This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.

சிறுகதைகள் (Short Stories in Tamil)

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்:http://www.sirukathaigal.com/2019/06/16/.

கடவு உள்ளம் - பிரசன்ன ரணதீரன் புகழேந்தி

கருவறையில் அமர்ந்திருந்த கபாலிக்கு‌ அந்த கூச்சல்களையும் வசவுகளையும் எண்ணி சற்று மன சங்கல்பம் உண்டானது. அருகில் இருந்த பட்டரை ஓரக்கண்ணால் ஏற பார்த்தான் ஆனால் அவன் மேனியில் எந்த அசைவுகளும் தென்படவில்லை. கபாலியின் மனக்குமுறலை அந்த பட்டர் எப்படி அறிந்திருப்பார். ஒருவாறு மனத்தாங்கலுடன் அமர்ந்திருந்த தொனியில் ‘சாம்பு மவனே எதனா பாட்ட போட சொல்லுடா’ என்று முனுமுனுக்கையில் உலகாளும் ஈஸ்வரனின் குரல் கேட்டதோ என்னவோ சட்டென பட்டர் ‘நாழி ஆயிடுத்து பூஜய ஸ்டார்ட் பண்ணுங்கோ’ என கூறினார்

.


Read More


சவப்பெட்டி - இரா.சடகோபன்

சந்தனு அந்த கற்பாறையில் அமர்ந்து கடுமையாக யோசித்துக் கொண்டிருந்தான். அவன் வாழ்க்கையில் பல விடயங்களிலும் பல்வேறு முயற்சிகள் செய்து தோல்வியடைந்து நொந்துபோய் இருந்தான். தனக்கு மட்டும் ஏன் இத்தகைய பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்று பலமுறை யோசித்து யோசித்து அதில் இருந்து விடுபட முடியாமல் மிகுந்த விரக்தி நிலை நோக்கி சென்று கொண்டிருந்தான். அவன் குடும்பத்தில் அப்பா, அம்மாவைத்தவிர அவன் ஒரேயொரு பிள்ளைதான். அதனால் வீட்டில் அவனுக்கு எல்லாச்சலுகைகளும் வழங்கப்பட்டிருந்தன. அவனுக்குக் கிடைத்த செல்லம் காரணமாகவோ என்னவோ அவனுக்கு

.


Read More


சேற்றில் மலர்ந்த செந்தாமரை - ஜெ.சங்கரன்

அத்தியாயம்-8 | அத்தியாயம்-9 செந்தாமரை உடனே அவர் காலைத் தொட்டு தன் கண்களில் தன் ஒத்திக் கொண்டு ”சார், நீங்க ரெண்டு பேர் மட்டும் என்னை படிக்க வைக்காம இருந்தா நான் எட்டாவதோடு என் படிப்பை நிறுத்தி விட்டு,அந்த சேத்துப் பட்டு குடிசையிலே எவனாவது ஒரு குடிகாரனை கல்யாணம் பண்ணிக் கொண்டு வாழ்ந்து வந்து கொண்டு இருந்து இருப்பேன்.நீங்க ரெண்டு பேர் செய்த இந்த மாபெரும் உடவியை நான் என் வாழ் நாள் பூராவும் மறக்கவே மாட்டேன்.நீங்க

.


Read More


ஈ - கோ.புண்ணியவான்

ஆபீசிலிருந்து தீம்பாருக்குள் நுழைந்து செம்மண் சாலையை அடைந்து, அரக்கப் பறக்க தார் சடக்குக்கு ஓடிவந்து சேர்வதற்கு முன்னாலேயே பத்து மணி பஸ் கண் பார்க்கக் கடந்து போய்க்கொண்டிருந்தது. எப்படியாவது நிறுத்திடவேண்டும் என்ற பதற்றத்தோடு கையசைத்து ஓடி வந்தும் பஸ் டிரைவர் சட்டை செய்யாமல் போய்விட்டிருந்தான். தன் கண்முன்னால் கடக்கும் பஸ்ஸை கரித்துக்கொட்டினான் வேலைய்யா. தன்னை ஒரு புழுவென உணர்ந்த தருணங்களில் ஒன்று அது. இனி பன்னிரண்டு மணிக்குத்தான் அடுத்த பஸ். இதே பஸ்தான் கூலிம் போய் அப்படியே

.


Read More


ஸ்வப்னப்பரியா - இந்திரா செளந்தர்ராஜன்

ஸ்வப்னப்பரியா பார்ப்பதற்கு ஜில்லென்று இருந்தாள். அசலான நாமகரணப் பெயர் விஜய கனகம்மா நாகலா தேவி என்பது தான். சினிமாவுக்கு தான் இந்த மாதிரி ரயில் நீளப்பெயர்கள் ஆகாதவை ஆயிற்றே? அதிலும் இது சரியான காரமான அந்திய பெயர். அதை அடித்து திருத்தி ஸ்வப்னப்ரியா என்று ஆக்கியவன் பலப்பல வருடங்களாக ஹீரோவாகவே ஆட்டமாடி கொண்டிருக்கும் சதா சிவராஜாவாக இருந்து பின் சினிமாவுக்காக ஸ்ரீராஜ் ஆன மக்களின் இதயநாயகன் தான். இத்த வருஷத்தில் எவ்வளவோ ஹீரோயின்களை பார்த்து விட்டான். அவனோடு

.


