கதையாசிரியர் தொகுப்பு: ர.ஆனந்தன்

4 கதைகள் கிடைத்துள்ளன.

நிமிட காதல்..

 

 வழக்கம்போல் அன்று மாலையும் மின்சாரமில்லை. கொஞ்சம் புழுக்கம் அதிகப்படியானதால் மொட்டைமாடிக்கு செல்லலாமென முடிவெடுத்து மாடிக்குச் சென்றேன். காற்று உடலை வருடும்போது தென்றலின் அருமை புரிந்தது. கொஞ்சம் கொஞ்சமாக என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். எங்கிருந்தோ சிரிப்பு சத்தம் கேட்டது. சிரிப்பு வந்த திசையை நோக்கினேன்.. ஒரு அழகான அல்லது அம்சமான பெண்ணொருத்தி நின்றிருந்தாள். அவளருகில் அவளைவிட சுமாரான பெண்ணொருத்தி நின்றிருந்தாள். முன்னவளும் பின்னவளும் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டு சிரித்துக்கொண்டிருந்தனர். அவர்கள் என்னைப் பார்த்துதான் சிரிக்கிறார்களோ என்ற எண்ணம் மேலோங்க


பேருந்து காதல்…

 

 அந்த பேருந்து வந்ததும் முதல் ஆளாக முன்டியடித்துக் கொண்டு ஏறினேன். கூட்டம் பேருந்திலிருந்து பிதுங்கி வழிந்தது. கூட்டத்தில் அகப்பட்டு அல்லோலப்பட்டு நிற்கும் போதுதான் கவனித்தேன். அவள் பேருந்துக்குள் ஏறவில்லை. பேருந்து கிளம்ப தயாரனது. உடனே சுதாரித்துக் கொண்டு மறுபடியும் கூட்டத்தில் நீச்சலடித்து கீழிறங்கினேன். அவளருகிலும் அருகிலில்லாமலும் நின்றேன். நான் ஏறும் போதும் கவனித்தாள். இறங்கும்போதும் கவனித்தாள். அவள் என்னை கவனித்ததை நானும்தான் கவனித்தேன். என்ன செய்ய இப்போது மட்டுமா கவனிக்கிறேன் ? கடந்த ஆறு மாதங்களாக கவனிக்கிறேன்.


பிச்சைக்காரனைத் தேடி…

 

 சவரம்செய்யப்படாத தாடி..அழுக்கேறிய உடை…கிழிந்து தொங்கிக்கொண்டிருந்தாலும் அவரின் தோள்களில் தொங்கிக்கொண்டிருந்த தோல்ப்பை..கையில் தடி.. கண்களில் ஒருசோர்வு.. கைகளில் இருக்க வேண்டிய ரேகை முகத்தில்…இப்படி எல்லாமும் இருந்தாலும் அவரின் முகத்தை அழகாகக்காணவைத்தது அவரின் புன்னகைதான்…இத்தனைத் தகுதியுடைய அந்த தடியுடைய மனிதர் எங்களைஅன்போடு அணுகி, ” பேராண்டிகளா பேராண்டிகளா… ” என்று அழைத்தபோது மூன்றுபேரும் ஒன்றாக அவரைப் பார்த்தோம்.. வழக்கமாக எல்லாப் பிச்சைக்காரர்களையும் பார்க்கும் ஒருஏளனப்பார்வையை அவரிடமும் எந்த கஞ்சத்தனமும்இல்லாமல் வீசினோம்… மறுபடியும் அந்த மாமனிதர் பேசினார்… ” ஒரு ஒருரூபா


தேவதூதரும் தலைவலியும்

 

 எனக்கு மட்டும் உதவி செய்வதற்கு சில தேவதூதர்களை கடவுள் படைத்திருப்பார் போலும்….நான் தலைவலியால் துன்பப்படுவதை அறிந்த அந்த இதயம், அலுவலகத்தில் எனக்காக விடுப்பு எடுத்துக் கொண்டார்… தலைவலி இப்போது இல்லைதான் இருப்பினும் அந்த தேவதூதரின் அன்புக்கட்டளைக்கு இணைங்கி மருத்துவமனைக்கு சென்றோம்.. அரசாங்கம் பாதி ..தனியார்பாதி என இரண்டு வகைமருத்துப் பிரிவுகளைக் கொண்ட அந்த பிரம்மாண்டமானமருத்துவமனைக்குள் நுழைந்தோம்… எங்களை சுமந்துசென்ற வாகனத்தை நிறுத்தும் இடத்தில் சேர்த்து விட்டு…மக்களுடன் கலந்து பொதுப் பிரிவுக்குள் சென்றோம்…மிகப்பெரிய இடப்பரப்பு முழுவதையும் மக்கள் அடைந்து