This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.

சிறுகதைகள் (Short Stories in Tamil)

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்: http://www.sirukathaigal.com/2018/10/26/

தாகம்

 எனக்கு தண்ணீர் குடிக்க வேண்டும் போலிருந்தது. இந்த நேரம் ஜனனியும் பாப்பாவும் என்ன செய்து கொண்டிருப்பார்கள்? ஜனனி டிவியில் பாடல்கள் கேட்டபடி வேலை செய்து கொண்டிருக்கலாம். பாப்பா ஸ்கூலில் இருப்பாள். பேங்கில் எவ்வளவு பணம் இருக்கிறது? சரியாகத் தெரியவில்லை.சுமாராக ஒரு ஐம்பதாயிரம் இருக்கும். ஜனனிக்கு எவ்வளவு கிடைக்கும். ஒரு லட்சம்.அப்புறம் ஜிபிஎப் எல்லாம் சேர்த்து சுமாராக நாலு லட்சம் கிடைக்குமா? அதில் கடனெல்லாம் போக இரண்டு லட்சம் மிஞ்சும். அதை வைத்து எத்தனை நாள் சமாளிக்க முடியும்?

.


Read More


உறவு

 ஊருக்கொரு பஸ் நிலையம் இருப்பது வாஸ்தவம்தான். அப்புவின் ஊரில் இருக்கும் பஸ் நிலையத்தைப் பற்றிச் சொல்வதென்றால், அதைக் கேட்பதற்கும் திடமான, உறுதியான மனது வேண்டும். காதலில் சிக்குண்டவன் மனதுபோல இருந்தால் ஆபத்து. வலது புறத்தில் தொடங்குகிறது ஒரு நூறு அடிகளுக்கும் மேல் பழுத்த ஓலைகள், கொஞ்சம் நல்ல; அதன் கிடுகுகள் கொண்டு அமைக்கப்பட்ட, கடைக் காம்பராக்கள்.ராணுவ வீரர்களின் அணிவகுப்பை ஞாபகப்படுத்தும் வரிசைக்கு நிகரானவை. இடது புறத்தில் ஒரு கழிப்பறை. அங்கு கழிப்பது மட்டும்தான். அழுக்கை நீக்க தண்ணீரில்லை.

.


Read More


சாரல் பூத்த மனது…

 மூன்று திசைகளிலுமாய் முகம் காட்டி அமர்ந்திருந்த நெல்லிக்காய்கள் கொஞ்சம் முகம் வாடியும் பழுப்பு வர்ணம் கலந்தும்/ ”எதுக்கு இப்ப இத்தனை நெல்லிக்காய்களப் போட்டு வாங்கி வச்சிருக்க, பேசாம தேவைக்கு மட்டும் எதுவும் வாங்குன்னு சொன்ன கேக்குறீயா, இப்பப்பாரு வேஸ்டாக்கெடக்குதில்ல, இது இனி திங்குறதுக்கு ஆகாது, தூக்கி குப்பையில போட வேண்டியதுதான், என்றான் மனைவியை நோக்கி வார்த்தையையும் பார்வையையும் நிறுத்தாமல்/ ஊதாக்கலரில் காட்டன் சேலை கட்டியிருந்தாள்,ஏன் இப்பிடி வயசான பெரிய வுங்க மாதிரி காட்டன் சேலைகளகட்டிக்கிட்டு,நல்லதா டிசைன் சேலைகள

.


Read More


தந்தையின் மனைவி

 இன்று மேகலாவின் பள்ளியில் பழைய மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தங்கள் அனுபவங்களைப் பகிரும் நாள். பத்தாண்டுகளுக்கு முன்பு அப்பள்ளியிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுச் சென்ற அவர்கள் முதன் முதலில் மீண்டும் சந்தித்த போது மகிழ்ச்சிப் பெருமிதத்தில் நனைந்தனர். மேகலா தான் முழு ஏற்பாட்டையும் செய்திருந்தாள். ‘ஒவ்வொருவரா வந்து அவரவர்களுடைய குடும்பத்தப் பத்தி சொல்லிட்டு தங்களோட அனுபவத்த பகிர்ந்துக்கலாம்.’ முதலில் நான் ஆரம்பிக்கிறேன். மேகலாவுக்குப் பின் ஒவ்வொருவராகத் தொடர்ந்தனர். இப்பவும் முன்னால நின்னு பேசரது பிரச்சினையா. பேசாம

.


Read More


அறுவடை நாள்

 “அங்கேயே..நில்லுங்க…வீட்டுக்குள்ள நுழையாதீங்க..எத்தனை தடவை சொன்னாலும் காதுலயே போட்டுக்க மாட்டேங்கறீங்களே ஏன்?..போங்க ….போய் குளிச்சிட்டு நிலைப்படியை தாண்டி உள்ளே காலெடுத்து வைங்க…”என்று இரைந்தாள் இன்பவள்ளி. “ஏம்மா.!..அப்பாவை குளிச்சிட்டுதான் உள்ளே வரனும்னு சொல்ற..?”கேட்ட மகனிடம்..”ம்…நம்ம பண்ணைக் காட்டுல இன்னிக்கு அறுவடையில்ல…அங்க போயிட்டு வர்றாரு..அங்க வேலைபார்க்குற கீழ்சாதி காரவங்களை தொட்டு தொலைச்சி குழப்பியிருப்பாருடா…இந்த சங்ககெட்ட மனுஷனை திருத்தறது அவ்வளவு சுலபமில்லை…அதான் அப்படி சொன்னேன்”என்றாள். “ஏம்மா…கீழ்சாதிக்காரங்கன்னா யாரும்மா…?..ஏன் அவங்களை தொடக்கூடாது?”என்றான் மகன். “போடா…போய் படி..ரொம்ப நொய் நொய்ங்கறே…புத்திசிகாமணி பெத்த சீமந்த புத்திரன்ல..போ”எரிந்து விழுந்தாள்

.


