சிறுகதைகள் (Short Stories in Tamil)
www.sirukathaigal.com
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்

View this email online

சமுத்திரக் கதைகள், சிறுகதைத் தொகுப்பு,
முதற் பதிப்பு: டிசம்பர், 2001
ஏகலைவன் பதிப்பகம், சென்னை - 600 041

http://www.sirukathaigal.com/2021/02/22/

என்னுரை: இந்தத் தொகுப்பில் நான் முழுமையான எழுதிய கதைகளை அப்படியே கொண்டு வந்திருக்கிறேன். இதுவே, இந்தத் தொகுப்பின் பலம், பலவீனமும். ஒரு சில கதைகள், பத்திரிகைகளில் கத்தரித்து வந்ததைவிட, சிறப்புக் குறைவாய் உள்ளதாக எனக்குப் படுகிறது. ஆனாலும், முன்னைய தொகுப்புகளைப் போல் அல்லாமல் பெரும்பாலான கதைகள், எலும்பு கூடாக காட்சி காட்டாமல், ரத்தமும், சதையுமான உள்ளடக்கத்தோடு, எலும்பு,தோல் போர்த்த உருவமாகவும் தோன்றுகின்றன என்று நினைக்கிறேன்.

இந்தத் தொகுப்பில், இன்னொரு முக்கிய சிறப்பு அல்லது அந்த சொல்லுக்கு மாறானது, இவை அத்தனையும் கடந்த இரண்டாண்டு காலத்தில் எழுதப்பட்டவை. எழுத்தைப் பொறுத்த அளவில், என் நோக்கும், போக்கும், அன்று முதல் இன்றுவரை அப்படியேதான் உள்ளது. ஆனாலும், கதை சொல்லித்தனமும், மொழி நடையும், காலத்திற்கேற்ப, என்னை அறியாமலே மாறியிருப்பதாகவே கருதுகிறேன். இதற்கு, இந்தத் தொகுப்பு ஒரு எடுத்துக்காட்டு.

முகம் தெரிய மனுசியும், பெண் குடியும், அந்தக் காலத்து திருவாங்கூர் சமஸ்தானத்தின் சாமானியர்வரலாற்றைகண்டுபிடித்து எழுதப்பட்டமெய்யான கதைகள். இத்தகைய கதைகளை எழுதுவதற்கு தமிழாலய நிறுவனர் பச்சையம்மால் அவர்களே, முழுமுதற் காரணம். இதரக் கதைகளில் பெரும்பாலானவை நான் கண்டதும், கேட்டதுமான நிகழ்வுகள் அல்லது அமங்கலங்கள். இவற்றை நடந்தது நடந்தபடி இயல்பாக எழுதாமல், அதற்கு யதார்த்த முத்திரை மட்டுமே நான் கொடுத்திருக்கிறேன். மற்றபடி, இந்த கதைகளின் உரிமையாளர்கள் இன்றைய நமது மக்களே.

முதுகில் பாயாத அம்புகள்

ராசகுமாரி, அந்தப் பெயருக்கு எதிர்ப்பதமாய் அல்லாடினாள். சண்டைக் கோழிகளான மாமியாருக்கும், அவள் எதிரிக்கும் இடையே உள்ள இடைவெளியில் நின்றபடி இரண்டு கைகளையும் விரித்துப் போட்டு, அவர்களின் மோவாய்களைத் தொட்டாள். பிறகு, தலைக்கு மேல் கரம் தூக்கி அதைக் கும்பிடாக வைத்துக் கொண்டு…

மாடசாமியின் ஊர்வலம்

குதிரைப் பந்தயம் நடக்கலாம் என்று உயர்நீதி மன்றம் அளித்தத் திர்ப்பை, எல்லா பத்திரிகைகளும், இரண்டாவது மூன்றாவது பக்கங்களில், நிதானத்துடன் பிரசுரித்திருந்தன. ஆனால் மாடசாமியின் கண்ணில்பட்ட பத்திரிகை மக்கள் பத்திரிகை, ஆகையால் குதிரைப் பந்தயம் நடக்கும் என்று கொட்டை எழுத்தில் பிரசுரித்திருந்தது. மாடசாமி…

பெண் குடி

ஆரல்வாய் மொழியின் சுற்றுப்புறச் சூழலும், அதன் மடியில் கிடந்த அரண்மனை மாதிரியான அந்த வீடும், பார்ப்பவர்களுக்கு பீதியை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அப்போதைய நாஞ்சில் நாட்டின் வட எல்லையான இந்த ஊரை வளைத்துப் பிடித்திருப்பதுபோல், அதற்கு வடக்குப் பக்கமாய் திரும்பி நிற்பதால் வடக்கு…

கலவரப் போதை

தமிழக அரசின் இ.ஆ.ப. அதிகாரி உக்கம்சிங், தாடி வைத்த சைக்காட்ரிஸ்ட் டாக்டர் ராம் விவேக், பாப் தலை கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட் எஸ்தர், சமூக இயல் விஞ்ஞானி பாப்பம்மா, பென்சில் மீசை வைத்த “மனித உரிமை மகேந்திரன் ஆகியோரைக் கொண்ட அந்தக் குழுவை,…

