This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.

சிறுகதைகள் (Short Stories in Tamil)

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

http://www.sirukathaigal.com/2019/09/04/

பெண்ணரசி அனுலாதேவி - இரா.சடகோபன்

தனக்குத் தனிமை தேவைப்பட்ட போதெல்லாம் மகாராணி அனுலாதேவி ராஜ மாளிகையின் ஒதுக்குப்புறமாக அமைந்திருந்த அந்த மத்ஸ தடாகத்தைத் தேடித்தான் வருவாள். அங்கு மட்டும்தான் தனக்கு அமைதி கிடைக்கும் என்று அவள் நம்பினாள். தனது மனக்குமுறல்களையெல்லாம் அங்கிருந்த மீன்களிடம் தான் கொட்டித் தீர்ப்பாள். அந்த மீன்களும் அவள் கூறுவதை ஆடல் அசைவு இன்றி கேட்டுக் கொள்ளும். அந்த விசாலமான மாட மாளிகையில் நூற்றுக்கணக்கானோர் இருந்தபோதும் அவளது சோகத்தைச் சொல்ல, அதனைக் கேட்டு ஆறுதலளிக்கக்கூடிய தன் மனதுக்கிதமானவர்கள் யாருமே இல்லை.

.


Read More


அவள் - யோகராணி கணேசன்

என் பள்ளித்தோழி, பார்ப்பதற்கு சுமாராக இருப்பாள். உருண்டையான தன் கண்களை உருட்டியும் முத்துப்பற்களால் புன்னகையை எப்போதும் உதிர்த்தும் என்னை மயக்கியவள் அவள். என் ஊருக்கு அயல் ஊரில்தான் அவள் குடியிருந்தாள். 1994 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தர வகுப்பில் காலடி எடுத்து வைத்தபோது அயலூரிலிருந்து என் பள்ளியில் புதிதாக வந்து இணைந்து கொண்டவள்தான் அவள். என்னை விட சற்று நிறம் குறைவாகவும் ஒரிரு இஞ்சி உயரம் குறைவாகவும் இருந்தாள். அவளை பார்த்த உடனேயே எனக்குப்

.


Read More


சேற்றில் மலர்ந்த செந்தாமரை - ஜெ.சங்கரன்

அத்தியாயம்-25 | அத்தியாயம்-26 ‘சிஸ்டர்’ அல்ப்ப்ன்சா ‘சிஸ்டர் நிர்மலாவைப் பார்த்து நான் ஏற்பாடு பண்ணீ இருக்கும் விஷயத்தை சொன்னாள்.’சிஸ்டர் நிர்மலா சந்தோஷப் பட்டுக் கொண்டே”ரொம்ப ‘தாங்க்ஸ்’ ‘சிஸ்டர் அல்போன்சா” என்று சொன்னாள். செந்தாமரை தான் எடுத்த இந்த முடிவைப் பற்றி யோஜனைப் பண்ணிக் கொண்டு இருந்தாள். சற்று நேரம் கழித்து செந்தாமரை தன் ரூமை விட்டு வெளியே வந்து அந்த முதியோர் இல்ல த்தை சுற்றிப் பார்த்தாள்.அவர்கள் நடத்தி வரும் பள்ளிகூடத்தையும், முதியோர்கள் தங்கி வந்த ரூம்

.


Read More


உண்மை நண்பன் - ருக்மணி சேஷசாயி (அறிமுகம்)

ஓர் ஊரில் இரண்டு நண்பர்கள் வாழ்ந்து வந்தனர்.இருவரும் எப்போதும் இணைபிரியாமல் இருந்தனர்.ஒருவன் பாலு. மற்றொருவன் சோமு.இருவரில் சோமு பாலுமீது உண்மையான அன்பு கொண்டிருந்தான்.எப்போதும் பொறுமையாகவும், பணிவுடனும் இருப்பான்.ஆனால் பாலு தன நட்புதான் உயர்ந்தது. தனக்குதான் நட்பைப் பற்றி அதிகமாகத் தெரியும் என்று பெருமையாகப் பேசிக் கொண்டிருப்பான். ஒரு முறை இருவரும் பக்கத்து ஊருக்கு ஒரு விழாவுக்குப் போகவேண்டி இருந்தது.அதிகாலையிலேயே இருவரும் புறப்பட்டனர்.ஊருக்கு வெளியே ஒரு அடர்ந்த காடு இருந்தது இருவரும் அந்தக் காட்டின் நடுவே இருந்த ஒத்தையடிப்

.


Read More


பகைவர்கள் செய்த உதவி - ஸ்ரீ.தாமோதரன்

மலையடிவாரத்தில் இருந்த அந்த ஊரின் ஒதுக்குப்புறமாய் அழகான ஒரு குளம் இருந்தது. அந்த குளத்தில் எண்ணற்ற மீன்களும், தவளைகளும், மற்றும் பல வகையான பூச்சி இனங்களும் வாழ்ந்து வந்தன. அந்த ஊர் மலை அடிவாரத்தில் இருந்ததால் குளமானது மலை அடிவாரத்தை ஒட்டியே இருந்தது. அதனால் மழை காலங்களில் மலையிலிருந்து பெரும் நீர் இந்த குளத்திற்குள் பாய்ந்து குளத்தை நிரப்பி விடும். அது மட்டுமல்ல, வெயில் காலங்களில் கூட அந்த மலையில் இருக்கும் “ஊற்றிலிருந்து” கொஞம் கொஞ்சமாய் தண்ணீர்

.