Read More


ஸ்பூன்

 சென்னையில், வயதான அப்பாவும், பேச்சிலர் தம்பியும் கஷ்டப்படுகிறார்களென்று எனக்கும் அப்பாவுக்கும் சுவையாக சமைத்துப் போட ஒவ்வொரு முறையும் அக்கா உமா ஏதாவது காரணம் வைத்துக்கொண்டு மும்பையிலிருந்து மகன் கௌதமுடன் வந்துவிடுவாள். பிரச்சினை என்னவென்றால் எங்களால் வீட்டில் பாத்திர பண்டங்களை ஒழுங்காக பராமரிக்க முடியாது. இன்று நேற்றல்ல அம்மா மறைந்த கடந்த ஏழு வருடங்களாக. “போன முறை கூட வந்ததும் பத்து ஸ்பூன் வாங்கினேன், ஒண்ணக்கூட காணலை, எங்கேதான் போய் ஒழியுமோ இந்த ஸ்பூனெல்லாம் ச்சே“ என்று காபி

.


Read More


புத்தரின் கடைசிக் கண்ணீர்

 புத்தருக்கு அந்த ஏழை கொடுத்த விருந்தில் நச்சுக் காளான் கலந்திருப்பது தெரிந்தாலும் அவன் அன்பை எண்ணி, அவனின் பரிசுத்தமான மனதை எண்ணி, அதை உண்ணுபதால் அவன் பெறப் போகும் ஆனந்தத்தை எண்ணி, அமிர்தத்தின் அமிர்தமாய் புத்தர் அந்த ஏழை சமைத்துக் கொடுத்த காளான் உணவை அருந்தினார். ஆனந்தனுக்கு அந்த உணவில் நச்சுக் காளான் கலந்திருப்பது தெரியாது. தெரிந்திருந்தால் புத்தரைப் புத்தராகாமல் தடுத்திருப்பான். புத்தருக்கு நச்சுக் காளான் உணவில் கலந்து இருப்பது தெரிந்தும் அந்த ஏழையின் ஆனந்தத்தை மாத்திரம்

.


Read More


புத்தி சாதுர்யத்தால் சண்டையை சமாதானமாக்கியவன்

 முன்னொரு காலத்தில் கந்தன் என்னும் ஏழை விவசாயி வாழ்ந்து வந்தான். அவனிடம் சிறிதளவே நிலம் இருந்தது, அதனையே உழுது பயிர் செய்து வாழ்ந்து வந்து கொண்டிருந்தான்.அவனுக்கு மனைவியும், குமரப்பன் என்ற மகனும் இருந்தான். இவர்கள் மூவரும் அவர்கள் நிலத்தை ஒட்டிய இடத்தில் குடிசை போட்டு வாழ்ந்து வந்தனர். கந்தனும், அவன் மனைவியும் நல்ல உழைப்பாளிகள். குமரப்பன் புத்திசாலி குழந்தையாக இருந்த போதிலும்,கல்வி கற்க வைக்க இவர்களிடம் வசதி இல்லாததால் தினமும் விடியலில் மூவரும் எழுந்து பழையதை கரைத்து

.


Read More


பாடம் !

 எதிர் வீட்டிற்கு வேலையாய்ச் சென்ற மனைவி திரும்பி வரும்போது சுருசுருவென்று வந்தாள். ”உங்களுக்கு நல்ல இடம் பெரிய இடம் பார்த்துப் பழகத் தெரியாது.” முணுமுணுத்து அருகில் அமர்ந்தாள். ”என்ன ?” துணுக்குற்றேன். ”எதிர்வீடு…..எவ்வளவு தாய் புள்ளையாய்ப் பழகுறாங்க. அவுங்க மனசு வருத்தப்படுறாப்போல நடந்துக்குறீங்களே நியாயமா ?” கடுகடுத்தாள். ”விசயத்தைச் சொல்லு ?” அவுங்க வீட்டுப் பையன் நாலு நாளைக்கு முன்னாடி உங்ககிட்ட சைக்கிள் இரவல் வாங்கிப் போனானாம். போன இடத்துல சாவியைத் தொலைச்சுட்டு பூட்டை உடைச்சி எடுத்து

.


Read More


ஐயர் தாதா

 தி.நகர். சென்னை. சதாசிவ ஐயர் காலையிலேயே குளித்து பூஜை செய்துவிட்டு அன்றைய செய்தித் தாளில் மூழ்கியிருந்தார். எட்டு மணி இருக்கும். வாசலில் நிழலாடவே ஐயர் நிமிர்ந்து பார்த்தார். ஒரு இளைஞன் அவரிடம், “சார் என் பெயர் நரசிம்மன். உங்களைப்பற்றி நிறைய கேள்விப்பட்டு உங்களை நாடி உதவிகேட்டு வந்துள்ளேன்.” என்றான். “உட்காருங்கோ…” அவன் தயக்கத்துடன் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான். பார்ப்பதற்கு இளமைத் துடிப்புடன் சிவந்த நிறத்தில் லட்சணமாக இருந்தான். “சொல்லுங்கோ… நான் என்ன செய்யணும்?” “சார்… நான் ஒரு

.


Read More

நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.

Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2018]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content

To change your subscription, click here.