Read More


திருவிளையாடல் - யுவகிருஷ்ணா

வெங்கடேசுக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம் என்பது பள்ளியின் புல் பூண்டுக்கு கூடத்தெரியும். இருந்தும் இரண்டு பேரும் எப்போதும் ஒரே ஜமாவில் கும்மியடிப்பது பலருக்கு ஆச்சரியம். என்னைப் பொறுத்தவரை கருத்து வேறு, நட்பு வேறு. அவனுக்கும் அப்படித்தான் என்று நினைக்கிறேன். எங்கள் பள்ளியையும், பக்கத்தில் இருக்கும் மகளிர் மேல்நிலைப் பள்ளியையும் பிரிப்பது ஒரு ஐந்தடி உயர சுவர் மட்டுமே. சுவற்றுக்கு கீழே நான்கைந்து செங்கல்களை போட்டு உயரம் கூட்டி பக்கத்து கிரவுண்டில் விளையாடும் சிட்டுக்குருவிகளை பார்த்து ரசிப்பது எங்கள்

.


Read More


இளிச்ச வாய் பூனை - ஜே.கே

சிவகாமியும் இளிச்ச வாய் பூனையும்! கோழிக்கூட்டுக்கு பக்கத்தில் நின்ற சின்ன நெல்லி மரத்தின் நடுக்கொப்பில் இருந்தபடி சிவகாமி விக்கி விக்கி அழுதுகொண்டிருந்தாள். புலமைப்பரிசில் பரீட்சைக்கு இன்னமும் நான்கு மாசங்கள் கூட இல்லை. ஆனால் இந்த சிட்டை கணக்கு மட்டும் சிவகாமிக்கு சமப்படுதே இல்லையாம். படிக்கும்போது அப்பா தலையில் ஒரு குட்டு போட்டு விட, கிளுக் என்று அழுதபடியே அதே வேகத்தில் நெல்லி மரத்தில் ஏறியவள் தான். வீட்டில் உள்ளவர்கள் கேட்கும் டெசிபலில் இன்னமும் அழுதுகொண்டிருந்தாள். இப்படியே எவ்வளவு

.


Read More


விவாகரத்து! – ஒரு பக்க கதை - காரை ஆடலரசன்

கோர்ட். நீதிபதி ஆசனத்தில் அமர்ந்திருக்க….. குற்றவாளி கூண்டுகளில் எதிரும் புதிருமாக கணவன் மனைவி கணேஷ்; – கமலா. நடுவில்… வக்கீல்கள் வரிசையை ஒட்டி இவர்கள் குழந்தைகள் பத்து வயது பாபு, ஏழு வயது கிருபா. நின்றார்கள். நீதிபதி கணேசைப் பார்த்து…… ”உங்க விவாகரத்துக்கான கடைசி கெடுவு நாளான இன்று இறுதி முடிவாய் கேட்கிறேன். உங்களுக்கு மனைவியோடு வாழ விருப்பமில்லை. விவாகரத்துத் தேவையா?” கேட்டார். ”தேவை சார் !” கணேஷ் தயங்காமல் பதில் சொன்னான். ”கமலா ! நீங்க

.


Read More


காவல்காரன் - பா.அய்யாசாமி

ராசம்மா,ஒற்றைக் கிழவியாய் வசிக்கும் குடிசை வீடு. இட்டிலி வியாபாரம். மிச்சமீதி இட்டிலிக்காக நாள் முழுவமும் காத்து கிடக்கும் எலும்பும் தோலும் வெளியே தெரிய மணி என்கிற நாய். ராசம்மா கணவன் குடியால் உயிர் பிரிய, தனது கணவன் பேரை நாயிக்கு வைத்தாள் திட்டுவதற்காகவே. அருகே உயர்ந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பணக்காரத் தம்பதியருக்கு வாரிசு என்று யாரும் இந்தியாவில் இல்லை, ஒற்றை உயர்ரக நாய் ரியோவைத் தவிர, உயர் ரக உணவுகளும், பிஸ்கெட்களும் சாப்பிட்டு வகைத்தொகை இல்லாமல்

.


Read More


இசக்கி ஒரு சகாப்தம் - எஸ்.கண்ணன்

(இதற்கு முந்தைய ‘மூன்று வாரிசுகள்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) இசக்கி அண்ணாச்சி வேறு எந்த நினைப்பும் இல்லாமல் மூன்று வாரிசுகளை கண்ணும் கருத்துமாய் வளர்ப்பதிலேயே கவனத்துடன் இருந்தார். அந்தக் கவனத்தில் வருசங்கள் அது பாட்டுக்கு ஓடியது கூடத் தெரியவில்லை. பெரியவன் சரவணனுக்கு பதினெட்டு வயதாகி ப்ளஸ் டூ தமிழ் நாட்டிலேயே முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றான். அடுத்தவன் முருகனைப் பற்றியும் கேட்க வேண்டாம் – பத்தாவது வகுப்பில் பள்ளிக் கூடத்திலேயே அதிக மார்க்

.


Read More

நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.

Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2019]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.

To change your subscription, click here.