This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.

சிறுகதைகள் (Short Stories in Tamil)

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

http://www.sirukathaigal.com/2019/09/10/

அம்மாவின் அளவற்ற அன்பு - இரா.சடகோபன்

ஒரு வீட்டில் ஒரு மரணம் நிகழ்ந்தால் அது அந்த வீட்டை சில காலத்துக்கு முடக்கிப் போட்டுவிடும். அந்த சோகத்தில் இருந்து மீள சில காலம் பிடிக்கும். அதுவே நமது அன்புக்குரியவர்களாக இருந்து விட்டால் அதில் இருந்து மீள்வது பகீரதப் பிரயத்தனமாகக் கூட இருக்கும். அநேகமாக உறவினர்களும் நண்பர்களும் இந்த சோகத்தில் இருந்து விடுபட உதவுவார்கள். அவர்களின் பிரசன்னம், ஆறுதல் வார்த்தைகள், அனுதாபத்துடனான விசாரிப்புக்கள் என்பனதான் நம்மை நாம் தேற்றிக்கொள்ள உதவும். அத்தகைய விசாரிப்புக்களின் போதெல்லாம் நாம் இறந்தவர்

.


Read More


ஆறாத சினம் - பா.அய்யாசாமி

என்ன கேசு ஏட்டையா? என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்தார் ஆய்வாளர் ஆறுமுகம். ஐயா, ஒரு வயதான பொம்பளைகிட்ட பணம் திருட முயல, அவங்க கீழே விழுந்து மக்கள் எல்லாம் சேர்ந்து அட்மிட் செய்துட்டாங்க. இவனை அள்ளிகிட்டு வந்து விசாரிச்சா 2000 ரூபா நோட்டா நிறைய இருக்கு. பாவம் அந்தம்மா! பேச்சு மூச்சு இல்லாத கிடக்க, மக்கள் 108 கூப்பிட்டு மருத்துவமனைல சேர்த்திருக்காங்க! பாவமா இருந்துச்சு, பரிதாபம் காட்டினார் ஏட்டு. நிறைய 2000 ரூபாய் நோட்டை பார்த்ததும் ஆய்வாளர்

.


Read More


பார்வைகள் - தேவவிரதன்

சோமநாதன், வயது 68, எக்ஸ்பிரஸ் அவென்யூவில் இருந்த பாரில் அமர்ந்து அவருக்குப் பிடித்தமான ‘லாங்க் ஐலண்ட் ஐஸ் டீ’ என்ற காக்டெய்லை நிதானமாகக் குடித்துக் கொண்டிருந்தார். ‘ஜின்’, ‘டெகிலா’, ‘வோட்கா’, ‘ரம்’ எல்லாம் கலந்த அந்தப் பானம் அவர் மிகவும் ரசித்து அருந்தும் ஒன்று; ஆனால், இன்று அதுகூட அவருக்கு அலுப்பாக இருந்தது. பாரில் அதிகக் கூட்டமில்லை; பொதுவாகவே அவருக்குக் கூட்டமும், இரைச்சலும் அதிகம் இருந்தால் ரசிக்காது. எதிரே டி.வி. திரையில் ஜாக்விலின் ஃபெர்னாண்டஸ், ‘சிட்டியான் கலாயியான்

.


Read More


ஐரோப்பாவில் ஜாதிக்கலவரம்! - யோகராணி கணேசன்

ஒஷ்லோ மாநகரம் பல்லின மக்களை உள்வாங்கி தனித்துவமாய் ஓங்கி நிற்கின்றது நோர்வே நாட்டில். நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளைச்சேர்ந்தவர்கள் முதலாம் தலைமுறையாகவும், இரண்டாம் மூன்றாம் தலைமுறையாகவும் வசிக்கும் இந்த நாட்டில்தான் லவனி பிறந்தாள், வளர்ந்தாள், படித்தாள், பட்டமும் பெற்றாள் என்பது அவளுக்கே உரிய தன்னிகரில்லாத பெருமை. பெற்றோர் எப்பொழுதும் அவளை நினைத்து பெருமையடைவதுண்டு. அதுமட்டுமல்ல பார்ப்பவர்கள் எல்லோரும் எப்படி உங்கள் பிள்ளையை இப்படி வளர்த்தெடுத்தீர்கள் இந்த நாட்டில்,என்று ஆச்சரியப்படும் அளவிற்கு தன் கலாச்சாரத்திற்கே உரிய பண்பு கலைந்து போகாத

.


Read More


வல்லவனுக்கு வல்லவன் - ஸ்ரீ.தாமோதரன்

அது ஒரு அடர்ந்த காடு. அந்த காட்டில் பல்வேறு மிருகங்கள் வாழ்ந்து வந்தன. அவைகள் தனக்குரிய இடங்களில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்தன. அப்படி வாழ்ந்து வந்த மிருகங்களில் ஓநாயும் ஒன்று. ஓநாய் தன் குட்டிகளுடன் ஒரு குகையில் வாழ்ந்து வந்தது. தினமும் குகையிலிருந்து குட்டிகளை அழைத்துக்கொண்டு வெளியே சென்று வேட்டையாடி உண்டு விட்டு, மாலையில் தன் குகைக்கு வந்து விடும். இப்படி அமைதியாக வாழ்ந்து வந்து கொண்டிருந்த பொழுது ஒரு நாள் ! அந்த காட்டுக்குள் புலி

.


