This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.

சிறுகதைகள் (Short Stories in Tamil)

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்:http://www.sirukathaigal.com/2019/02/27/.

பூனையிடம் கதை கேட்ட எலிகள்! - கன்னிக்கோவில் ராஜா

அழுதபடியே வந்தது மியா பூனைக்குட்டி. மிக அழகாக இருக்கும். அது அழுவதைப் பார்த்தால் உங்களுக்கும் அழுகை வந்துவிடும். பாட்டி பூனை, “ஏன் அழறே? கீழ விழுந்துட்டியா?” என்று கேட்டது. “இல்லை” என்று அழுதபடியே தலை ஆட்டியது மியா. “யாராவது அடிச்சாங்களா?” “இல்லை” என்று தலை ஆட்டியது. “அப்புறம் என்ன ஆச்சு? நீ அழுவதற்குக் காரணம் தெரிந்தால் தானே நான் உனக்கு உதவ முடியும்?” என்று மியாவை அணைத்துக்கொண்டது பாட்டி பூனை. “நான் எலி வேட்டைக்குப் போனேனா…” “ம்…”

.


Red More


கறிவேப்பிலை மாமா - நாங்குநேரி வாசஸ்ரீ

எ 2 ப்ளாக் ல குடியிருந்த மாமி காலையில 6 மணிக்கு செத்துப் பொயிட்டாங்களாம். உங்கள பூரணி அம்மா போன் பண்ணச் சொன்னாங்க. சொசைட்டி கிரவுண்டில் கால்பந்து பயிற்சி முடிந்து வீடு திரும்பிய விக்னேஷ் சொன்ன தகவல் மனதைப் பிசைய ஆரம்பித்தது. முன்னூறு வீடுகள் கொண்ட டில்லியின் அந்த விக்டோரியா சொசைட்டியில் மொத்தம் நாங்கள் மூன்று பேர் தான் தமிழர்கள். மாமி நன்றாய்த் தானே இருந்தாள். போனவாரம் செவ்வாய் கிழமை காய்கறிச் சந்தையில் சந்தித்தது. அதுவே கடைசி

.


Read More


வேண்டாதவர்கள் - நிலாரவி

பாழாய்ப்போன பசி. காலை ஏழரை மணிக்கெல்லாம் வயிற்றில் நெருப்பாய் தகிக்கிறது. கொஞ்சம் கூட பொறுக்க முடிவதில்லை இந்த வயதான காலத்தில். இத்தனைக்கும் இந்தப் பசிக்கு வயிறு முட்டச் சாப்பிட வேண்டிய அவசியமெல்லாம் இல்லை. இரண்டோ மூன்று இட்லி போதும். இரண்டு விள்ளல் பிட்டு வாயில் போட்டுக்கிட்டால் போதும் கொஞ்சம் ஆசுவாசமாகிவிடும். இரண்டு இட்லிக்கே வயிறும் மனசும் முழுசா நிறைஞ்டும். ஆனால் அதுக்குத்தான் இந்தக் காலை நேரத்தில் பாடாய் பட வேண்டி இருக்குது. தினமும் அதிகாலையில் அஞ்சு மணிக்கு

.


Read More


ஒரு நல்ல செய்தி! - முல்லா

அந்த ஊரில் ஒரு வழக்கம் உண்டு. யாராவது ஒருவர் நல்ல செய்தியொன்றைச் சொன்னால், அதற்காக அவர்களுக்கு பணம் வசூலித்து அன்பளிப்பாகக் கொடுப்பார்கள். அந்த வழக்கம் ஒருவிதமான மூடநம்பிக்கை என்பது முல்லாவின் கருத்து. அந்த மக்களுக்குப் புத்தி கற்பிக்க வேண்டும் என்று முல்லா கருதினார், ஒருநாள் அவர் சந்தை கூடும் இடத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்த ஒர் இடத்தில் நின்று கொண்டு, ”அன்பார்ந்த பொதுமக்களே! உங்களுக்குச் சொல்வதற்காக அருமையான நல்ல செய்தி ஒன்றை வைத்திருக்கிறேன். எனக்குப் பரிசு

.


Read More


எனக்கும் அப்படித்தானுங்க தோணுச்சு! - வா.மு.கோமு

வரதராஜனுக்கு நேரம் ஆகியபடியிருந்தது. வீட்டில் அம்மா ஒருத்தி மட்டும் தான். நேரம் இரவு பத்தையும் தாண்டிவிட்டது. கிட்டத்தட்ட அந்த குறுநகரில் எல்லாக் கடைகளும் சாத்தப்பட்டுக் கொண்டிருந்தன. இவன் பேருந்து நிறுத்தத்தில் காத்து நின்றிருந்தான். அம்மா இவன் போய் வீடு சேர்ந்து வண்டியை நிறுத்தும் வரை தூங்காது. அம்மாவுக்கு ப்ரஷர் வேறு இருக்கிறது. மாத்திரையை சரியான நேரத்திற்கு போட்டு விட்டு தூங்க வேண்டும். அம்மாவுக்கு ஒரு செல்போனை வாங்கி கொடுத்து விட்டால் இந்த மாதிரி சமயங்களில் வர தாமதமாகுமெனச்

.


