பாடுவோம் பரவசமடைவோம்
கதையாசிரியர்: அல்போன்ஸ் மோசஸ்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: December 6, 2025
பார்வையிட்டோர்: 209

அருட்பணியாளர் ஒருவர் பணிமாற்றலாகி அந்தப் பங்கில் பங்கு தந்தையாகப் பொறுப்பேற்றார். மாற்றலாகி வந்த ஒரு மாதத்திலேயே அந்த பங்கு பல மாறுதலை எதிர்ப்பார்க்கிறது என்பதை உணர்ந்து கொண்டார்.
காலைத் திருப்பலி ஏதோ வயதானவர்களுக்கு மட்டும் என்பது போலக் காணப்பட்டது. திருமணத் திருப்பலியின்போது மணமக்கள் பல்வேறு காரணங்களைச் சொல்லி தாமதமாக வருவதே வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
குறிப்பிட்ட ஒரு சிலரே திருப்பலி வாசகங்களை வாசிப்பதையும் பார்க்க முடிந்தது. பாடற்குழுவில் இசைக்கருவி வாசிப்பவர் அந்த இடத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு குழந்தைப் பருவத்திலிருந்து முதிய வயது வரை யாருக்கும் வாய்ப்பளிக்காமல் இருப்பதும் பாடகர்கள் சொல்லிக் கொள்ளும் அளவு பாடுவதில் திறமை இல்லாமல் இருப்பதையும் பார்க்க நேர்ந்தது. எனவே ஒவ்வொன்றையும் நிதானமாகச் சரி செய்ய ஆரம்பித்தார்.
ஞாயிறு திருப்பலியில், பாடகர் குழுவைச் சரி செய்ய வேண்டியுள்ளது. எனவே பங்கைச் சேர்ந்த அனைவருக்கும் பாட்டுப் போட்டி நடத்தி சிறந்த பாடகர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் அதோடுகூட அவர்கள் ஆலய பாடற்குழுவில் இணைக்கப்பட்டு இறைவனைப் புகழ வாய்ப்பு வழங்கப்படும் என்று ஒரு தேதியினைக் குறிப்பிட்டு அறிவிப்பு வெளியிட்டார்.
அந்த நாளில் பலபேர் பாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாகப் பாடி பரிசுகளை வென்று பாடற்குழுவில் இணைக்கப்பட்டனர். பிறகு அவர்களுக்கு ஒரு கூட்டம் நடைபெற்றது. அதில் எந்த புனிதர்கள் பாடகர்களின் பாதுகாவலியாகத் திருஅவையால் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்ற கேள்வியைக் கேட்டார். அதற்கான சரியான பதில் யாரிடமிருந்தும் வரவில்லை.சரி நான் உங்களுக்கு தெரிவிக்கிறேன் என்று கூற ஆரம்பித்தார்.
உரோமையில் வேதகலாபனை அதிகமாக இருந்த நேரமது. பணக்காரக் குடும்பத்தில் பிறந்து இளம் வயதிலேயே தனது கன்னிமையை இறைவனுக்கு அர்ப்பணித்து விட்டு குடும்பத்தினர் திருமணம் செய்ய வற்புறுத்தியபோது மணமுடித்து தனது கணவனையும் மனம் மாற்றி மறைந்து வாழ்ந்து கொண்டிருந்தபோதும் தனது சகோதரனையும் கணவனையும் உரோமை அதிகாரி கொலை செய்தபோதும் தளராத நெஞ்சத்தோடு செசிலியாள் இறைவனை தொடர்ந்து வழிபட்டு இறைபுகழ் பாடி வந்தாள்.