கடைசியர்கள்

முத்துக்குமார், தேனுக்குள் விழுந்து, இறக்கை நனைந்து தவிக்கும் வண்டு போலவே கிடந்தான். சுருட்டி வைக்கப்பட்ட போர்வைத் துணி போல், உடம்பு முழுவதையும் சுற்றிக்கொண்டு உருளை வடிவமாக கட்டிலில் கிடந்தான். இவ்வளவுக்கும் கொட்டும் பனிக்காலத்தில் கூட, மின் வி சிறியின் சுழற்சிக்கு கீழே,…

அகலிகைக் கல்

எல்லாம் அடங்கிய தாவரசங்கமமே, நித்திரையில் ஒடுங்கிப் போனதுபோல் தோன்றுமே ஒரு நேரம்… இடம், பொருள், ஏவல் என்ற முப்பரிமாண தாக்கங்களைக் கடந்த காலவுதிர் காலம்… அந்த நேரத்தில், ஆயாவிற்கு வழக்கம்போல் விழிப்புத் தட்டிவிட்டது. ஐந்தாறு நிமிடங்கள் முந்தியும், பிந்தியும் வரும், இந்த…

சிலந்தி வலை

இரத்தத்தால் சிவப்பு அடிக்கப்பட்டது போன்ற காவல் நிலையத்திற்குள், சப்-இன்ஸ்பெக்டர் இளைஞன் சாமிநாதன் நுழைந்ததும், மாமாமச்சானாய் பேசிக் கொண்டிருந்த ஏட்டு முதல் இரண்டாம் நிலைக் காவலர்கள் வரை, கப்சிப் ஆனார்கள். காரணம், அவர்கள், அவனை அவனாகப் பார்க்கவில்லை. காக்கி யூனிபாரத்தில் மூன்று நட்சத்திரங்களும்,…

பாமர மேதை

மோதரன், சுற்றியிருந்த ஈரத்துண்டு, அவன் இடுப்பில் இருந்து நழுவி, தொடைகள் வழியாக ஊர்ந்து, முழங்கால்களில் ஓடி, தரையில் குதித்து விழுந்தது. அந்த துண்டுக்கு இருந்த நாணம் கூட, அவனுக்கு இல்லை. கிழே விழுந்த அந்த ஈரத்துணி, யாரையும் பார்க்க விரும்பாதது போல்…

மூலம்

அபலையர் காப்பகம் என்ற பெயர்ப் பலகை, அந்தப் பெயருக்கு உரியவர்களைப் போலவே, எளிமையாகத் தோற்றம் காட்டியது. ஆனாலும், எளிமையும் ஒரு அழகு என்பதை விட, எளிமைதான் எழில் என்பது போல் – அதே சமயம் தான் என்ற கர்வம் இன்றி காட்சியளித்தது.…

முதிர் கன்னி

“எழுந்திருங்க அப்பா…” இனிப்பு வகைகளை உள்ளடக்கிய பொன் நிற அட்டைப் பேழையை, அருகேயுள்ள தொலைக்காட்சிப் பெட்டிமேல் வைத்துவிட்டு, கிதா, ஏதோ ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டிருந்த தந்தை அருணாசலத்தை, அதட்டல் பாவலாவில் கூவி, கையை பிடித்திழுத்தாள். வாசிப்பைக் கலைக்கும் எவரையும் கடுகடுப்பாய்…

நீரு பூத்த நெருப்பு

ராமநாதன் சாஸ்திரிக்காக, பால்கனியிலும் படியோரத்திலும், மொட்டை மாடியிலும் ஒவ்வொருவராகவும், இருவருமாகவும் காத்துக் காத்து கண்கள் பூத்ததுபோல், ஆண்டவனும், அகிலாவும் சலிப்போடு வீட்டிற்குள் வந்து, கதவைச் சாத்தினார்கள். கால்மணி நேரத்தில் காலிங் பெல்லிற்குப் பதிலாக கதவு தட்டப்பட்டது. திறந்து பார்த்தால், ராமநாத சாஸ்திரியே……

பொருள் மிக்க பூஜ்யம்

அந்த கன்றுக்குட்டி, புலிப்பாய்ச்சலில் காட்டைக் கிழித்தும், காற்றைப் பிடித்தும், பறப்பதுபோல் பாய்ந்து கொண்டிருந்தது. ஒரே மலையை, இரு மலையாய்க் காட்டும் மடிப்பு வெளி: மரித்ததுபோல் இறங்குமுகமும், மறுபிறவி எடுத்ததுபோல் ஏறுமுகமும் கொண்ட மலைப்பூமி, இந்த இரு முகங்களுக்கு இடையேயான மலைத்தொட்டில். பூமிப்பெண்ணின்…

முகம் தெரியா மனுசி

தண்டோராக்காரன், தான் செல்வதற்கு, அந்த குக்கிராம குடிசை மண்டிக்கு தகுதியில்லை என்று கருதியதுபோல், ஊருக்கு புறம்பாக உள்ள மயானத்தில் நின்று நெளித்தபடி, டும் டும் ஒலிகளோடு, திருவாங்கூர் சமஸ்தான அரச அறிவிப்பை வெளியிட்டான். “ஸ்ரீ உத்திரம் திருநாள் மகாராஜா திருமனஸ் அவர்கள்,…


தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்கு மிக்க நன்றி.
Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2021]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.