Read More


வட்டி - எஸ்.அகஸ்தியர்

– காசு கேட்கிற குறி அறிந்தாலே , ‘என்ன ஏதும் சல்லி கில்லி ஊணுமா?’ என்று பாத்திமா கொடுத்து உதவுகிற சீதக்காதி வாரிசு அல்ல. இவவிடம் அது நூற்றுக்குப் பத்து வட்டி. அதற்குமேல் கொடுத்தால் வீதம் எட்டு. காலப்பாடு அறிந்து சிலவேளை இது பதினைந்தாக ஏறுவதுண்டு. வேளைப் பிசகு வந்து கையில் ‘கடிக்கிற’ போது எதிர்பாராமல் இதுவே திடீரென்றும் மாறும். இந்தச் சங்கதி தெரியாதவர்கள் அந்தத் தோட்டங்களிலே கிடையாது. ‘தாரு வூட்டில? கதவைப் பூட்டிக்கிட்டிருக்கீங்கலே, எந்திரிச்சு வெளியே

.


Read More


மதுர கீதம்… - மு.சிவலிங்கம்

அந்த மலைப்பாறையில் அமர்ந்தபடி ஒரு வெள்ளை மண்ணாங்கட்டியினால் கோடுகள் கீறிக் கொண்டிருந்தான் சீனி. அவனது இதயத்தடாகத்தில் கொந்தளித்த எண்ணக் குமிழிகள் இப்படி பலவாறு அவனது வாழ்வுச் சம்பவங்களை ஒன்றன்பின் ஒன்றாக உருண்டோடும் மலைச்சரளைகளென உதிர்த்துக் கொண்டிருந்தன…. அந்த¸ பெரிய குப்பைமேடு அந்த லயத்துக்கோடியில் தான் இருக்கிறது. பத்து வீடுகளை வரிசையாக்கிக் கொண்டிருக்கும் லயத்தின் குப்பைக் கூளங்களெல்லாம்¸ அந்தக்கோடிப்புற குழியை நிறைத்து மேடாக்கிவிட்டிருந்தன. அந்தக் குப்பை மேட்டின் ஜீவசத்துக்களையெல்லாம் உண்டு கொழுத்து அதையே ஆக்கிரமித்து ஆதிக்கம் செய்து¸ பூத்துக்குலுங்கி¸

.


Read More


வட்டிக்கு சேர்த்த பணம் - ஸ்ரீ.தாமோதரன்

கண்ணணூர் என்னும் ஒரு ஊரில் குஞ்சம்மாள் என்னும் பாட்டி வாழ்ந்து வந்தார்கள், பாட்டிக்கு எப்பொழுதும் பயம் தான், தன்னுடைய எதிர்கால வாழ்க்கைக்கு நிறைய சேமித்து வைக்க வேண்டும் என்று அந்த ஊரில் உள்ள ஏழைகளுக்கு அநியாய வட்டிக்கு விட்டு சம்பாத்தித்தாள். சரியான முரட்டு பேர்வழியாக இருந்தாள். ஒரு நாள் வட்டி கொடுக்க தாமதமானாலும் உடனே அபராத வட்டி போட்டு வாங்கி விடுவாள். இதனால் அங்குள்ள ஏழைகள் மிகுந்த துன்பபட்டனர். அங்குள்ள ஏழை மக்கள் மிகவும் வருத்தப்படுவார்கள். இந்த

.


Read More


சுமப்பவர் - காரை ஆடலரசன்

காலை மணி ஏழு. நான் கிராமத்தை நோக்கி கைக்கிளில் சென்ற போது நடுவழியில் தூரத்தில் ஒற்றை ஆளாய்த் தெரிந்த முகம் ஒன்று நடந்து வருவது போல் தெரிந்தது. உற்றுப் பார்த்தேன். அவரேதான் ஐயப்பன் கீதாரி. சுமார் பத்து வருடங்களுக்கு மேல் பார்க்காத ஆள். அதே நடை. அதே உடை. ஆள் மட்டும் கொஞ்சம் உடைசல் ஏன் ? வருடா வருடம் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் முதுகுளத்தூர் தாலுகா சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து தங்களிடமுள்ள ஆடுமாடுகளை மேய்த்து அப்படியே

.


Read More


பெருமாள் கடாட்சம் - எஸ்.கண்ணன்

எனக்கு வயது ஐம்பத்தைந்து. பெங்களூரில் சொந்தவீடும் வாசலுமாக பகவத் சங்கல்பத்தால் ஆரோக்கியமாக, சந்தோஷமாக இருக்கிறேன். என் வீட்டில் மனைவி சரஸ்வதி; மகன் ராகுல்; மருமகள் ஜனனி ஆகியோரின் உபயோகத்திற்காக மொத்தம் மூன்று கார்கள் இருக்கின்றன. நான்காவதாக எனக்கென்று ஒரு பென்ஸ் கார் வாங்க வேண்டுமென்பது, அதுவும் வெள்ளைநிற பென்ஸ் வாங்க வேண்டும் என்பது பல வருடங்களாக என் மனதுக்குள் கனன்று கொண்டிருந்த தீராத ஆசை. அந்த ஆசை சென்ற விஜயதசமி அன்று மதியம் நிறைவேறியது. கஸ்தூரிபா ரோட்

.


Read More

நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.

Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2019]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.

To change your subscription, click here.