சிறுகதைகள் (Short Stories in Tamil)
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்
google-play-storeiOS-App-Store

view this email online

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

http://www.sirukathaigal.com/2022/02/12/

எலியம்

கொஞ்சம் பழைய வீடுதான். ஆனால் அது ஓர் அழகான வீடு. பக்கத்துக் கொன்வென்றில் இருந்து வாத்தியம்மா சொல்லிக் கொடுக்கும் வாசகங்களை அப்படியே ஒப்புவிக்கும் பாலர்களின் ஒருமித்த குரல்கள் அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கும். வைத்தியசாலை வெகு கிட்டத்தில் இருந்தது. சந்தை கூட அவ்வளவு தூரத்தில் இல்லை. இவன் வீட்டுக்கு நேர் எதிரே புகைப்படப் பிடிப்பு நிலையம் ஒன்று இருக்கிறது. தேவையானால் இவன் தன் வீட்டிலிருந்தே ஒப்பனைசெய்து கொண்டுபோய்ப் படம் எடுத்துக் கொள்ளலாம். அவர்களுடைய பௌடரையும், ஒல்லாந்தர் காலத்து அழுக்கு

 

கடல் சிரித்தது

 மூன்று நாட்களுக்கு முன் அந்தக் கடற்கரையில் முத்து பிணமாகக் கிடந்தான். அந்தச் சடலத்தின் சதைப் பிண்டங்கள் பிய்ந்து போய்க்கிடந்தன. மீன்களின் மாமிச வெறிவேட்டைக்கும், கடல் அலைகளின் முரட்டு மோதல்களுக்கும் ஆளாகி அழுகி நெக்கு விட்டுப்போன அந்தப் பிரேதம் கரையில் சதா மோதிக்கொண்டிருந்தது. காகங்கள் அதன் கண்களைத் திறந்து தின்று தீர்த்துவிட்டன. இன்னும் அதன் நாற்றம் ‘வெடில்’ அந்த ஊரை உசுப்பிவிட்டுக் கொண்டுதானிருந்தது. ‘பாவம்! நாலு வருடங்களுக்குமுன், அடைக்கலமாதா கோயிலில் அவனைத் தன் நாயகனாகச் சத்தியப்பிரமாணம் செய்து ஏற்றுக்கொண்ட

 

அது

வெறுமையில் வெளிறிய வானம், தன்னில் எதுவுமே இல்லை என்று கைவிரித்துக் கிடந்தது. மொட்டை மாடியின் கட்டைச் சுவர் ஈரக் கரும்பச்சை நிறத்தில் இந்த உச்சி வெயிலிலும் தண்மை உள்ளோடியிருந்தது. “பானு…” என்று வட்ட விளிம்பில் பெயர் பொறித்த வட்டிலில் பருப்புச் சாதமும், பட்டாணிப் பொரியலும் வைத்து என்னை மாடிக்கு ஏற்றிவிட்டிருந்தாள் அம்மா. ஆரம்பப்பள்ளி நாள்களில் ஸ்கூல் மெஸ்ஸூக்குக் கொண்டு போகவென்று, அம்மா தினமும் காலையில் புதிது போல் துலக்கிய வட்டிலையும், டம்ளரையும் அவரவர் பையில் எடுத்து வைப்பாள்.

 

அழிவற்றது

முப்பது வருடங்களுக்கு முன்பு நான் போயிருந்தபோது அயோவா சிடி மிகச் சின்ன ஊர். ஆனால், அது அந்த மாநிலத்தின் தலைநகராக இருந்திருக்கிறது. ஆனால் நான் போயிருந்த போது அது தலைநகர் அந்தஸ்தை இழந்ததோடு அதன் விமான தளமும் பயனற்றுப் போய் விட்டது என்று அறிந்தேன். ஊர் சின்னதாக இருந்தாலும் நகரங்களின் வசதிகள் பல இருந்தன. இரண்டு வங்கிகள் சாதாரணத் தேவைகளுக்கேற்ப டவுண்ட்டவுன் என்ற கடைத் தெரு. ஐந்தாறு சிற்றுண்டிச் சாலைகள். இரண்டு டிஸ்கவுண்ட் கடைகள். அதாவது தள்ளுபடிக்

