நம் பக்தி
கதையாசிரியர்: ஆர்.எஸ்.ஜேக்கப்
கதைத்தொகுப்பு:
ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 204
(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
குரங்கு பக்தி, பூனை பக்தி, நாய் பக்தி என்று பக்தி பலவகைப்படும்.
குரங்கு தன்குட்டிகளைத் தூக்குதிறதில்லை. குட்டி தான், தன் தாயின் அடிவயிற்றில் தன் கால்களைக் கொண்டு பிடித்துக் கொள்கிறது. கிளைக்குக்கிளை தாவும்பொழுது பிடிநழுவி குட்டி கீழே விழுந்து விட்டால் தாய்க்குரங்கு குட்டியைச் சேர்க்கவே சேர்க்காது. விரட்டியடித்து விடும்.
நாம் கடவுளைப் பிடித்துக் கொண்டால் மட்டும் போதாது. நம் பிடி பல வழிகளில் நழுவலாம்.
பூனை எவ்வாறு தன் குட்டிகளைத் தூக்கிச் செல் கிறது? வாயில் கௌவிக் கொண்டு செல்லும்: பூனைக்கு ஆபத்து வந்தாலொழியக் குட்டிக்கு சேதம் வராது. அவ்வாறே இயேசுகிறிஸ்து நம்மைப் பிடித்துக் கொள் வாரானால் நமக்கு ஆபத்து ஏதுமில்லை.
கிறிஸ்து நம்மைப் பிடித்துக் கொள்ளும்படி நம் கிரியை அமைந்துள்ளதா?
நாய் பக்தி என்றால் என்ன? புதிதாக ஒரு வீட்டிற் குக் குடிபோகிறோம். நாம் நாயையும் பூனையையும் கூடவே கூட்டிச் செல்கிறோம். நாய் புது வீட்டில் தங்கி விடும். பூனையோ பழைய வீட்டைத்தேடி ஓடி விடும். புதிய வீட்டில் தங்காது,
நாய் ஆளைப்பொறுத்தது, பூனை இடத்தைப் பொறுத்தது. தலைவன் தலைவி மீது பற்றுக்கொள்ளும் நன்றி மறவாத நாயைப்போல நாமும் கடவுளின் பேரில் பற்றுக் கொள்ளவேண்டும்.
கிறிஸ்து பெருமானை விட்டு விட்டு சபையாகிய இடத்தை மட்டும் பிடித்துத் தொங்கி கொண்டிருப்பதில் யாது பயன்?
“தன் தலைவனைக்காத்துப் பேணுகிறவனுக்கு மேன்மை கிடைக்கும்”. [நீதி. 27:18.]
“தலைவன் வரும்போது விழிப்பாயிருக்கிறவர்களாக அவன் காண்கிற ஊழியர்களே நற்பேறு பெற்றவர்கள்.[லூக். 12:37]
– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.
![]() |
பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க... |
