கதையாசிரியர் தொகுப்பு: வினையன்

7 கதைகள் கிடைத்துள்ளன.

சின்னம்மா

 

 காட்சி 1: ——– சார்…பஸ் எத்தன மணிக்கு எடுப்பீங்க 10:20 எத்தன மணிக்கு ஜெயங்கொண்டத்துல இருப்போம் 5 மணிக்கு இடையில ஆண்டிமடம் நிறுத்துவீங்களா… ஏறு…ஏறு…. என்னய்யா போவுலாமான்னு சூப்பர் பாக்கை பிரித்து வாயில் கொட்டினார் ஓட்டுநர். காட்சி 2: ——– எங்கம்மா இந்த நேரத்துல போற எங்கயாவது போறன் ஒங்களுக்கு என்ன?எந்த சொந்தமுமா எனக்கு இல்ல ஒரு நாளைக்கி ஒரு வூட்ல கஞ்சி குடிச்சாலும் ஆயிசு முடிஞ்சிடும். ஒங்கிட்டலாம் பேச முடியாது…எங்கயாவது போய் தொல நரம்பு பையொன்றில்


உருவாஞ் சுருக்கு

 

 பெரியவனுக்கு சேதி சொல்லியாச்சா…வெடி வாங்க யாரு போயிருக்கா… எலேய்…கொண்டையா அழுவுறத வுட்டுபுட்டு ஆற சோலிய பாரு… மனச கல்லாக்கிக்கிட்டு பர பரப்பா அலஞ்சாரு மணிவாசகம் மாமா… அலோ….யாரு சேராமனா(ஜெயராமன்)….அப்பா…… அடுத்த பஸ்சில் ஏறியாச்சு… முதலாமாண்டு கல்லூரி படிப்பிலிருந்து பெறகு பட்டணத்து வேல பெறகு வெளிநாடு மறுவடியும் பட்ணமுன்னு அப்பா கூட இருந்தது கொறச்ச காலந்தான்… நரசிங்கபாளையம் எங்கூரு… டீ தண்ணி குடிக்கனும்னாலும் சீக்கு நோவு வந்தாலும் டவுனுக்குதான் வரனும்…இப்போதேன் காரு,வண்டி அப்போலான் மாட்டுவண்டி இல்லாட்டி. சைக்கிளு எறாங்குடி


வி(ல)ளக்கு

 

 பேரமைதியை விழுங்கிய இரவு வீதி….மத்திய தமிழகத்தின் மாநகர் ஒன்றின் வளரும் நகரமது. அரசாங்க தொகுப்பு வீடுகளுக்கிடையில் குடிசை வீடுகளும்,ஓட்டு வீடுகளும் நிறைந்த சூசையப்பர் தெருவில் அரவங்கள் ஏதுமில்லை. பணி முடித்து வந்த கணவருக்கு அவசர அவசரமாக குழம்பு தாளிக்கிறாளொருத்தி… மாதா கோயில் மணி எட்டு முறை அடித்து… ‘பிள்ளைகளே,வந்து எனக்குச் செவி கொடுங்கள் கர்த்தருக்குப் பயப்படுதலை உங்களுக்கு போதிப்பேன். (சங்கீதம் 34:11)என்ற வசனத்தோடு கரண்ட் போனது. லாந்தரின் வெளிச்சத்தில் தெரிவது இம்மானுவேலின் முகம்.மென்மையானவர்,இரக்கமுள்ளவர். ப்ரின்ஸி…ப்ரின்ஸியென லாந்தரோடு வெளியில்


இருபத்தியோராம் நூற்றாண்டின் அழகி.!