 

இதயத்தை சுட்டது

அதிகாலை ஐந்து மணியிருக்கும். இராமாயி தன்னோட புருஷன் வேலனைத்தட்டி எழுப்பினாள். ” ஏய்… ஏய்… எந்திரியா… இன்னும் தூங்கிட்டிருக்கிற. சட்டுபுட்டுன்னு எந்திரிச்சோம், காலவாசப் பக்கம் போயி, மண்ண கொலச்சுப் போட்டோமுன்னு இல்லாம… எந்திரியா” வேலன் முந்திய நாள் செஞ்ச வேலையினால உடம்பு கலச்சுப் போயிருந்தான். அசந்து தூங்கிக் கொண்டிருந்த அவன், இராமாயி போட்ட சத்தத்துல உடலை முறுக்கிக்கொண்டே மெதுவாக எழுந்தான். பக்கத்துல உள்ள கொடத்துல தண்ணிய அள்ளி மூஞ்சியக் கழுவிக்கொண்டான். மண்வெட்டியை எடுத்து தோளில் வைத்துக் கொண்டு

 

ஒத்தக் கம்மல் காது

“ஒத்தக் கம்மல் கோயிந்தனோடக் காத, அவன் குடிபோதை யில சாவடியில விழுந்து கெடந்தப்ப எவனோ ராத்திரியோட ராத்திரியா அறுத்துட்டுப் போயிட்டானாம்! காத அறுத்துட்டுப் போனவனக் கண்டுபுடிச்சு கசாப்பு போட்ற கொல வெறில அவெஞ் சொந்தக்காரய்ங்க மீசைய முறுக்கிக்கிட்டு இருக்காங்களாம். அறுத்தது யாருன்னுட்டு இன்னும் கண்டுபுடிக்க முடியலையாம்…” சம்பவம் நடந்து முடிந்து நான்கைந்து நாட்களாகியும்கூட ஊர்க்காரர்கள் வாய் முழுக்க இந்த வார்த்தைகளையே முணு முணுத்துக் கொண்டிருந்தன. கடைவீதி, சலூன்கடை, கிராமத்துக்குப் பொதுவான சாவடி என எல்லா இடங்களிலும் இதே

 

மர்ம வெளி

நண்பர் ஒருவர் கூறியதன் பொருட்டு அந்த மிகப் பாழடைந்த மண்டபத்தினைக் காணும் ஆவல் ஏற்பட்டது. பழைய மன்னர்கள் காலத்து அரண்மனை அல்லது பழைய மன்னர்கள் குடியிருந்த வீடு எனக் கூறலாம். தஞ்சாவூர்ல உள்ள மக்கள் வரலாறு குறித்த பல விஷயங்களை வாய்மொழிச் செய்தியாக அவ்வப்போது கூறிச் செல்கின்றனர். இது அவர்களின் இயல்பான வாழ்வுடன் ஒன்றியதொரு விஷயமாக உள்ளது. மேலும் வரலாற்றுச் கால எச்சங்கள் தஞ்சாவூரிலும், சுற்றியுள்ள கிராமங்களிலும், இப்பகுதியெங்கும் காணப்படுகின்றன. கோயில்கள், அரண்மனைகள், குளங்கள், மண்டபங்கள், இப்படி

 

பூஞ்சோலை

(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கோமதி தோட்டத்தைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். அவள் கண்களிலே நீர் படர்ந்திருந்தது. கண்களில் தீட்டிக் கொண்டிருக்கும் மை கலையாமல் அக் கண்ணீரை உள்ளே இழுத்துக் கொள்ளப் பார்த்தாள் அவள். அழகான பெரிய பங்களாவின் முன்னிலை யில் தன் முன் அலங்காரமாகப் புஷ்பச் செடிகள் சிரிக்கச் சிரிக்க இருந்தும் அவள் முகத்தில் சோகத்திற்கு இடம் ஏன்? சுந்தரராமன் உள்ளே வந்தான். கோமதி எழுந்து அவன்

 

