பரலோகத்தில்
கதையாசிரியர்: ஆர்.எஸ்.ஜேக்கப்
கதைத்தொகுப்பு:
ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 210
(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
‘உமது சித்தம் பரலோகத்தில் செய்யப்படுகிறது போல’ என்று தினமும் பிரார்த்திக்கிறோமே, அதன் பொருள் என்ன? ஆண்டவருடைய சித்தம் பரத்தில் எவ்வாறு யாரால் நிறைவேற்றப்படுகிறது?
“சேராபீன்கள் ஆண்டவருக்கு மேலாக நின்றார். கள். அவர்களில் ஒவ்வொருவனுக்கும் ஆறு ஆறு செட்டைகளிருந்தன. அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி, சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்; பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டுச் சொன்னார்கள்” என்று இறைவாக்காளர் ஏசாயா கூறுவதை கூறுவதை அறிவோம்.
ஞாயிறு பள்ளி ஆசிரியை தம் மாணவியிடம் ‘பரலோகத்தில் தேவதூதர்கள் தேவசித்தத்தை எவ் வாறு நிறைவேற்றுகிறார்கள் ?’ என்று கேட்டதற்கு அச்சிறுமி உடனே சொன்னாள்: “தேவ தூதர்கள் எதிர்க் கேள்வி எதுவும் கேளாமல் தேவசித்தத்தை அப்படியே நிறைவேற்றுகிறார்கள்”.
பூவுலகில் தேவசித்தம் நிறைவேறாததற்குக்காரணம் அவர் சொன்னவுடனேயே எதிர்கேள்வி கேட்க ஆரம்பித்து விடுகிறோம்.
நமது அநேக ஆசீர்வாதக் குறைவுகளுக்குக் காரணம் கீழ்ப்படியாமையே!
“அவர்கள், கர்த்தர் சொன்னபடியெல்லாம் செய்து, கீழ்ப்படிந்து நடப்போம் என்றார்கள்”. [யாத். 24:7]
“உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படு கிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக”. [லூக் 11:2]
– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.
![]() |
பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க... |
