This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.

சிறுகதைகள் (Short Stories in Tamil)

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்: http://www.sirukathaigal.com/2018/12/23/.

அர்த்தநாரி - முனைவர் க.லெனின்

சிங்கப்பூரிலிருந்து விடியற்காலை 6:30 மணியளவில் ஆண்ட்ரூ லைன் இந்தியாவில் சென்னை நகரில் இருக்கும் நளபாகம் சுவை உணவகம் உரிமையாளர் பார்த்திபனுடன் ஸ்கைப் வழியாக உரையாடுகிறார். சிங்கப்பூர்க்கும் இந்தியாவிற்கும் நேர அளவு 2:30 மணித்துளிகள். இப்பொழுது சென்னையில் சரியான நேரம் விடியற்காலை 4:00 மணி. அறையின் கதவு மூடப்பட்டிருந்தது. சுவற்றில் ஆங்காங்கே அழகான ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. அலமாரியில் புத்தகங்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. தொங்கும் திரைச்சீலைகள் அந்தப் படுக்கையறையை மேலும் அழகுப்படுத்தின. படுக்கையில் உள்ள போர்வைகள் கொஞ்சம் கூட

.


Read More


என் சுதந்திரம் உங்க கையில - நாங்குநேரி வாசஸ்ரீ

 டில்லியின் அந்த பரபரப்பான சிக்னலில் வரிசையாகக் கார்கள் நின்றவுடன் வியாபாரம் களை கட்ட ஆரம்பித்தது. இன்னும் ஒரு சிக்னல் தான். இந்தியா கேட் போயிடலாம். நாளை மறு நாள் சுதந்திர தினம். அதனால லைட் அலங்காரம் இந்தியா கேட்லேருந்து ராஷ்டிரபதி பவன் வரைக்கும் அழகா இருக்கும். பேரனிடம் சொல்லிக் கொண்டே தன் டிரைவர் சீட் கண்ணாடியைக் கீழிறக்கி வெளியே பார்த்துக் கொண்டிருந்தார் சோமசுந்தரம். குப்பாரா லேலோ. சிறு குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் காத்திருந்த தம்பதியரை தொடர்ந்து நச்சரித்துக்

.


Read More


குழந்தை- ஜெ.சங்கரன்

அத்தியாயம் – 1 | அத்தியாயம் – 2 | அத்தியாயம் – 3 | அத்தியாயம் 4 | அத்தியாயம்-5 | அத்தியாயம்-6 | அத்தியாயம்-7 | அத்தியாயம்-8 | அத்தியாயம்-9 | அத்தியாயம் 10 சிறிது நேரம் போனதும் “நம்ம பெண் அந்த அம்மாகிட்டே அந்த வீட்டிலே அவ காலம் இருக்கும் வரைக்கும் குடித்தனம் பண்ண வேணாவா..நாம இப்போ கஷ்டத்துடன் கஷ்டமா இந்த செயினையும் நாம் செஞ்சு போடறது தான் விவேகம் சரோஜா.நீ யோஜனைப்

.


Read More


அம்மா ஒரு கலைமகள் - இராம் சபரிஷ்

பூஜை நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது.மக்கள் அங்குமிங்மாய் வரிசையில் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தனர்.ஒவ்வொரு முகத்திலும் தீராத ஒரு இறைத் தேடல் படர்ந்து இருந்தது. கவலைகள் அனைத்தையும் தன்மனத்தினுள் கடற்கரையோர மண்பொந்துகளில் தம்முட்டைகளைப் பதுக்கும் நண்டுகளைப் போல, புதைத்து வைத்துவிட்டு கோயில் வரிசையில் இறைவனடி சேர ஒரு மென்மையான அமைதியுடன் யட்சகர்கள் காத்திருந்தனர். ஒருவன் நெற்றியில் வெள்ளை நிறத்தில் விரளலவு தடிமன் கொண்ட மூன்று திருநீர்க் கோடுகளுடன்‌ வரிசையை நோக்கி நடந்து வந்தான்.அவன் நெற்றியிலிருந்த பட்டை அணிலின் முதுகில் செல்லும் அதே

.


Read More


முதியவரின் இறுதி நேரம் - கணேஷ் மாணிக்க (அறிமுகம்)

வேகமாக நடந்து செல்லும் இந்த முதியவரின் வயது 80. இன்று இவர் வாழ்க்கையின் இறுதி நாள், அதற்கான மேலிட உத்தரவு என் கையில் உள்ளது. அதற்கு டிக்கெட் என்பர் இவ்வுலகில். டிக்கெட்டில் ஜனவரி 21 1964 என தேதி குறிப்பிட்டுள்ளது. அந்த தேதி தான் இன்று, இருவுலகிலும். தன் உயிரை ரயில் முன்னே குதித்து மேலோகம் செல்ல தான் இந்த வேகமாக நடந்து செல்கிறார். அவருக்கு இன்று மேலோகம் செல்ல எப்படியும் டிக்கெட் கொடுக்கபட்டுள்ளது என்று அவருக்கு

.