 

 தஞ்சாவூர் ஜங்ஷனிலிருந்து மஞ்சத்திடல் செல்ல வேண்டும். அடிக்கடி செல்வது வழக்கம் வேலையொன்றுமில்லை பெரியப்பா வீடு அங்கு. எக்ஸ்பிரஸ் நிக்காது. பெரும்பாலும் நான் பேசஞ்சரில் செல்வதே வழக்கம். நடைபாதை வியாபாரிகளுக்கு டிக்கட்டே தேவையில்லை அடுத்தடுத்த ஸ்டாப்பில் ஏறி இறங்கி வியாபாரம் செய்வார்கள். கீரை விற்கும் ஆயா ஏறி இறங்கும்போதெல்லாம் டல்ஹௌசிக்கு நன்றியை சொல்வேன். படியிலமர்ந்து,படியில் நின்று,படியில் தொங்கி வரும் எவரையும் நான் கண்டு கொள்வதில்லை. இன்று விபத்தென்றால் அன்றாடம் பயணிக்கும் எல்லோர்க்கும் தெரிந்திருக்கும். இருந்தும் மறுநாள் தொங்கும் அறிவற்றவர்களை


காரை வீட்டு கவிஞர் எழிலனுக்கு……

 

 அன்புள்ள அப்பாவிற்கு, உங்களை மாமா என்று இதுகாரும் அழைத்ததில்லை. என் அம்மாவின் தம்பி என்று ஊரார் சொல்லித்தான் தெரியும்.எனக்கு நினைவு தெரிவதற்கு முன்பே இருவரும் இறந்துவிட்டபடியால் நீங்கள்தான் எனக்கு எல்லாமும். முதல் முறையாய் உங்களுக்கு கடிதம் எழுதுகிறேன். நான் எழுதும் முதல் கடிதம் கூட இதுவாகத்தான் இருக்க முடியும். ஆனால் ஓர் வருத்தம் இந்தியாவின் கடைசிக் கடிதம் கூட இதுவாகத்தான் இருக்கமுடியும். இன்று நாலு மணிவரை தபால் பெட்டிக்கு வரும் கடிதங்கள் பெருநரை சென்றடையும் என்ற அறிவிப்போடு


டிவோட்டா என்கிற மணி மகுடம்

 

 எழுத்தாளன் என்றாலே ஜிப்பா,கண்ணாடி,சோல்னா பை இவைதான் நாம் உருவகப்படுத்தியிருப்போம். “டிவோட்டா” அப்படி இல்லை. உலகின் சிறந்த எழுத்தாளர்களில்,இந்தியாவின் சிறந்த எழுத்தாளர்களில், தமிழ்நாட்டின் சிறந்த எழுத்தாளர்களில் இப்படி எதுவும் இல்லை. அடியக்காமங்கலத்தில் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். ஆம் டிவோட்டாவோடு சேர்த்து அடியக்காமங்கலத்தில் 13 எழுத்தாளர்கள். “ரைட்ரோகிஸ்தான்” நாட்டின் மூத்த எழுத்தாளர் மேல் உள்ள பற்றால் தனது பெயரை “டிவோட்டா” என மாற்றிக்கொண்டார். தன் வாழ்வியல் அனுபவம்,சிறுகதை,கவிதை எழுதி வந்தவர் இன்னும் அவரை சிறந்த கலைஞனாய் காட்டிக்கொள்ள சிந்தித்தார்.


அடிக்கோடிட்ட ஆசைகள்

 

 என் கணவர்க்கு வீடு என்றால் நிறைய புத்தகங்கள் இருக்கணும். எனக்கு நிறைய பூனைகள் இருக்கணும். இப்போ ஓரளவுக்கு புத்தகங்கள் இருக்கு…. ஆனால் இன்னும் பூனைகள் இல்லை. அவருக்கு ஜாலி…. எனக்கு அவர் சொன்னது சாரி…….!?(எங்கோ படித்தது) நாங்கள் அறிமுகமானதே புத்தகத்தின் மூலம்தான். பெருநகரத்தின் பிரதான சாலையில் இயங்கும் குளிரூட்டப்பட்ட அறைதான் அந்த நூலகம். என் அருகருகே பல பேரும், என் முன் நாற்காலிகளில் சில பேர்களும் அமர்ந்து படிக்கும் பெரும் நூலகம்தான். எனக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கமில்லை.!?