Read More


ஒன்பது – ஒன்பது – ஒன்பது - யுவகிருஷ்ணா

“என்னடா முனீஸு அருவாளும், ஆடுமா எங்கே ஊர்வலம்?” “போட்டுத் தள்ளிட்டு பிரியாணி செஞ்சி தின்ன வேண்டியதுதான்!” “அடப்பாவி. புள்ளை மாதிரி வளர்த்த ஆட்டை ஏண்டா போட்டுத்தள்ளுறே?” “ஒனக்கு விஷயமே தெரியாதா சேகரு? இன்னைக்கு தேதி 09.09.09. நைட்டு சரியா 09.09 மணிக்கு ஒலகம் அழிஞ்சிப்பூடுமாம். நம்மோட சேர்ந்து அழியப்போற ஆடுதானே? சாவறதுக்கு முன்னாடியாவது சந்தோஷமா சாப்புட்டுப்புட்டு சாவலாம் இல்லையா?” வேதனையோடு சொன்னான் முனீஸ்வரன். தனசேகருக்கு பக்கென்றிருந்தது. வாழ்க்கையில் இன்னமும் எதையுமே அனுபவிக்கவில்லையே? அதற்குள் உலகம் அழியப்போகிறதா? முணுக்கென்று

.


Read More


போயின… போயின… துன்பங்கள்! - ஜே.கே

“நினை பொன் எனக்கொண்ட பொழுதிலே” சுசீலா பாடும்போது தன்னை அறியாமலேயே குமரன் தலையை சன்னமாக ஆட்டியபடி புன்னகைத்தான். இயர்போனை மீண்டும் சரியாக காதில் அழுத்திவிட்டு, iTunes இல் சவுண்டை கொஞ்சம் கூட்டிவிட்டான். “எந்தன் வாயினிலே அமுதூறுதே, கண்ணம்மா என்ற பேர் சொல்லும் போழ்திலே” எனும்போது டிஷூ பொக்ஸில் இருந்து ஒரு டிஷுவை எடுத்து வாய் துடைத்தான். “கண்ணம்மா கண்ணம்மா” என்று ஸ்ரீனிவாசுடன் சேர்ந்து முணுமுணுத்தபடியே service.doBnExtract(req); லைனை செலக்ட் பண்ணி Alt + Ins கீயை அழுத்தி

.


Read More


‘பலான’வர்…! - காரை ஆடலரசன்

மகன் வெளியூர் சென்றுவிட்ட துணிச்சல். தர்மலிங்கம் தைரியமாக வீட்டினுள் நுழைந்தார். நாற்காலியில் சவுகரியமாக அமர்ந்தார். உள்ளே திரும்பி… ” மருமவளே. .! ” அழைத்தார். ” இதோ வந்துட்டேன் மாமா. ..” சுந்தரி… மாமனார் குரல் கேட்டு பவ்வியமாக அவர் எதிரில் நின்றாள். ” என்னம்மா பண்ணிக்கிட்டிருக்கே. .? ” பாசமாய்க் கேட்டார். ” அறையில் அவரோட துணிமணியெல்லாம் ஒழுங்குபடுத்திக்கிட்டு இருக்கேன் மாமா. ” சொன்னாள். தர்மலிங்கம் 50 வயதென்றாலும் 40 வயது தோற்றம். பாவம். .

.


Read More


வரம் - கிரிஜா ஜின்னா (அறிமுகம்)

ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நம…… ஒரே சீராகக் கோவிலிலிருந்து குரல் வந்தது. சீதா மெல்லக் கண் விழித்தாள். நிமிர்ந்து, இருந்த ஒரே ஜன்னல் வழியாக வெளியே பார்த்தாள். ஒரே இருட்டு தான். மணியைப் பார்க்கத் தேவையே இல்லை. கோவிலிலிருந்து குரல் வந்து விட்டதென்றால் மணி சரியாக ஐந்து, தனுர் மாசம் என்பதால் இவ்வளவு அதிகாலையிலேயே கோவில் நடையைத் திறந்து விடுவார்கள். குளிருக்கு கைகளையும் கால்களையும் ஒடுக்கிக் கொண்டு படுத்திருந்ததில், உடம்பெல்லாம் வலி, தலயணை இல்லாமல் படுத்ததில் மண்டை

.


Read More


மூச்சுத் திணறல்கள் - எஸ்.கண்ணன்

(இதற்கு முந்தைய ‘புது மாப்பிள்ளை’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) கல்லிடைக்குறிச்சியில், ராஜலக்ஷ்மி அவளுடைய பக்கத்துவீடு எஸ்தர் டீச்சர் வீட்டில் எதோவொரு புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தாள். மகளுக்கு இரட்டை ஜடை பின்னி ரிப்பன்களால் தூக்கிக் கட்டிய எஸ்தர், “அகிலா அக்கா வீட்ல போய் வெளையாடிட்டு வா… எனக்கு தலைக்குமேல வேலை இருக்கு. மீனு கழுவி அறுக்கணும்” என்று மகளை விரட்டினாள். “என்ன மீனுக்கா?” “சாளை வாங்கலாம்னு பார்த்தேன். ஆனா நெத்திலிதான் கெடைச்சுது. சரின்னு வாங்கிட்டேன்.

.

Read More

நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.

Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2019]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.

To change your subscription, click here.