Read More


சாமி குத்தம் - மா.சண்முகசிவா

‘நம்ம கோயில இடிச்சிட்டாங்க…’ வேகமாக ஓடிவந்த முருகன் இடுப்புக்குக் கீழாக இறங்கும் டவுசரை ஒரு கையால் பிடித்துக்கொண்டு, மறுகையால் கோயில் இருக்கும் திசையைக் காட்டி சொன்னபோது கூடவே ஓடிவந்த ஜிம்மியும் வால் வெட்டப்பட்டதால் தன் ஆசன வாயை அசைத்து ‘அது உண்மைதான்’ என்றது. “டேய் … என்னடா சொல்ற … நம்ம முனியாண்டி கோயிலையா…” ஆறுமுகத்திற்கு அதிர்ச்சியைக் காட்டிலும் ஆச்சரியம்தான் மேலோங்கி இருந்தது. இரண்டு நாள் அடைமழை பெய்தாலே ஆட்டங்கண்டுவிடும் மதில்களும் காற்றடித்தாலே கழன்றுஓடும் தகரக்கூரையையும் இடிக்க

.


Read More


வப்பு நாய் - காரைநகரான்

நன்றியுள்ள, என்றும் நம்பிக்கையான நட்பிற்கு அடையாளம் நாய்? விசுவாசத்தின் மறுபெயராகப் பூலோகத்தில் அவதாரமாகிய வைரவரின் வாகனம். ஐந்தரை அறிவு படைத்தாலும் ஆறறிவை மிஞ்சிய அற்புதம். சுந்தரன் சிறுவனாக இருந்த போது குட்டி நாய் ஒன்று அவன் வீட்டில் வளர்ந்தது. அதனுடன் கலையில் எழுந்து விளையாடுவது அவனது அலாதியானது இன்பம். ஆட்டுப் பாலைக் கறந்து வைத்தால் அது குடிக்கும் விதமே தனி. உருசி கண்ட பூனையாகச் சுந்தரனுக்கு நாயைப் பார்க்கும் போதெல்லாம் கொள்ளைப் பிரியம் பொங்கி வரும். குழந்தைப்

.


Read More


இவர்களின் அன்பு வேறு வகை - ஸ்ரீ.தாமோதரன்

கந்தசாமி தலையில் கை வைத்து உட்கார்ந்து கொண்டிருந்தான். உள்ளே அவன் மனைவி இவனை அர்ச்சனை செய்து கொண்டே வேலைகளை கவனித்துக்கொண்டிருந்தாள். ஒரு வேலை செய்ய துப்பிருக்கா ? எனக்குன்னு வந்து சேர்ந்திருக்கே ! யாராவது ஏதா கேட்டாங்கன்னா துக்கி கொடுத்திக்குடுவாரு, இவரு பெரிய துரை. சில வார்த்தைகளை நாம் எழுத்தில் எழுதக்கூடாது. தேமே..என்று கேட்டுக்கொண்டிருந்தான் கந்தசாமி. அவன் அப்பிராணி என்று பூரணமாய் சொல்ல முடியாவிட்டாலும், எதையும் நம்பிவிடுபவன்.அவன் கண்டானா? அந்தப்பெண் பொய் சொல்கிறாள் என்று. ரேசன் கடையில்

.


Read More


அவன்-இவள்…! - காரை ஆடலரசன்

அறையைத் திறந்து கட்டிலைப் பார்த்ததும் நடேசுக்குச் சொர்க்கம் கிடைத்த மகிழ்ச்சி, மனசுக்குள் குதூகலம். அவ்வளவு பயணக்களைப்பு. காலையில் பேருந்து ஏறி…. இரவு எட்டு மணிக்கு மதுரையில் இறங்குவதென்றால் சமானியப்பட்ட விசயமில்லை. உட்கார்ந்து பயணத்ததில் முதுகு வலி, இடுப்பு வலி, கழுத்து வலி. 28 வயது இளைஞனென்றாலும் எந்த வலியும் இல்லாமலிருக்குமா ? ‘உட்கார்ந்து வரும் பயணிகளுக்கே இந்த வலிகளென்றால் பாவம் ஓட்டுநர்கள் எப்படித்தான் ஓட்டுகிறார்களோ ?!’ என்று வலி ஆரம்பத்திலேயே அவர்கள் மீது நடேசுக்குப் பச்சாதாபம். இப்படிப்பட்ட

.


Read More


காணாமல்போன கதை - எஸ்.கண்ணன்

மிக மிகச் சின்ன வயதிலேயே வீட்டிலிருந்து காணாமல் போகிற ஆர்வம் என்னுள் ஒரு யதார்த்தமான உந்துதலாகவே வளர்ந்து விட்டிருந்தது. என்னுடைய பதினைந்து வயதுவரை ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வொரு விதமாக எங்கள் வீட்டிலிருந்து நான் காணாமல் போய்க்கொண்டே இருந்தேன். கடைசியாக நான் காணாமல் போனது என் பதினைந்தாவது வயதில். காணாமல் போயிருந்த காலம் சுமார் ஆறு வருடங்கள். அதுதான் மிகவும் நீண்ட காலம் நான் காணாமல் போயிருந்தது. அதற்கு முன்பு சில நாட்கள் அல்லது சில வாரங்கள்தான் நான்

.


Read More

நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.

Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2018]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.

To change your subscription, click here.