This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.

சிறுகதைகள் (Short Stories in Tamil)

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்:http://www.sirukathaigal.com/2019/04/06/

என்ன காரணம்? - இரா.சடகோபன்

அங்கஜனுக்கு மிகக் கவலையாக இருந்தது. அவன் அந்த பாடசாலையின் விவசாயப் போதனாசிரியராக அண்மையில்தான் நியமனம் பெற்று வந்திருந்தான். அவனது அந்த பாடசாலை அதிபர் அவன் என்ன விதமான விவசாயக் கல்வியை அந்த பாடசாலை மாணவர்களுக்கு கற்பிக்கவேண்டுமென்று விளக்கமளித்துக்கொண்டிருந்தார். அவர் அண்மைக் காலமாக அங்கு பல மரணங்கள் சம்பவித்துவிட்டதாக மிக வருத்தத்துடன் தெரிவித்தார். மனிதர்கள் மிருங்கங்கள், பறவைகள், மரஞ்செடிகள் கூட பரவலாக மரணித்து வருகின்றன என்று கவலை தெரிவித்தார். ‘‘அவன் அதற்கு என்ன காரணமாக இருக்கும்’’ என்று தாழ்ந்த

.


Read More


சலோ, சலோ! - கடல்புத்திரன்

(நினைவுகளை இரை மீட்பதற்காக எழுதிய தொடர்) அத்தியாயம் ஒன்று! | அத்தியாயம் இரண்டு! | அத்தியாயம் மூன்று! வடக்கராலியில், இதைப் போல நாலு ஐந்து குறிச்சிகள் இருக்கின்றன. செட்டியார்மடம், மையிலியப்புலம், பள்ளிக்கூடத்தடி, சந்தையடி. நாகேந்திரமடம் என்று சொல்லப்படுகிற இங்கே மட்டும் தான் ‘பைப்புகள் வசதிகள் இருக்கின்றன‌.மற்றையவற்றில் இல்லை. சிலவேளை, சந்திரா இருக்கிற வீட்டுக்குப் பக்கத்திலிருக்கிற‌…வயல்ப் பக்கமிருந்த குடவைக் கிணற்றுக்கு நகுலன் சைக்கிளிலே போய் குடத்திலே நீர் பிடித்து ,தோளிலே குடத்தை வைத்துப் பிடித்துக் கொண்டு ஒரு கையால்

.


Read More


விள மீன் - ஜே.கே

கடையிலிருந்த குவியலில் மீதி எல்லா மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க, அந்த ஒரு மீன் மாத்திரம் வித்தியாசமாய் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொன்னார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” ஊருக்கு இனி

.


Read More


நெடும் பயணம் - முனைவர் ஆ.சந்திரன்

அனுமன் வால் போல் நீண்டது அப்பயணம். தொடங்கியது யார் தொடங்கி வைத்தவர்கள் யார்? என்று யாருக்கும் தெரியாது. ஆனால் தொடர்ந்து கொண்டுள்ளது முடிவில்லாத அப்பயணம். அப்பயணத்தை நான் எங்கிருந்து ஆரம்பித்தேன் என்று சரியாக இப்போது நினைவில்லை. ஆனால் வானைத் தொட்டு நின்ற அந்த மலையில் வெண்மேகம் தவழ்ந்து கொண்டிருந்த அந்த காட்சிதான் எனக்கு இப்போது நினைவில் உள்ளது. அந்த அழகிய காட்சியில் இருந்துதான் என்னுடைய பயணம் தொடங்குகிறது. அப்படின்னா அதுதான் என்னுடைய துவக்கப் புள்ளி என்று நினைக்கிறேன்.

.


Read More


பக்கத்து வீட்டுக்காரியின் மோப்பம் - முல்லா

முல்லாவின் வீட்டுக்கு அடுத்த வீட்டில் ஒரு பெண்மணி வசித்து வந்தாள். முல்லா வீட்டில் என்ன சமையல் செய்தாலும் அவள் அதை மோப்பம் பிடித்து தனது சிறிய மகளை அனுப்பி சமைத்த பொருளை கொஞ்சம் கேட்டு வாங்கி வரச் சொல்வாள். அவளுடைய அந்த விரும்பத்தகாத வழக்கம் முல்லாவுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. அதை எப்படித் தடுப்பது என்றும் விளங்கவில்லை. ஒருநாள் முல்லாவுக்கு கோழிக்குஞ்சு சூப் தயாரிக்கச் செய்து சாப்பிட வேண்டும் என்று ஆசையாக இருந்தது. சூப் தயார் செய்யச்

.


