சிறுகதைகள் (Short Stories in Tamil)
www.sirukathaigal.com
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்

View this email online

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஆலய தரிசனம்

 அபிராமியம்மா மீளாத்துயிலில் ஆழ்ந்திருந்தா. வெள்ளை வெளேறென்ற அவவின் முகத்தில் ஒரு நாணயம் அளவு குங்குமப்பொட்டு மிளிர்ந்து கொண்டிருந்தது.நிரந்தரப் புன்னகையொன்று இதழ்கடையில் விரிந்து முகத்தை மேலும் பொலிவுபடுத்தியது. வாழ்வினை நிறைவாக அனுபவித்துப் பூர்த்தியாக்கிச் சுமங்கலியாகப் போகிறேன் என்ற நினைப்பு அவரது புன்னகைக்குக் காரணமாகலாம்.…

பவித்ராவும் நானும்

 3. குறுந்தொகை பாடல் – 28 (ஔவையார் – முட்டுவேன் கொல்? தாக்குவேன் கொல்? ஏண்டீ.. இப்டி இருக்கே …. என்னா ஆச்சி உனக்கு… பதில் வரவில்லை பவித்திராவிடம் இருந்து. வாயை திறந்தா என்ன முத்தா கொட்டிடும். கமலத்தை முறைத்து பார்த்தாள்…

இதையாவின் இதயத் துடிப்பு

 முகவுரை மனிதனின் இதயம் கணனியின் மையச் செயலாக்க அலகாக செயல் படுகிறது. இதயத்தின் செயல் உடலின் பல பாகங்களில் செயல்களைப் புரியும் பகுதிகளோடு சேர்ந்து இயங்குகிறது. படக் படக் என்று அடிக்கும் இதய துடிப்பு நிமிடதுக்கு சராசரி 72 ஆகும். இது…

வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு!

 அத்தியாயம்-1 | அத்தியாயம்-2 “பாரிஸ் ஜஃபல் டவரைவிட இது உயரமா?”-முத்து கேட்டார். “ஆமாம். ஆனா, அது வெய்ட் அதிகம். 7000 டன் கனம். இது 4000 டன்தான்”- புள்ளி சொன்னர்ர். “அதாவது-இது கனம், அது மகாகனம்” என்றார் முத்து. “ஜப்பான்ல அடிக்கடி…

அவன் அப்படித்தான்…

 அது ஒரு காலைப்பொழுது ! பெயர் தெரியாத பறவைகள் எல்லாம் பெயர் வைக்கப்படாத ராகங்களை பாடி மகிழ்ந்து திரிந்தன. இரண்டு புறமும் பச்சைப்பசேல் நிலங்களாய் கடந்ததைப் பார்த்தபோது அந்த கிராமத்தில் இன்னமும் நீர் மிச்சமிருப்பதையும் நீர் திருடும் கம்பெனிகளின் கழுகு கண்களில்…

நட்பு என்பதே தெய்வமானது

 முற்றத்து நாவல் மரத்தடியில் தன் பழைய ரலி சைக்கிளை சாத்தியபடி உள்ளே யாராவது வருகிறார்களா என்று பார்த்தபடி குரல்கொடுக்கிறார்… ‘தம்பி’ குரலில் குழையும் கருணை,அன்பு,வாஞ்சை … வெயில் கொஞ்சம் கொஞ்சமாக மேலெழுந்துகொண்டிருந்தது. அப்பா உள்ளேயிருந்து வந்தபடி, ‘வாரும்..வாரும்..’அழைத்தார். கையைக் குலுக்கியபடி உள்ளே…

பேருந்தில் வந்த பேரழகி

 அலுவலகத்திலிருந்து களைத்து வீடு திரும்பியபோது எனக்காகக் காத்துக் கொண்டிருந்தான் நண்பன் பிச்சமுத்து. “வாடா, ஏன் தாமதம்..?” என்றான். “அலுவலகத்துல எனக்கு மேலே இருந்த அதிகாரி திடீர்னு வேலையை ராஜினாமா பண்ணிட்டார். இப்ப எல்லா வேலையும் என் தலையில விழுந்துடுச்சு.” என்றவாறே காலணிகளைக்…

வலி…!

