|
சிறுகதைகள் (Short Stories in Tamil)
10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்: http://www.sirukathaigal.com/2019/07/18/.
|
அனாதை பிணம் பணம் - பட்டுக்கோட்டை பிரபாகர்
மல்லாந்து கிடந்தான். உடல் மேல் நான்கு வாழைப்பழங்கள் வைக்கப்பட்டு, அதில் நான்கு ஊதுபத்திகள் உயிரிழந்து கொண்டிருந்தன. கழுத்தில் கதம்ப மாலை. இரண்டுபேர் கர்ச்சீப்பிலும், துண்டிலும் சுற்றிக் கூடியிருப்பவர்களிடம் ஏந்திக் கொண்டிருந்தனர். ஏந்திக் கொண்டிருந்தனர். “அனாதைப் பொணமுங்கோ… தர்மம் செய்ங்க. அடக்கம் செய்யணும்…” மக்களிடம் தயாள குணம் இன்னும் இருந்ததால்… கைக்குட்டை காசுக்குட்டையாகிக் கொண்டிருந்தது. மாலை மடிந்தது. பண்பாடு கருதி, செத்துப் போன மாலைக்காக கறுப்புப் போர்வை போர்த்திக்கொண்டு துக்கம் அனுஷ்டித்தது இரவு. ராஜனும் முத்துவும் காசுகளை எண்ணினார்கள்.
|
Read More
|
|
அம்மாவும், அந்தோன் சேக்கவும் - பாரதி கிருஷ்ணகுமார்
அம்மா ஒருமுறைகூட,தன் தேவைகளுக்காகப் பிறர் உதவியை நாடியது கிடையாது.அந்த ராத்திரியில்,குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டு எழுப்பியது ஆச்சரியமாக இருந்து. “ரொம்பத் தொண்டையெல்லாங் காஞ்சு போச்சு..எந்திரிக்க முடியாம தாகம் அமுக்குது..தம்பீ..தண்ணீ கொண்டாடா… ” என்றாள். அவள் குரலில் மரணத்தின் நெடி ஏறி விட்டிருந்ததுது.எனக்குப் புலப்படவில்லை.இரவு ஒன்றரை மணியில் இருந்து,காலை ஐந்து மணிக்குள் நாலைந்து சொம்பு குடித்தும் தாகம் தீரவில்லை. உதடுகள் வறண்டு,பிளந்து கிடந்ததுது;துயரம் தருவதாக இருந்தது.நாக்கினால் இரண்டு உதடுகளையும் புரட்டிக்கொண்டே இருந்தாள்.ஐந்தரை மணிக்குக் கொஞ்சம் பால் கொடுத்தேன்.உறங்கப் போகுமுன்,எல்லா சமுத்திரங்களும்
|
Read More
|
|
சேற்றில் மலர்ந்த செந்தாமரை - ஜெ.சங்கரன்
அத்தியாயம்-16 | அத்தியாயம்-17 செந்தாமரையும் அவள் எழுதின லெட்டரை ஒரு ‘ஜெராக்ஸ்’ காப்பி எடுத்து தன் ‘பைலில்’ ராஜேஷ் எழுதின லெட்டருடன் வைத்துக் கொண்டாள்.ராஜேஷ் எங்கே இருப்பான் என்று தேடினாள். ராஜேஷ் அப்போது தான் ‘பிரின்ஸிபால்’ ரூமை விட்டு வெளியே வந்துக் கொண்டு இருந்தான். செந் தாமரை ராஜேஷைப் பார்த்து “இந்தாங்க.நீங்க எழுதின லெட்டருக்கு என் பதில்” என்று சொல்லி ராஜேஷிடம் கொடுத்தாள்.“தாங்க்ஸ்” என்று சொல்லி விட்டு தன் ரூமுக்கு வந்து செந்தாமரை கொடு த்த கவரைக்
|
Read More
|
|
தீக்குள் விரலை வைத்தால் - கோ.புண்ணியவான்
கடைசியில் காவல் நிலையம் வரை போக வைத்துவிட்டது. மனம் ஒப்பவில்லைதான். ஆனாலும் இதனை விட வேறு விதியற்றுதான் கால்கள் மிகுந்த கூச்சத்தோடும் தயக்கத்தோடும் வந்தடைந்தன. காவல் நிலையம் சமூகப் பாதுகாப்பு அரண் என்பதையும் மீறி குற்றமுள்ளவர்களைப் தேடிப்பிடித்து அடைக்கும் இடம் என்ற ஆகிப்போனதுதான் காரணம். யார் மனதில் குற்றமில்லை? என் மகனைப் பார்க்குந்தோறும் மனம் துணுக்குற்றது. அவனின் வாடிய முகத்தை சாதரணமாகக் கடந்துவிட முடியவில்லை. கொண்டாட்டக் கலை நிறைந்த முகம் அவனுடையது. சதா பேச்சில் துள்ளலும், உடல்மொழியில்
|
Read More
|
|
குற்ற உணர்ச்சி - ஸ்ரீ.தாமோதரன்
“சாமிநாதன் நான் டெய்லி சொல்லிட்டு இருக்க முடியாது, உங்களாலே நேரத்துக்கு வர முடிஞ்சா வேலைக்கு வாங்க, இல்லையின்னா வேலைக்கு வரவேண்டாம்” அப்பா அவரிடம் சொல்லிக்கொண்டிருந்த்தை கேட்ட கண்ணனுக்கு கோபம் ஒரு பக்கம், சிரிப்பு ஒரு பக்கம் வந்தது. இந்த சாமிநாதனை இதோடு எத்தனை தரம்தான் இப்படி மிரட்டிக்கொண்டே இருப்பார். அவரும் பதிலுக்கு, சரிங்க முதலாளி “இனிமே நேரத்துல வந்துடறேன்.இதே வார்த்தைகள்தான் இவரிடம் வரும். இவனும் பல முறை அப்பாவிடம் புகார் சொல்லி விட்டான், அப்பா அவருக்கு ஓய்வு