Read More


தியானத்திற்கு ரெடியா? - சௌ.முரளிதரன்

(தியானம் – 3) “பரங்கி மலையை, பத்து நிமிட நேரம் என் தோளில் சுமந்து காட்டுகிறேன்” என்று சவால் விட்டான் ஒரு பலசாலி பயில்வான், தன் திரண்ட முஷ்டிகளை தட்டிய படியே. சுற்றி நின்றவரிடம் அசால்டாக கேட்டான் “ என்ன பந்தயம் ? என்னால் சுமக்க முடியவில்லை என்றால், நான் ஒரு லக்ஷம் ரூபாய் கொடுக்க தயார்! சுமந்து காட்டினால், ஒரு லக்ஷம் கொடுக்க நீங்க தயாரா?” யாரும் அவனை நம்பவில்லை. இது முடியாத காரியம், ,

.


Read More


மனசு… - உஷாதீபன்

தினமும் அந்த வீட்டைக் கடந்துதான் போய்க் கொண்டிருக்கிறேன். அதுதான் சுருக்கு வழி. கடந்து செல்லும் அந்த ஒரு கணத்தில் என் பார்வை அங்கே திரும்பாமல் இருந்ததில்லை. காலையில் தண்ணீர் வந்ததற்கு அடையாளமாய் அங்கே சுற்றிலும் ஈரமாக இருக்கும். ப்ளாஸ்டிக் குடங்களில் தண்ணீர் பிடித்து வைக்கப்பட்டு வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும். தண்ணீர் வராத நாட்களிலும் வெற்றுக் குடங்கள் அதே வரிசையில்தான் இருக்கும். கடந்து போய்க் கொண்டேயிருப்பார்கள். பொழுது விடிந்தால் எங்கள் பகுதியில் பலரும் சைக்கிளில் குடங்களைக் கட்டிக் கொண்டு பறந்து

.


Read More


அம்மா ஏன் இப்படி இருக்கிறாள்? - ஸ்ரீ.தாமோதரன்

அம்மா அந்த இஞ்சீனியர் வந்தார்னா முதல்ல இந்த மண்ணை எல்லாம் எடுத்து அக்கட்டா போட சொல்லிடு, சொல்லிவிட்டு அம்மாவை பார்த்த மாலதி, அவள் எங்கோ வெறித்து பார்த்துக்கொண்டிருப்பதை பார்த்து அம்மா அம்மா என்று உரக்க கூப்பிட்டாள். திடுக்கிட்டு விழித்த அம்மா என்ன? என்ன? சொன்ன? ஆமா போ ! இவ்வளவு நேரம் கரடியா கத்திகிட்டு இருக்கேன், காதுல வாங்காம உட்கார்ந்துட்டு இப்ப கேளு. சலித்துக்கொண்டே மீண்டும் அந்த வேலையை சொல்லி செய்ய சொன்னாள். சரி என்று ஒற்றை

.


Read More


கரை ஒதுங்கிய காற்று - பா.அய்யாசாமி

தாயே! உன்கிட்ட வேண்டியபடியே என் பொண்ணுக்கு நல்ல இடத்திலே சம்பந்தம் கிடைச்சிடுத்து, நான் நினைத்தபடியே உன் அருளாலே உன் கோயில்கிட்டேயே ஒரு கல்யாண மண்டபமும் கட்டி முடிச்சாச்சு, நீதான் கூட இருந்து நல்லபடியா என் பொண்ணோட திருமணத்தை முதல் திருமணமா அந்த மண்டபத்திலேயே நடத்தி கொடுக்கனும் அம்மா! பத்திரிக்கையை தன் குலதெய்வமான மாரியம்மன் சன்னதியில் வைத்து மனதுருக வேண்டினார், குடும்பத்தாருடன் வந்திருந்த சீனி என்கிற சீனுவாசன். சீனிக்கு பூர்வீகம், வேதாரண்யம் அருகே ஒரு அகத்தியாம்பள்ளி கிராமம், அவர்கள்

.


Read More


தனிமை - எஸ்.கண்ணன்

( இதற்கு முந்தைய எனது ‘சமையல்காரன்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது ). மனைவி மரகதத்தின் இறப்பிற்குப் பின் சபரிநாதன் மிகவும் வதங்கிப்போனார். நாட்களை தனிமையில் மிகவும் வேதனையுடன் நகர்த்தினார். அன்று சமையல்காரர் சிவக்குமார் சமைத்துப்போட்ட மத்தியான சாப்பாட்டை மன நிறைவுடன் சாப்பிட்டுவிட்டு எழுந்து கொள்ளாமல் அங்கேயே உட்கார்ந்திருந்தார். பருப்பு உருண்டை குழம்பு; மைசூர் ரசம்; முட்டைக்கோஸ் பொரியல், சேப்பங்கிழங்கு வதக்கல்… எல்லாம் கலந்த அறுசுவை உணவு அவரின் வயிற்றுக்குள் செரிமான திரவங்களை திணற

.


Read More

நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.

Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2019]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.

To change your subscription, click here.