அவ்ரேலியு மன்னன் காலத்தில் செசிலியாவை மூன்று முறை கழுத்தில் வெட்டினர். ஆனாலும் அந்தக் காயங்களோடு மூன்று நாட்கள் உயிருடன் இருந்து இறை புகழ் பாடி வந்தார். இறக்குமுன் அவர் வசித்து வந்த வீட்டை ஆலயமாக மாற்றும்படிக் கூறி விட்டு மரித்து அடக்கம் செய்யப்பட்டார். அவரது விருப்பத்திற்கிணங்க அவர் பெயரால் ஆலயங்கள் எழுப்பப்பட்டன. அவரது உடல் புதையுண்ட இடத்திலிருந்து இந்த ஆலயத்திற்கு மாற்றப்பட்டது. இன்னும் அந்த உடல் அழியாமல் இருக்கிறது என்று கூறினார்.
மேலும் 1585ல் திருத்தந்தை 5ம் சிக்ஸ்துஸ் புனித செசிலியம்மாவையும் பெரிய கிரகோரியாரையும் பாடகர்களுக்குப் பாதுகாவலரான புனிதராக அறிவித்தார். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 22ம்தேதி புனித செசிலியம்மா விழாவைத் திருச்சபைக் கொண்டாடுகின்றது.
அந்த புனிதர் பாதுகாவலில் உள்ள இறைஇசைக்குழுவில் நீங்கள் இணைந்திருப்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கின்றது. ஒரு முறைப் பாடுவது இருமுறை ஜெபிப்பதற்குச் சமம் என்று சொல்லப்படுகிறது. எனவே பாடல்கள் பாடுங்கள். இறைவனைப் புகழுங்கள் என்று வாழ்த்தினார்.
அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த பாடற்குழுவினர் தந்தையே நாங்கள் எல்லோரும் சேர்ந்து அவரைப்போல தொடர்ந்து இறைபுகழ் பாடி இறைவனை மகிமைப்படுத்துவோம். புனித செசிலியம்மாவின் படத்தினைப் பிரேம் செய்து பாடற்குழு இடத்தில் மாட்டி வைத்து மக்களுக்கெல்லாம் அவரின் வரலாற்றை எடுத்துச் சொல்லப் போகிறோம் என்று கூறினர்.
தந்தைக்கு மகிழ்ச்சி தாள முடியவில்லை. இந்த ஆண்டு செசிலியம்மா விழாவின்போது உங்கள் அனைவருக்கும் சீருடை வழங்கப் போகிறேன். மேலும் ஒரு நாள் இன்பச் சுற்றுலாவும் ஏற்பாடு செய்கிறேன். தொடர்ந்து பாடுங்கள். இறைவனோடு பரவசமடையுங்கள் என்று வாழ்த்தினார்.
பாடும்போது இசையோடு லயித்துப் பாடுவது எவ்வளவு ஆனந்தம் என்பதை நாம் உணர்ந்துப் பாட வேண்டும். பாடற்குழுவினர் பாடும்போது அவர்களோடு சேர்ந்து எல்லோரும் பாடப் பழகிக் கொள்வோம். நமது கைபேசியிலேயே டீiடிடந in வுயஅடைஇ மணவை, அருள்வாக்கு போன்ற பல பாடல் தளங்கள் உலா வருகின்றன. அவைகளைப் பயன்படுத்தி பாடல்களைக் கேட்டுபப் பாடிப் பயனடைவோம்.
| நான் ராணிப்பேட்டையைச் சேர்ந்த அல்போன்ஸ் மோசஸ். பல்வேறு உற்பத்தி பிரிவுகளில் மனிதவளத் துறையில் மேலாளராகப் பணியாற்றினேன். கடந்த 3 ஆண்டுகளாக வாரந்தோறும் சிறுகதைகள் எழுதி, புதுச்சேரியிலிருந்து வரும் வார இதழில் வெளியிட்டு வருகிறேன். முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ் மற்றும் சென்னை மற்றும் மைலாப்பூர் பேராயரிடமிருந்து எழுத்தாளர் விருதைப் பெற்றுள்ளேன். ஆரோவில் ஐடிஐயில் துணை முதல்வராகவும் பணியாற்றியுள்ளேன். தேரி உயர்நிலைப் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…மேலும் படிக்க... |