சிறுகதைகள் (Short Stories in Tamil)
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்
google-play-storeiOS-App-Store

view this email online

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

http://www.sirukathaigal.com/2022/03/20/

பறவைகள்

 அந்த ஏரி பனியால் மூடியிருந்தது. மாலதியும் ஹரியும் தமது நண்பர்களுடன் பனியில் சறுக்கி விளையாடுவதற்காக ஏரிக்கரைக்கு வந்திருந்தனர். இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒருநாள் ஹரியோடு கைகோத்து இந்த ஏரிக்கரை நீரில் கால் நனைய நடந்த ஞாபகம் அவளுக்கு வந்தது. இன்று நீரை மூடிப் படர்ந்திருக்கும் பனியைப் பார்க்க, எவ்வளவு வேகமாக இந்த மண்ணில் எல்லாம் மூடிமறைக்கப் பட்டுவிடுகின்றன என்பதை நினைக்க அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. பறவைகளின் கூக்குரல் கேட்டு அண்ணார்ந்து பார்த்தாள். வெள்ளை நிற சீ-ஹல் பறவைகள்

 

குமார சம்பவம்

பாகம் நான்கு | பாகம் ஐந்து இவ்விதமாக கங்கை கரையில் அடர்ந்து வளர்ந்திருந்த நாணல் புதர்களுக்கு மத்தியில் குமரன் ஜனனம் நிகழ்ந்தது . கங்காதேவி குமாரனை நன்கு கவனித்து வளர்த்து வருகிறாள். ஒரு சமயம் சிவன் பார்வதியுடன் ஆகாய மார்க்கமாக பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர்கள் இருவரும் கங்காதேவியுடன் இருக்கும் குமாரன் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தார்கள். ஈஷ்வரன் குமாரனின் பிறப்பு ரகசியத்தைக் கூறுகிறார் அதனைக் கேட்டு அகமகிழ்ந்த பார்வதி குழந்தை குமரனை கைலாச பர்வதத்திற்கு அழைத்துச் செல்கிறாள்.

 

விடுதலையாதல்!

சாப்பாட்டு மேசை மீது இருந்த டெலிபோன் மீண்டும் அடித்தது. என்ன பார்க்கிறோம் என்ற பிரக்ஞையே இல்லாமல் டிவியின் பிம்பங்களை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த வனிதா எடுக்கலாமா வேண்டாமா என்று யோசித்தாள். அழைப்பவர் யாரானாலும் என்ன விஷயம் பேசுவார்கள் என்று தெரியும். டெலிபோனை எடுத்துப் பார்த்தால் யார் அழைக்கிறார்கள் என்றும் தெரிந்து விடும். பெர்லின் அழைப்பாக இருக்கலாம். சிக்காகோவாக இருக்கலாம். டெல்லியாகவும் இருக்கலாம். ஆனால் எல்லா ஊர்களும் எல்லா அழைப்புக்களும் நினைத்தாலே சோர்வூட்டின. ஒரே மாதிரிக் கேள்விகள்தான் வரும்.

 

மஜ்னூன்

(2008ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அன்புள்ள என்றோ, என் இதயமே என்றோ அல்லது என் உயிரே என்றோ எப்படி தொடங்குவது என்பதில் எனக்குள் நிறைய தடுமாற்றம் ஏற்படுகிறது. எல்லாவற்றையும் உன்னிடம் கொட்டித்தீர்த்துவிடும் உத்வேகத்துடனே எழுதுகிறேன். இது உனக்கு கிடைக்கலாம் அல்லது கிடைக்காமல் போகலாம். இதுபற்றி கவலை கொள்ளும் மனநிலையில் நான் எழுதவில்லை. ஒருவேளை நான் சிறைச்சாலையில் இறந்து போனால் என் சடலம் என்னவாகும் என்பதைக்குறித்து என்னால் இப்போது எதுவும்

 

கவிதை சொன்னா காதல் வரும்!

பேருந்து நிலையத்திலிருந்து வேகமாக வீடு வந்த பிரகாஷ் முதல் வேலையாக தன் கைபேசியில் பிரவீன் எண்ணைத் தேடி அழைத்தான். “என்னடா…” “டேய்.. எனக்கு உடனடியா… ஒரு கவிதை எழுதணும்…” “என்னமோ சர்வர்கிட்ட சாப்பாடு ஆர்டர் பண்ற மாதிரி சொல்ற..” “எப்படி வேண்ணா வச்சுக்க…. பட் ஐ நீட் கவிதை அர்ஜென்ட்..” “என்ன விஷயம்..” “உனக்கே தெரியும் எனக்கு பிரேமி மேல ஒரு இதுன்னு..” “அதுக்கென்ன..” “அவகிட்ட என்னோட லவ்வ சொன்னேன்..” “வாவ்… கங்கிராட்ஸ்…” “இல்லடா.. அவ சொல்றா…

அவளும் அவனும்

அவள்- மலை, பனியுடன் காற்று, பரவசமான குருவிங்க சத்தம்…இதையெல்லாம் நாளைக்கு நான் பாக்கபோறதில்லை ஆனா.. அதே சமயம் என் பிரச்சனை எதுவும் என்னுடன் இருக்காது. கடைசி உறக்கம்; இதுதான் எனக்கு…. அவன்- ஹெலோ… அவள்- (மௌனம்) அவன்- ஹெலோ உங்களைத்தாங்க..? அவள்- யாருங்க நீங்க ..? எதுக்கு என்னைத் தொல்லைப்படுத்தறிங்க..? அவன்- அயயோ.. தொல்லையெல்லாம் இல்லைங்க.. தனியா சாகலாம்னுதான் வந்தேன்; துணையா நீங்களும் கீழே குதிக்கப்போறிங்கன்னு நெனைக்கறேன் அதான். சாகறதுக்கு முன்னமே பேரை தெரிஞ்சிக்கிடா செத்த பிறகு

