்டு ஹரன் கண்ணில் பட, பாட்டியின் வயிறு சொரேர் என்றது. ‘காலம்


காதல் கொடூரன்! – ஒரு பக்க கதை

 

 மற்றொரு கொலைக்குத் தயாராகிவிட்டான் சுந்தர்…..அழகான பெண்களாகத் தேர்ந்தெடுத்துக் காதல் வலையில் சிக்க வைத்துக் கொலை செய்துவிடும் ‘காதல் கொடூரன்’ அவன்! இன்று கீதா! முதல் சந்திப்பிலேயே அவனிடம் மனதைப் பறிகொடுத்தவள்; இரண்டாம் சந்திப்பில், “I love you” சொன்னவள்; அவன் அரவணைப்புக்காக மூன்றாம் சந்திப்பை எதிர்பார்த்துக் காத்திருப்பவள். கீதாவை முதல் முறை சந்தித்த போதே தன் அப்பாவிடம், “கீதா ரொம்ப அழகுப்பா” என்றான் சுந்தர். “ஐயய்யோ…ஆபத்துடா…உலகம் தாங்காதுடா மகனே. அழகான பெண்கள் அத்தனை பேரும் துரோகிங்க; ஆபத்தானவங்க.


வெறியேற்றல் – ஒரு பக்க கதை

 

 ஆங்கில விரிவுரையாளர் பரதன் போர்டிகோவில் உட்கார்ந்து ஆங்கில நாளிதழ் படித்துக் கொண்டிருந்தார். வாசல் கேட்டுக்கு வெளியே நின்று யாரோ அழைப்பு மணி அடித்தார்கள். உட்கார்ந்த இடத்திலிருந்து யாரென பார்வைக்குத் தெரியாததால் “கதவு திறந்துக்கிட்டு உள்ளே வாங்க..” என்று குரல் கொடுத்தான் பரதன். ஒரு மாணவன் தயங்கித் தயங்கி உள்ளே வந்தான். “யார் நீ..?” என்று கண்களாலேயே கேட்டார் பரதன். “சார்..நான் அரசுப் பள்ளீல 9வது படிக்கறேன். என் அண்ணன் காலேஜ்ல உங்க மாணவன் சார். எனக்கு உங்க


ஹாப்பி ஹனி ட்ராப் நியூ இயர் – ஒரு பக்க கதை

 

 டிடக்டிவ் ஹரனுக்கும் ஹரிணிக்கும் இது தலைப் புத்தாண்டு. இரவு பதினோரு மணிக்கு ஒரு போன் வந்தது ஹரனுக்கு. “உடனடியாக ஓட்டல் அசோக், ரூம் நம்பர் 8 க்கு வா, ஒரு ஹனி ட்ராப் செய்யணும்”. போன் செய்தவன் ஹரனுடன் பணி புரியும் அவன் ஆருயிர் நண்பன் தாமஸ். ‘அருகில்தானே இருக்கிறது ஓட்டல், போய்விட்டு வந்துவிடலாம்’ என்று “இதோ வந்துடறேன் டியர்…” என்று சொல்விவிட்டு அவசரமாய்க் கிளம்பினான் ஹரன். ஹரன் புறப்பட்ட சிறிது நேரத்திற்கெல்லாம் யாரோ வந்து கதவைத்


சர்க்கஸ் – ஒரு பக்க கதை

 

 பார் விளையாட்டு முடிந்தது. கோமாளி பொத் என்று விழுந்தான். பார்வையாளர்கள் கத்திக் கை தட்டி ஆரவாரித்தனர். கூண்டோடு வந்தது சிங்கம். கூண்டைத் திறந்தனர் பணியாளர்கள். கர்ஜித்துக் கொண்டே பாய்ந்தது சிங்கம். பார்வையாளர் மொத்தமும் திகிலில் இருந்தார்கள். ஹ ஹீ..ஹ..கீ…ய்…என்று வாயால் வித்தியாசமாகக் கத்தி கையில் இருந்த சாட்டையில் ‘பட்…பட்…பட்…’ என்று ஓசையெழுப்பினார் ரிங்மாஸ்டர். சப்த நாடியும் ஓய்ந்த நிலையில் அந்த ஆண் சிங்கம் பிடரி குலுங்கி ரிங் மாஸ்டர் முன் வந்து வளர்ப்பு நாயாய் வந்து நின்றது.