எனக்கான வெளி

 என் வளாகத் தோழி வந்துவிட்டுப் போனாள். நீண்ட நாளைக்குப் பின் பழைய நினைவுகளை மீட்டி மகிழ்ந்தோம். நேரம் போனதே தெரியவில்லை. எவ்வளவோ வற்புறுத்தியும் பகலுணவுக்காகத் தாமதித்துச் செல்ல அவள் உடன்படவில்லை. போகும் போது மன்றாட்டமாய் அவள் குரல், ‘கட்டாயம் வீட்டுக்கு வா. ஓரிரு நாட்கள் தங்கிப்போகவே வா, காலில் சுடுதண்ணி கொட்டிக்கொண்டது போல அரக்கப்பரக்க வராதே.’ ‘அண்ணா, உங்களுக்கு நேரமில்லாட்டில் அவளை மட்டுமாவது அனுப்பி வைங்களேன்’ – இது என் கணவரிடம். அவர் புன்னகையோடு தலையசைக்கிறார். அன்றிரவு

 

பிறன் பொருளைத் தன் பொருள் போல

மாவட்ட மைய நூலகத்தின் தலைமாட்டில் புதியதாகப் பொருத்தப்பட்டிருந்த மின்னணுக் கடிகாரம் தன்பாட்டுக்கு இராப் பகலாக, நாள், கிழமை, நேரம், காற்றின் பதம், அந்நேரத்து வெப்பம் எல்லாம் காண்பித்துக் கொண்டிருந்தது. நேரம் சரியாகப் பிற்பகல் 14-30 என்றும் சூடு 42°c என்றும். ஒரு வேளை மராத்திய மாநிலத்தின் இரண்டாம் தலைநகரான நாக்பூரின் வெயிலைக் காட்டுகிறதோ என்ற ஐயமுண்டு அவனுக்கு. மாவட்ட மைய நூலகத்தின் எதிர்ப்புறம் வரிசையாக நீண்டு கிடந்த ஏழெட்டுப் பேருந்துத் தரிப்பான்களில் ஒன்றில் காத்துக் கிடந்தான். நகரின்

ஆசிரியர் பகுதி:

கதையாசிரியர் பகுதியில் இன்று ஜெகதீஷ் குமார் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய பெயர் இங்கே இடம் பெற, உங்களை பற்றி ஒரு பக்க விபரங்களை அனுப்பவும். ஏற்கனவே உங்கள் விபரங்களை அனுப்பி இருந்தால், அதனை கதையாசிரியர் பகுதியில் காணலாம், அடுத்து வரும் செய்திமடலில் இங்கே இணைக்கப்படும்.

தேவகாந்தன்

தேவகாந்தன் (பிறப்பு: 1947) ஒரு குறிப்பிடத்தக்க கனேடிய-ஈழத்து எழுத்தாளர். இவர் ‘கனவுச் சிறை’ என்ற மகா நாவலின் மூலமாக தமிழ்ப் பரப்பில் கவனிப்பைப் பெற்றவர். சிறுகதை, குறுநாவல், நாவல், கட்டுரை ஆகிய துறைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

சிறுகதை பற்றி:

சிறுகதை எப்படி எழுதுவது என்று பல ஆசிரியர்களின் கருத்துக்களை இங்கே படிக்கலாம். மேலும் விபரங்களை சிறுகதைப்-பற்றி பகுதியில் காணலாம்.

 
இக்காலத்தில் சிறுகதை வடிவம் அறிமுகமானது ஐரோப்பியச் சமூகத்தில்தான். எட்கர் ஆலன்போ, கோகோல், ஓகென்றி, செட்விக்கு போன்ற அமெரிக்க எழுத்தாளர் சிறுகதைகளை எழுதியும் அதற்குச் சில இலக்கணங்களையும் கூறுகின்றனர். இன்றைய இலக்கியப் பிரிவுகள் சிறந்து செழித்து வளர்ந்தது. செல்வாக்கு மிக்கது சிறுகதைகள் தான் என்று கூறலாம். இச்சிறுகதை தமிழுக்கு 1910-ல் வந்தது.
Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook Instagram
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2022]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.