கதையாசிரியர் தொகுப்பு: மு.கருணாநிதி

1 கதை கிடைத்துள்ளன.

வாழ முடியாதவர்கள்

 

 ‘டாண் டாண்’ என்று மணிக்கூண்டு கெடிகாரம் பத்து ஒலிகளை முழங்கிற்று. நட்சத்திர டாக்கீசின் கதவுகள் திறக்கப்பட்டன. ‘திலோத்தமா’ படம் முடிந்து விடுதலை பெற்ற சிவப்பு, பச்சை, நீலம், மஞ்சள் வர்ணங்கள் திடீரெனச் சிரித்த பாதரச விளக்குகளால் சோபையிழந்தன. அந்தச் சோபையிலும் சொகுசு மின்னிடுவதாகத் தொடர்ந்து வந்த வாலிபப் பட்டாளம் ‘கம்பரசம்’ பாடிற்று. “பெண்களுக்குச் சுதந்திரம் அளிப்பதாயிருந்தால் முதலில் இந்த ஆண்களை எல்லாம் அரபிக்கடலில் தூக்கி எறியவேண்டும்” என்றால் ஒருத்தி, சிவப்புச் சேலைக்காரி. “உலகம் அழிந்துபோக உன்னை யோசனை