மேலே… மேலே…
கதையாசிரியர்: ஆர்.எஸ்.ஜேக்கப்
கதைத்தொகுப்பு:
ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 227
(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஒரு பேருந்து இறக்கத்தில் போகும்போது பெட்ரோல் இல்லாமல் தானாகவே ஓடும். சமதரையிலும் பெட்ரோல் இல்லாமலே தள்ளினால் ஓடும். ஆனால் செங்குத்தான மேட்டின் மேல் ஏறுவதற்கு பெட்ரோல் கட்டாயம் வேண்டும்.
பக்தியும் இப்படித்தான். மேலே செல்ல ‘ஸ்பிரிட் வேண்டும். அதாவது தூய ஆவியின் துணைவேண்டும்.
மேலே நோக்கிப்பார்.
சில பறவைகள் பறக்கும் முன் தன் தலையைச் சாய்த்து அலகைப் பூமியில் தேய்த்துக் கொத்திப்பின்பு தான் பறக்கின்றன. அப்படியே கடவுளுடைய பிள்ளை களும் மேலே மேலே பறக்கும் முன் தாழ்மையைக் கற்றுக்கொள்ள வேண்டும்,
மேன்மைக்கு முன்னானது தாழ்மை.
“இகழ்வோரை அவர் இகழ்கிறார்; தாழ்மையுள்ளவர் களுக்கோ கிருபையளிக்கிறார்”. (நீதி.3:34)
“பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்”. [கொலோ.3:2]
– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.
![]() |
பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க... |