 ‘எப்படி… எப்படி தன் கணவனை மாற்றுவது..? தன் வலி , வருத்தத்தை அவருக்குப் எப்படி புரிய வைப்பது..? எவ்வாறு உணரவைப்பது..? ‘- தினம் மனமெங்கும் இதே கேள்வியாக வளைய வந்த மாலினி… கணவன் சிவா கிளம்பி அலுவலகம் சென்ற பின்பு கதவைச்…

ஒன்னே இழந்தா தான், மத்தொண்னு கிடைக்கும்…

 அத்தியாயம்-27 | அத்தியாயம்-28 ரமா தன் வேலையில் மிகவும் கவனமாக இருந்து வந்துக் கொண்டு மேலிடத்தில் நல்ல பேர் வாங்கிக் கொண்டு வந்தாள். ரெண்டு வருஷம் ஓடி விட்டது. திடீரென்று ஓரு நாள் ‘ரமாவுக்கு டெல்லிக்கு மாற்றலாகி விட்டது’ என்று ஒரு…

வராஹ அவதாரம்

 புராணங்களில் விஷ்ணு புராணம்தான் சிறப்பானது என்றால் அது மிகையல்ல. விஷ்ணுவே மும்மூர்த்திகளின் காரண கர்த்தா என்று கூறுகிற இந்தப் புராணம் பக்தியின் மேன்மையை வலியுறுத்துகிறது. மற்றப் புராணங்களைப் போலவே இதிலும், உலக சிருஷ்டி போன்ற பல விஷயங்கள் வர்ணிக்கப் படுகின்றன. துருவன்,…

ஆசிரியர் பகுதி:

கதையாசிரியர் பகுதியில் இன்று குப்பிழான் ஐ.சண்முகன் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய பெயர் இங்கே இடம் பெற, உங்களை பற்றி ஒரு பக்க விபரங்களை அனுப்பவும். ஏற்கனவே உங்கள் விபரங்களை அனுப்பி இருந்தால், அதனை கதையாசிரியர் பகுதியில் காணலாம், அடுத்து வரும் செய்திமடலில் இங்கே இணைக்கப்படும்.

குப்பிழான் ஐ.சண்முகன்

ஐ. சண்முகலிங்கம் (பிறப்பு ஆகஸ்டு 1, 1946, குப்பிழான், யாழ்ப்பாணம்) குப்பிழான் ஐ. சண்முகம் என்ற பெயரில் எழுதும் ஈழத்து எழுத்தாளர். பேராதனைப் பல்கலைக் கழகத்தில் கலைப்பட்டம் பெற்ற இவர் ஓர் ஆசிரியர். சிறுகதையாசிரியராக கவனம் பெற்ற சண்முகன் இசை, சினிமா, ஓவியம் போன்றவற்றிலும் ஈடுபாடுடையவர். அலையின் ஆரம்ப ஆசிரியர் குழுவில் இடம்பெற்றவர்…

சிறுகதை பற்றி:

சிறுகதை எப்படி எழுதுவது என்று பல ஆசிரியர்களின் கருத்துக்களை இங்கே படிக்கலாம். மேலும் விபரங்களை சிறுகதைப்-பற்றி பகுதியில் காணலாம்.

சிறுகதை என்பது – புதுமைப்பித்தன்

 சிறுகதை என்பது தற்காலத்தில் (1934ல்) எழுந்த மேனாட்டு சரக்கு, சிறுகதை என்றால் சிறுகதை கொஞ்சப் பக்கங்களில் முடிந்து விடுவது என்பதல்ல. சிறுகதை என்ற பிரிவு இலக்கியத்தில், அதில் எழுதப்படும் பொருள் பற்றியது ஒரு சிறு சம்பவம் ஒரு மனோநிலை ஆகிய இவற்றை…

சில குறிப்புகள்:

சென்ற மாதம் பார்வையிட்டோர்:40,942
மொத்தம் பார்வையிட்டோர்:29,48,438
சென்ற மாதம் படிக்கப்பட்ட கதைகள்:1,13,585
மொத்தம் படிக்கப்பட்ட கதைகள்:1,08,94,920

தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்கு மிக்க நன்றி.
Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2021]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.