Read More


போலி! - யுவகிருஷ்ணா

“நான் ஒண்ணாவது படிக்கறப்பவே அவன் பிரச்சினை ஆரம்பிச்சிடிச்சி. நான் எந்த கலர் டிரஸ் போடுறனோ அதே கலர்லே அவனும் டிரஸ் பண்ணுவான். நான் எதுவெல்லாம் வாங்குறனோ அதுவெல்லாம் அவனும் அடம்பிடிச்சி வாங்குவான். என்னோட பக்கத்து வீட்டு பையன் என்கிறதாலே நான் என்னவெல்லாம் பண்ணுறேன்னு பாக்குறது அவனுக்கு ரொம்ப ஈஸி” “இண்ட்ரெஸ்டிங்.. அப்புறம்?” “ஒவ்வொரு விஷயத்துலேயும் என்னை இமிடேட் பண்ண ஆரம்பிச்சான். என்னை மாதிரியே தலை வாருவான். நான் எந்த கலர் ஸ்கூல் பேக் வெச்சிருக்கேனோ, அதே கலர்

.


Read More


பரசு - ப.மதியழகன்

ஐந்து அவதாரங்கள் வந்து சென்றுவிட்ட நிலையில் பூமிக்கு பரிபூரணம் தேவைப்பட்டது. பிரம்ம ஞானத்தைக் காப்பாற்ற சத்ரிய தைரியம் தேவையாய் இருந்தது. ஜமத்க்னிக்கும் ரேணுகாதேவிக்கும் ஐந்தாவதாக பிறந்த குழந்தை சத்ரிய வம்சத்தையே வேரறுக்கும் என யாரும் அப்போது நினைத்துப் பார்க்கவில்லை. பிராமணவம்ச பரசுராமருக்கு சிறுவயது முதல் ஆயுதங்களின் மீது தீராத மோகம். வர்ணாசிரம தர்மத்தை மீறியதால் பல விதங்களில் புறக்கணிக்கப்பட்டவர் பரசுராமர். ரத்தத்தைப் பார்த்து மயங்கிவிழும் சராசரி பிராமணரல்ல அவர். அன்று ரிஷி வம்சத்தவர்கள் தங்கள் மனைவிமார்கள் மனதளவில்

.


Read More


பெண் அடிமை இல்லை…! - காரை ஆடலரசன்

வெகு நேர யோசனைக்குப் பின் ஒரு முடிவிற்கு வந்த சுந்தர் இருக்கையை விட்டு எழுந்தான். தொலைபேசியை நெருங்கி ஒலி வங்கியைக் காதில் வைத்து எண்களை அழுத்தினான். ” ஹலோ. .! ” எதிர் முனையில் அவள்தான் எடுத்தாள். ” பிரதீபா ! நான் சுந்தர் பேசறேன் ! ” ” எ. .. எந்த சுந்தர். .?! ” – குழப்பம் ” போன வாரம் உங்களை பெண் பார்த்து வந்தவன் !” ” ம்ம். ..

.


Read More


கல்விக் கோயில் - கி.அன்புமொழி

அன்றைய தினம் ஞாயிற்றுக் கிழமை. ஊரே ஒன்றாகக் கூடியிருந்தது. வேர்விட்டு, விழுதுவிட்டு நின்ற மரத்தின் நிழலில் ஊர் பெரிய மனிதர்களும், மக்களும் சலசலவெனப் பேசிக் கொண்டிருந்தனர். ஊர்த்தலைவர் ஆவுடையப்பர் பேச தொடங்கினார். “இங்க பாருங்கப்பா, கொஞ்சம் நேரம் எல்லாரும் அமைதியா இருங்க. நம்ம ஊர தத்தெடுத்து பல நன்மைய செய்யிற அமெரிக்காவைச் சேந்த செல்வந்தர் டக்சன் அய்யா, இந்த முற பெரிய தொகையை அனுப்பியிருக்காரு. அந்த தொகையை வச்சி ஊருக்கு என்ன நன்மைய செஞ்சிக்கலாமுன்னு எல்லோரும் சேந்து

.


Read More


இரண்டாம் கல்யாணம் - எஸ்.கண்ணன்

(இதற்கு முந்தைய ‘மூத்தவளின் நகைகள்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) மகளுடனான இந்த நீண்ட உரையாடலை சபரிநாதன் படபடப்பாகவோ கத்தியோ பேசவில்லை. சாமவேதம் சொல்கிற மாதிரி இழுத்து இழுத்து மெதுவாகத்தான் சொல்லிக் கொண்டிருந்தார். இருந்தாலும் பேசிவிட்டு நாற்காலியில் இருந்து எழுந்தபோது தலை சுற்றியதால் சட்டென்று சுவரைப் பிடித்துக்கொண்டார். கொஞ்சநேரம் பயத்துடன் அப்படியே நின்று கொண்டிருந்தார். லேசாக உடம்பு வியர்த்தது. சபரிநாதன் அவசர அவசரமாக அவரது இஷ்ட தெய்வமான பெருமாளுடன் பேச ஆரம்பித்தார். “கல்யாண தேதியெல்லாம்

.


Read More

நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.

Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2019]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.

To change your subscription, click here.