This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.

சிறுகதைகள் (Short Stories in Tamil)

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

http://www.sirukathaigal.com/2019/09/07/

ஜெனிபரை கொன்றது விதியா… - இரா.சடகோபன்

ஜெனிபர் வாழ்வில் முன்னேற வேண்டுமென மிகக் கடுமையாக உழைக்கும் ஒரு பெண்மணி. சிறு வயது முதற் கொண்டே அம்மாவின் செல்லப் பிள்ளையான அவள் வீட்டு வேலைகளைச் செய்ய அம்மாவுக்கு விருப்பத்துடன் உதவி செய்வாள். தான் வளர்ந்து பெரியவளானதும் தனக்கென அழகிய வீடொன்று இருக்க வேண்டும் என்று விரும்பினாள். அமைதியான குடும்பம் அமைய வேண்டுமென்பதே அவளது பிரார்த்தனையாக இருந்தது. அதற்கமைய படித்த, உயர் தொழில் புரிகிற கணவனும் அமைந்தான். அவர்கள் சிறிது காலம் தாய், தந்தையருடன் வசித்த பின்

.


Read More


அனுபந்தம் - பா.அய்யாசாமி

பாரு…காபி கொண்டு வாம்மா! என்றார் ராமன். ராமன், இரு சக்கர வாகன உதிரி பாகங்கள் விற்பனை கடை ஒன்று சிறிதாக டவுனில் வைத்துள்ளார். நிலபுலங்கள் கிராமத்தில் இருந்தும் படிப்புக்காக புறநகர் வந்து வீடு கட்டி குடியேறிய நடுத்தர குடும்பம். இதோ அப்பா, அம்மா கலந்துண்டுருக்கா! அடுப்படியிலேர்ந்து பதிலோடு வந்தாள் பாரு என்கிற பார்வதி, கல்லூரி படிப்பு முடித்து, திருமணம் வரை மட்டுமே தனியார் கம்பெனியில் வேலை பார்க்க இருக்கும் ,ராமன் குடும்பத்தின் ஒரே செல்ல மகள், பார்வதி.

.


Read More


ஆமிக்காரி - தீபச்செல்வன்

பரந்தன் முல்லை வீதியில் ஊர்ந்தது அந்தப் பேருந்து. இருபுறமும் சிறகுகளைப்போல் பச்சைப் பசேரென்ற வயல். பாடசாலை செல்லும் மாணவர்களும் விசுவமடு இராணுவப் பண்ணைக்குச் செல்லும் தமிழ் இராணுவச் சிப்பாய்களுமாய் நிறைந்திருந்தது அப்பேருந்து. சத்தியாவுக்குப் பக்கத்திலிருந்த வயதான ஒரு முதியவர், திடீரென எழுந்து சற்றுத் தள்ளி அமர்ந்து, அவளையொரு வேற்றுக் கிரகவாசியைப்போலப் பார்த்தார். அத்தகைய பார்வைகள் வழமை என்றபோதும் அவளுக்கு இன்னுமொருமுறை உடல் கூசியது. மேலும் சில கண்கள் அவளுடைய சீருடையைத் திரும்பத் திரும்பப் பார்த்துக்கொண்டிருந்தன. தன்னால் மறக்க

.


Read More


சாம்பலும், புழுதியும் - சுப்ரபாரதிமணியன்

அந்தக்காவல்துறையின் வாகனம் வேகமெடுத்து புழுதியைக் கிளப்பிச் சென்றது. தன் பக்கமிருந்த கோப்பை திரும்பத்திரும்ப புரட்டிக் கொண்டிருந்தார் அந்த அதிகாரி. அந்தக் கோப்பில் ஒரு இளம் பெண்ணின் நாலைந்து படங்களும் சாதகக் குறிப்புகளும் இருந்தன. “ இங்க வரணும்ன்னு சொல்லிட்டே இருந்தீங்க.. “ “ வாய்ப்பே அமையலே பாரு. இன்னிக்கு இதுக்குன்னு வரவேண்டியதாப் போச்சு “ அப்புகைப்படங்கள் காவல்துறை அதிகாரியின் மகளின் படங்கள். அவளுக்கு வயது ஏறிக்கொண்டிருந்தது.சரியான வரன் அமையவில்லை. தேடிக்கொண்டிருந்தவருக்கு சாதகத்தை மீறி பரிகாரம், தோசம் கழிப்பு

.


Read More


பயிற்சி தந்த நன்மை - ஸ்ரீ.தாமோதரன்

சென்னை மாநகரத்தில் ஒரு பிரபலமான பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு படித்து கொண்டிருக்கிறார்கள் ரம்யாவும், செல்வியும். இருவரும் அந்த பள்ளிக்கு பள்ளி மாணவர்களை மட்டும் ஏற்றி செல்லும் ஒரு வாடகை காரில் தினமும் வந்து செல்வார்கள்.. இருவரின் பெற்றோர்கள் கொஞ்சம் தள்ளி இருக்கிற அடுத்தடுத்த அபார்ட்மெண்டில் வசித்து வருகிறார்கள். ரம்யாவின் தாயாரும், செல்வியின் தாயாரும், தோழிகள். இருவரும் சேர்ந்தே மதியம் பள்ளிக்கு வந்து குழந்தைகளுக்கு மதிய உணவு கொடுத்து விட்டு வீட்டுக்கு திரும்புவர். மாலை 4.30 மணிக்கு

.