பெண்மனம்

அவனுடைய மனம் குழப்பமாகவே கிடக்கிறது.எழுத்து வேலையில்,’மனசு இறங்க மாட்டேன்’என முரண்டு பிடிக்கிறது.தேத்தண்ணீர் ஆற்றுறவன் ஆற்றிக் கொண்டே இருக்க வேண்டும்., ம‌ரதன் ஓடுறவன் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். எழுதுறவனும் எழுதிக் கொண்டே இருக்க வேண்டும். முகமூடியைப் போட்டு விட்ட நடிகன் பிறகு அதை கழற்றி வைக்க முடியாதல்லவா. அவன் நிறுத்தி விட்டால், யார் கோகுலனா, அப்படி ஒரு பிறவி இருந்ததா ? புறநாடாக இராது சொந்த நாட்டில் இருந்திருந்தால், அங்கேயும் சொந்தமாக காணி நிலமும் வேண்டுமய்யா, ஒரு

இருவர்

கனிமொழி இடிந்து போயிருந்தாள். அவளுக்கு மனசே சரி இல்லை. ஒரு வீட்டிற்கு இரு வீடு தான் செல்லமாக வளர்ந்து, நிறைவேறுமென்று ஆசையாய் வளர்த்த காதல் இவ்வளவு பெரிய வில்லங்கத்தில் வந்துவிடுமென்று அவள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. எல்லாம் இவள் நேரம். எங்கேயோ பெண்ணாய்ப் பிறந்து பெற்றெடுக்காதவரிடம் அனுமதி கேட்க வேண்டிய கட்டாயம்.! இவள் தகவல் சொன்ன அடுத்த அரை மணி நேரத்திலேயே…பெற்ற தகப்பன் முருகானந்தம் இவள் இருக்கும் வீட்டிற்கு கோபாவேசத்தோடு வந்து விட்டான். இவள் அறைக்குள் கலவரமாக புகுந்தாள்.

அஹிம்சா

 அன்று மாலை மறைந்துகொண்டிருந்த சூரியனின் செங்கதிர்களைவிட அதிகமான சிகப்பு நிற இரத்தம்கசிய ஓர் உடல் தரையில் கிடந்தது. அதுவும் அமெரிக்க தலைநகரான வாஷிங்டன், டி.சி – வெள்ளை மாளிகைஅருகே… ​விற்பனைக்காகக் குவிந்துகிடக்கும் பனியன்கள் நிரம்பிய அந்த சின்ன தள்ளுவண்டியின் அருகே, சற்றுமுன்நடந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிர் போன ஒருவனின் உடல் கிடந்தது. அமொரிக்க தெருக்களில், பள்ளிக்கூடங்களில்,‌ஷாப்பிங் மால்களில், சினிமா அரங்குகளில் – பொதுவாக எங்கே, எப்போது இப்படிகுண்டுக்குப் பலியான உடல்கள் கிடக்கும் என்து மக்களுக்குப் புரியாத ஒரு

 

பொய்க் குதிரை

“வாழ்க்கையே பிடிப்பற்றது; வாழ்வாவது மாயம்!” என்றெல்லாம் நினைவு ஓடிக்கொண்டிருந்தது விசுவத்திற்கு; ஏனென்றால், அன்று ஆபீஸில் அவனுக்கும் சம்பளம் போடவில்லை. வீட்டிலே சாமான் கிடையாது; வாடகைக்காரன் நெருக்குகிறான். மனைவி கமலத்தின் துயரந்தேங்கிய முகம் அவன் மனக்கண் முன்பு நின்றது. பூக்கடைத் தெரு வழியாக நடந்துகொண்டிருக்கிறான். இரவு 7 மணியிருக்கும். மின்சார வெளிச்சமும், டிராமின் கண கணப்பும், மோட்டாரின் கிரீச்சலும் அவன் மன இருளுக்குப் பகைப்புலமாக இருந்தன. ரஸ்தாவின் ஓரமாக, உலகத்தின் பரபரப்பிற்கும், போட்டி ஆவேசத்திற்கும் வழிவிட்டு விலகி நடப்பவன்

ஆசிரியர் பகுதி:

கதையாசிரியர் பகுதியில் இன்று மாலினி அரவிந்தன் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய பெயர் இங்கே இடம் பெற, உங்களை பற்றி ஒரு பக்க விபரங்களை அனுப்பவும். ஏற்கனவே உங்கள் விபரங்களை அனுப்பி இருந்தால், அதனை கதையாசிரியர் பகுதியில் காணலாம், அடுத்து வரும் செய்திமடலில் இங்கே இணைக்கப்படும்.

யாழ்ப்பாணத்தில் வேம்படி மகளிர் பாடசாலை, சுண்டுக்குளி மகளிர் பாடசாலை ஆகியவற்றில் கல்விகற்ற இவர் கொழும்பில் உள்ள மகாராஜா இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தில் கணக்காளராகத் தொழில் புரிந்தார். கனடா நாட்டுக்குப் புலம் பெயர்ந்த இவர் சிற்ரிக்குறூப் நிறுவனத்தில் கணக்காளராகவும், பீல் பிராந்திய கல்விச் சபையில் சர்வதேச மொழித்திட்டத்தின் கீழ் பகுதி நேர ஆசிரியராகவும் கடமையாற்றுகின்றார்.
Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook Instagram
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2022]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.