|
Read More
|
|
ரெட்டை வால் குருவி! - யுவகிருஷ்ணா
அவனுடைய மேரேஜ் ரிசப்ஷனிலே அவனுக்கு பிடித்தது சனி. அவனுடைய அலுவலக பிரண்ட் ஆபிஸ் எக்ஸ்க்யூடிவ் அனிதா ஏதோ ஒரு பரிசுப்பொட்டலத்தை ‘வித் லவ் அனிதா’ என்று எழுதி கொடுத்துவிட்டு, “நான் இருக்க வேண்டிய இடத்துலே நீங்க இருக்கீங்க. ஆல் த பெஸ்ட்!” என்று விளையாட்டாக மணப்பெண்ணிடம் சொல்ல அப்போதே புயல் மையம் கொண்டுவிட்டது. அம்மாவுக்கு அறிவே கிடையாது. கல்யாணம் முடிந்து வீட்டுக்கு வரும் மகனையும், மருமகளையும் ஆரத்தி எடுத்து வரவேற்கும்போது, “எம் பையனுக்கு ரெண்டு பொண்டாட்டின்னு ஜாதகத்துலே
|
Read More
|
|
குட் ஷொட் - ஜே.கே
“எங்கட போராட்டம் ஏன் தோத்துது தெரியுமா?” வெடியண்ணை கேட்ட கேள்வியில், வாய்வரையும் கொண்டுசென்ற சிக்கன்விங் அங்கேயே விக்கித்து நின்றது. நிமிர்ந்து பார்த்தேன். அண்ணர் ஈழத்தமிழன் கணக்காய் தள்ளாடியபடி நின்றார். கையில் இருந்த கிளாஸில் கொக்கோகோலாவோடு கொஞ்சம் சஷிவாஸ்; அடிக்கடி ஒரு உறிஞ்சி உறிஞ்சினார். “ஆய்க்” என்று காறியபடியே “டொக்” என்று மேசையில் கிளாசை வைப்பார். சற்றுத்தள்ளி சவுண்ட் சிஸ்டத்தில் டீ.ஆர் “ஒஸ்தீ” என்று கதற, சிலர் பிதுக்கி பிதுக்கி ஆடிக்கொண்டு இருந்தார்கள். ஒருவரின் டான்ஸில் ஆயிரத்தில் ஒருவன்
|
Read More
|
|
குரு தட்சணை…! - காரை ஆடலரசன்
கவிதாவால் எப்படி யோசித்தும் ஜீரணிக்க முடியவில்லை. காலை வகுப்புகள் முடிந்து ஒய்வு நேரம். ஆனாலும்… அந்த ஓய்வறையில் மூச்சு விட முடியாதவள் போல் தவித்தாள். எதிரில் அமர்ந்து அவளைக் கவனித்த சுகுணா. .. ” என்ன கவிதா ஒரு மாதிரியா இருக்கே. ..” சக ஆசிரியைக் கேட்டாள். ” நம்ம தேன்மொழி பத்து நாளா பள்ளிக்கூடத்துக்கு வரல. ” மெல்ல சொன்னாள். ” அதுக்கென்ன. .? ” ” அவ நல்ல படிக்கிற பொண்ணு. இந்த ஆண்டு
|
Read More
|
|
காலனி களவானிகள் - பா.அய்யாசாமி
எலே! ஏன்டா! அந்த வேலியைத் தாண்டி போய் போய் நிக்கிறீக? அதான் வாரா வாரம் வந்து கேஸைப் போட்டு நம்ம தாலியை அறுக்குறனோ இல்ல. அப்புறம் ஏண்டா? என ஒரு பெரிசு அதட்டியது ரமேசையும் அங்கே நின்ற பாபுவையும்.. ரமேசு கையில் உள்ள காசுக்கு குடிக்கனும், மேற்கொண்டு வாங்கிக் கொடுத்தா அதையும் குடித்து வூட்டுக்கு வந்து சாப்பிட்டு,தெளிந்து மனைவி ஜெயாகிட்டே இருக்கிற காசையும் பிடுங்கி குடிக்கனும்.. ஆக நல்லா குடித்து கவர்ன்மென்டுக்காக உழைக்கும் ஓர் குடிமகன். அரசு
|
Read More
|
|
தவிப்பு - எஸ்.கண்ணன்
(இதற்கு முந்தைய என்னுடைய ‘தனிமை’ கதையை படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) கோபத்துடன் செருப்பை மாட்டிக்கொண்டு சபரிநாதன் தெருவில் இறங்கி நடந்தார். காந்திமதி அவளுடைய வீட்டுத் திண்ணையில் தூணை மார்போடு கட்டியபடி நின்று கொண்டிருந்தாள். கடலின் அலை வேகமாகப் பின் வாங்குவது போல, சபரிநாதனின் கோபமும் காந்திமதியைப் பார்த்ததும் கொஞ்சம் உள்வாங்கியது. டப்பா கட்டு கட்டிய வேட்டியை மெதுவாக கீழே இறக்கிவிட்டார். இது காந்திமதிக்கு சபரிநாதன் காட்டுகிற மெளன மரியாதை! இருவரின் பார்வையும் வழக்கம்போல் தயக்கத்துடன்
|
Read More
|
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.
Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2019]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.
|