Read More


தேனீயார்! - யுவகிருஷ்ணா

பஸ் ஸ்டேண்ட் பக்கம் வந்து பல ஆண்டுகளாகிறது. வண்டி தற்காலிகமாக மண்டையைப் போட்டதால் இன்று ஆபிஸுக்கு பஸ் சர்வீஸ்தான். மூச்சிரைக்க எட்டரை மணிக்கு நடந்து வந்து சேர்ந்தேன். செப்டம்பர் மாதம் கூட காலையிலேயே வெயில் மண்டையைக் கொளுத்துகிறது. குளோபல் வார்மிங். ஸ்டேண்டில் நின்றிருந்த பஸ் ஒன்று காலியாக இருந்தது. ஆட்சி அருமையாக நடக்கிறது. இப்போதெல்லாம் எத்தனை சொகுசு பஸ்? வசதியாக ஜன்னலோர சீட் ஒன்றில் அமர்ந்ததும் கையோடு வைத்திருந்த குமுதம் ரிப்போர்ட்டரை பிரித்தேன். மெதுவாக ஜன்னல் பக்கம்

.


Read More


N14, 4/1, சொய்சாபுர பிளட்ஸ், மொரட்டுவ - ஜே.கே

படார் படார் படார் என்று வாசல் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. கைநிறைய சோப் நுரை. நன்றாக அலம்பி, துவாயால் துடைத்துவிட்டு, கக்கூஸ் பவுலில் அவசர அவசரமாக ஒண்டுக்கடித்துவிட்டு வாயிலை நோக்கி போகும்போது மீண்டும் படார் படார். இம்முறை அவசரம் தெரிந்தது. “யாராக இருக்கும்?” என்று நினைத்துக்கொண்டே கதவு ஓட்டைக்குள்ளால் பார்த்தால், வெளியே நான்கைந்து பொலிஸ்காரர்கள். செல்வவடிவேலுக்கு குப்பென்று வியர்த்துவிட்டது. விடிய வெள்ளன ஏன் வந்திருக்கிறாங்கள்? சும்மா செக்அப் ஆக இருக்குமோ? வீட்டில வேறு இந்நேரம் யாருமே

.


Read More


பாலூத்தியாச்சு…! - காரை ஆடலரசன்

நான் முதன்முதலாக எந்த பெரு நகரங்களுக்குச் சென்றாலும் அந்த ஊர் பேருந்து நிலையத்தை நன்றாக சுற்றிப் பார்ப்பது வழக்கம். அதில் நிறைய பிரயோஜனங்கள். நகர பேருந்து நிற்குமிடத்திற்குச் சென்றால்….. பேருந்துகளில் இருக்கும் பெயர் பலகைகளைப் பார்த்து சுற்றுப்பட்ட ஊர்களைத் தெரிந்து கொள்ளலாம். அங்கு கூடி இருக்கும் மக்களை பார்த்து அவர்கள், பேச்சு, நடைமுறை பழக்க வழக்கங்களை ஓரளவிற்குத் தெரிந்து கொள்ளலாம். தொலைதூர பேருந்து நிற்பிடங்களுக்கு வந்தால்… இங்கிருந்து என்னென்ன நகரங்களுக்குத் தொடர்பு என்பதையும் தெரிந்து கொள்ளலாம். இது

.


Read More


விடாது கருப்பு - ஜெயசீலன்

ஆழ்ந்த உறக்கம். குளிர்காலத்தில் காற்றாடியை 12ஆம் நம்பரில் வைத்து, போர்வைக்குள் கதகதப்பாக சுகமாக தூங்குவது வழக்கம். அப்படி ஒருசுகமான உறக்கத்தில், தீடிரென கதவை தட்டும் சத்தம். யாராக இருக்கும் இந்த நடுநிசியில்? போதாக்குறையாக யாராவது சீக்கிரமா கதவதொறங்களேன் என்று ஒரு பரிட்சையம் இல்லாத ஆண்குரல். ஓட்டின் மேலே மழைநீர் வடிவதற்காக போடப்பட்ட தகரத்தில் உறங்கி கொண்டிருந்த தாய்பூனையும் அழுவது போன்ற குரல் கொடுக்க, திகில் பற்றி கொண்டது மனதில். இதயதுடிப்பைக்கேட்க முடிந்தது. சரி எழுந்து கொள்வோம் என்று

.


Read More


மூத்தவளின் நகைகள் - எஸ்.கண்ணன்

(இதற்கு முந்தைய ‘மூச்சுத் திணறல்கள்’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது) சபரிநாதனை கல்யாணம் செய்துகொள்ள ராஜலக்ஷ்மி சம்மதம் சொல்வாள் என பெரியசாமி எதிர்பார்க்காவிட்டாலும் கூட, மனசுக்குள் அவள் ஒரு பணக்காரனுக்காக காத்துக் கொண்டிருக்கிறாள் என்ற நினைப்பில் அவள் மேல் அவனுக்கு காழ்ப்புணர்ச்சி இருந்தது. அதேபோல அழகான பெண்களைக் கல்யாணம் செய்து கொள்வதற்காகவே பிறந்து வளர்ந்ததுபோல் விறைப்பாக இருக்கிற பணக்காரன்கள் மீதும் பெரியசாமிக்கு துவேஷம் உண்டு. அப்படிப் பட்டவனுக்கு இந்தக் கல்யாண நிச்சயம் எப்படி இருந்திருக்கும்?

.


Read More

நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.

Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2019]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.

To change your subscription, click here.