சிறுகதைகள் (Short Stories in Tamil)
www.sirukathaigal.com
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்

View this email online

வினோதினி பதினொரு சிறுகதைகள்
செ.யோகநாதன்
விண்மீன் பப்பிளிகேஷன்
முதற் பதிப்பு 2000

ஒருசொல்: எனது பதினொரு சிறுகதைகளின் தொகுதி இது. நான் அனுபவித் தவற்றை, கண்டவற்றை, உணர்ந்தவற்றை, என்னைப் பாதித்தவற்றையே என்றும் எழுத்தாக எழுதி வந்திருக்கின்றேன். பாரதி சொன்னது போல எழுத்து உண்மையாயும் எளிமையாயும் தெளிவாயும் இருக்க வேண்டுமென்பதில் நான் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளேன்.
புத்தகப் பதிப்புத்துறையில் சிகரங்களைத் தொட்டு சாதனைகளைப் புரிய வேண்டுமென்ற இலட்சியத்தோடும் இலக்கோடும் ஆரம்பிக்கப்பட்டுள்ள விண்மீன் பதிப்பகத்தின் மூலம் சிறந்த நூல்கள் வெளியாவதையிட்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
விண்மீன் பதிப்பகம், சர்வதேசத் தரத்தில், தமிழ்கூறும் நல்லுலகமெங்கும் தனது ஆக்கங்களைக் கொண்டுவரும் முயற்சியில், உறுதியும் தீர்மானமும் இணையப் பெற்று இறங்கியுள்ளதை என்போன்ற படைப்பாளிகள் மகிழ்வோடு வரவேற்கிறார்கள். இதுபோன்று தமிழ்கூறும் நல்லுல கெங்கும் உள்ள வாசகர்கள் இந்தப் படைப்புக்களிற்கு பேராதரவைத் தருவார்கள்.
செ.யோகநாதன் 2000.

விநோதினி

இதுவரை அப்படியான விநோதமான பூச்சியை அந்தப் பக்கத்திலேயே யாருமே காண வில்லை என்று சொன்னார்கள். எட்டுக் கால்கள், முதுகெல் லாம் அடர்ந்த கபில நிறம். தலையிலிருந்து கறுப்பு நிற மாக நீண்ட கூரான கொம்பு, நீலமான கண்கள். உஸ்உஸ் ஸென்று இரைச்சலை…

இராஜகுமாரி

அந்தப் பெண்ணின் குரல் எனது காதில் விழுந்ததும் திடுக்கிட்டுப் போனேன். இரண் டாவது முறையாக இப்போது அவளின் குரலைக் கேட்கின்றேன். கணீரென்ற கம்பீரமான குரல், சுற்றாடலையே சற்று அச்சுறுத்தி தன்னைக் கவனிக் கின்ற உணர்வை உண்டாக்கு கின்ற குரல். எவரையும் தன்…

நான் ஓர் தனி ஆள்

நீலவானம் ஒரே லயத்தில் பளீரென்று விரிந்து கிடந் தது. துணுக்கு மேகமொன்று அபூர்வ மாக தெளிந்த நீலத்தி னுள் பளீச்சென்று அடையாளங் காட்டிற்று; முயற்குட்டியொன்று புல்வெளி யொன்றினுள் இலக் கற்று ஓடிக் கொண்டிருப்ப தனைப் போல. பாரதிக்கு அந்த மனநிலை யிலும்…

பயம்

எல்லாமே அவனுக்கு ஆச் சரியமாக இருந்தது. விட்டு விட்டு வீசுகின்ற காற்றிலேகூட தீவிரமான அசைவு செறிந்தி ருப்பதாக உணர்ந்தான். நிமிர்ந்த போது எதிரேயுள்ள மரம் அசைவற்று நின்றது. காகம் ஒற்றையாக மிரட்சி யோடு எங்கோ பார்த்து விட்டுப் பறந்தது. தூரத்திலே தலையில்…

புகை நடுவே…

அலைகள் – மடார்மடா ரென்று சிதறி நுரைகளை உதறியபடியே கலைவதும் புரள்வதுமாக இருந்தன. வெளி றிட்ட வானத்திலே பொன்வண் ணம் மெதுவாகப் புரண்டு படியத் தொடங்கிய மாலைப்பொழுது. ஆட்கள் குறைவாகவே தெரிந் தனர். இராணுவ வண்டிகளும் சிப்பாய்களும் அடிக்கடி நெடு வீதியில்…

ஆறுமுகம்

மனப்பூர்வமான நட்பு என்பது சுயநலத்திற்கு அப்பாற் பட்ட ஒரு உன்னதமென்று, ஆறுமுகம் எனக்கு எழுதிக் கொடுத்த ஆட்டோ கிராபை நான் இன்னமும்பத்திரமாக வைத்திருக்கிறேன். ஆங்கிலத் தில் எழுதப்பட்ட வாசகம். மணி மணியான கையெழுத்து ஆறு முகத்தினுடையது. ஒவ்வொரு எழுத்தையும் சித்திரக்காரன் ஒருவனைப்…

தீவுகள்

“ரமணா என்ன யோசிச் சிட்டிருக்கே!” என்ற கோபா லின் குரலில் திடுக்கிட்டவன் போல நினைவு கலைந்து அவனைப் பார்த்தான் ரமணன். “வந்து ஒரு வாரமும் ஆகல்ல. ஒவ்வொரு நாளும் இப்படி யோசிச்சிட்டிருந்தா எப்படி? வீட்டு யோசனை தானே…” கோபாலின் கேள்விக்கு என்ன…

நிழல்

ஐராங்கனி கமலா சொன்னதைக் கேட்டதும் திடுக்கிட்டுப் போனாள். எந்த வித சலனமும் இல்லாமல் தான் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு ராசசேகர னால் எப்படி அவ்வளவு பொறு மையாக தனக்கு புத்திமதியும் சொல்ல முடிந்தது என்பதை நினைத்தபோது அவளுக்கு வினோதமாகவும் இருந்தது. மனதிலுள்ளே…

திசைகள் ஆயிரம்

குளிரூட்டப் பெற்ற அறை யில் மெல்ல – மிதக்கும் இன்னிசை. கம்ப்யூட்டர் திரை யில், ஓடுவதும் திரும்பி வருவது மாகப் பிஞ்சுக் குழந்தை ஒன்று. தன்னந்தனியாக அந்த அறை யில் இருந்தான் மனோகரன். உடல் எரிகிறாற் போலவே உணர்ந்தான். மனநிலை உடலையும்…

மூன்றாவது பக்கம்

தலையில் – அடித்துக் கொண்டே பத்திரிகையின் முக்கிய செய்தியினை இரண டாவது முறையாகவும் படித் தான் மூர்த்தி. மனதினுள்ளே எல்லையற்ற எரிச்சலும் வெறுப் பும் பெருகிற்று. அவனையறி யாத அருவருப்பும் உண்டா யிற்று. மூன்றாவது முறையும் பத்திரிகைச் செய்தியினைப் படித்தான். “எழுத்தாளர்…

பொய்முகம்

மழை இலேசாகத் தூறிக் கொண்டிருந்தது. மின் விளக்கு ஒளியில் அந்தத் துமியல் பொட்டுப் பொட்டாய் சிதறினாற் போல் கண்கள் உணர்ந்தன. வாகனப் பரபரப்பு இன்னமும் தணியவில்லை . எதிரே வரும் வாகனங்களின் ஒளித்தெளிப் பையே பார்த்துக் கொண்டு நின்றான் சாந்த குமாரன்.…


தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்கு மிக்க நன்றி.
Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2021]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.