கதையாசிரியர் தொகுப்பு: முல்லைஅமுதன்

13 கதைகள் கிடைத்துள்ளன.

இரட்டைப்பட்டுச் சங்கிலி

 

 அம்மா நகைகள் மீது ஆசைகொண்டவளல்ல.மாதகலிலிருந்து அப்பாவைத் திருமணம் திருமணம் முடித்திருந்தபோதும் சீதனம் நகை எனப் பிரச்சினைகள் வரவில்லை..அப்பாவும் எதிர்பார்க்கவில்லை.அம்மாவிற்கென வயல் காணி இருந்ததாம்.அதுவும் அம்மாவின் அண்ணர் பராமரித்துவந்தது தெரியும்..அப்பாவும் கேட்டதில்லை.நமக்கும் தெரியாது. நானும் வளர்ந்த பிறகு சனி ஞாயிறு விடுமுறையில் மாமா அழைத்துச் செல்வார்.அப்போது பெரியப்பாவின் வீட்டில் இருந்து படித்து வந்ததினால் நான் தனியாள் என்று நினைத்து கூட்டிச்சென்று நிறைய சாப்பிடத்தருவார். மாமாவிற்கு அதீத பாசம் என் மீதிருந்தது.ஒவ்வொரு வாரமும் அழைத்துப்போவார்.திங்கள் அதிகாலையிலேயே எழுப்பி,அழைத்துவந்துவிடுவார்.அவர் அப்போது நெடுந்தீவில்


தெளிவு

 

 சன்னலோரம் வழமையாக உட்காரும் அமர்வில் அமர்ந்து அன்று வந்திருந்த சஞ்சிகைகளைப் புரட்டினான் வாசன்.’தெறி’ எனும் சஞ்சிகையின் பதினெட்டாம் பாகத்தில் வந்திருந்த ஒருபக்கக் கதையொன்று கண்ணில் பட்டது.கதைகள் வாசிக்கும் மனநிலையில் இல்லையென்றாலும் சின்னக் கதைதானே என்று வாசிக்கப்போக அவன் மனதில் ஏதோ ஊர்வதைப் போலிருந்தது. வெளியே விதம் விதமான பூக்களுடன் செடிகள்.வாசனின் மனைவிக்கு பூச்செடிகள் வளர்ப்பதில் அலாதிப் பிரியம்.வீட்டின் முன்புறமும்,பின் புறமும் இருக்கின்ற நிலப்பரப்பில் பூச்செடிகளுடன்,வீட்டுக்குத் தேவையான மரக்கறிகன்றுகளையும் நட்டிருந்தாள்.ஊரில் வாசனின் அம்மாவும் இப்படித்தான் ..மாதர்சங்கத்தில் சேர்ந்து அங்கு


சாமத்திய வீடு

 

 காலைக்குளிர் சில்லென்று வீசினாலும் தொலைபேசியின் தொணதொணப்பில் எரிச்சல் வந்தது. தொணதொணப்பு ஓய்ந்தது.. அன்று என்றும் இல்லாத களைப்புடன் படுத்திருந்தாள் சிந்து. அவள் கணவன் சபாவின் குறட்டை ஒலியில் இருந்து அவன் அயர்ந்து தூங்குவது தெரிந்தது. பாவம் அவன் லண்டன் வந்த காலத்தில் இருந்து தொடர்ந்து இரவு வேலையே செய்து வந்ததால் இவ்வாறான ஒரு சில இரவுகளே அவனால் இரவு நித்திரை கொள்ள முடிந்தது. சபா மட்டுமா? இவனைப்போல புலம்பெயர்ந்த தமிழர் பலரின் நிலை இப்படித்தானே!!.. மீண்டும் ஒலித்தது….


பேரம்!

 

 சொகுசுக்காரில் வந்திறங்கியவள் நக்கலாய்ப் பார்த்தாள். வித்தியா புன்னகைத்தபடி வரவேற்றாள். ‘எவ்வளவு?’ ஆங்கிலத்திலேயே கேட்டாள். வித்தியாவும் சொன்னாள்.’120 பவுண்ட்’ விலை அதிகம் என்றாள். ‘இல்லை..நீங்கள் 200க்குள்ள வேணும் எண்டனீங்கள். அதுதான்…’ வித்தியாவை மேலும் கீழும் பார்த்துவிட்டு சொன்னாள். ‘இது 10 ரூபாயும் பெறாது’ வித்தியாவிற்கு கொஞ்சமாக ஏறியது.காட்டிக்கொள்ளாமல்’ செய் கூலி இல்லாமல், பொருளுக்கு மட்டுமே சொன்னனான்’. ‘பகிடி விடாதையும்…யாவாரிகள் உப்பிடித்தான் கதைப்பினம்..கொள்ளை லாபம் வைக்காமல் இருக்கமாட்டினம்’ கோபத்தை அடக்கிக்கொண்டு’ என்ன சொல்ல வாறியள்?’ கேட்டாள் வித்தியா. ‘எப்படியோ வாங்கின


போலி வாழ்க்கை

 

 ‘அப்பா!’ கூப்பிட்ட தொனி கோபமா அல்லது அப்பாவின் இயலாமை மீதான கழிவிரக்கமா? மௌனமாக திரும்பினேன். விழிகளை அகலத்திறந்து அவளைப் பார்க்கையில்.. என் கேள்வியின் அர்த்தம் பார்வையில் தெரிந்திருக்கவேண்டும். சொன்னாள். ‘ஏனப்பா..உங்களைப் போல நானும் எழுத வேண்டும்..என்னை என் பாட்டில் விட்டுவிடுங்களேன்’ அதற்கு..? அருகில் வந்து அமர்ந்தேன்.அவள் ஏதோ சொல்ல நினைக்கிறாள். சொல்லட்டுமே. அவளின் குரல் வரட்டுமே. எத்தனை நாள் பூட்டிவைத்திருக்கும் கேள்வியும் அது எனில் கேட்டுவிட்டுப்போகட்டுமே. ‘உங்கள் விருப்பபடியே படித்தேன்.பட்டமும் பெற்றாயிற்று..உங்கள் விருப்பப்படியே நூல் எழுதியும் தந்தேன்.


என்னைப் பேசச் சொன்னால்…

 

 சும்மா இருந்திருக்கலாம்.இன்றெனப்ப்பார்த்து மனைவி புத்தகங்களைக் கலைத்து மீள அடுக்கத்தொடங்கினாள்.எதிர்பார்க்கவில்லை.காலையிலேயே தேநீருடன் வருபவள் இன்று காணவில்லையேயென இறங்கிவந்தேன்.கடைசிப்படியில் ஒரியோ படுத்திருந்தது.ஒரியோ எங்களது செல்லப்பூனை.வந்து இரண்டுவருடமாகிறது.பிள்ளைகளுக்கு பரீட்சையில் சித்தியடைந்தால் வாங்கித் தருவதாகச் சொல்லியிருந்தேன்.இப்போது பிள்ளைகளுள் ஒன்றாகிவிட்டது.நாய்க்குட்டி ஒன்றிருந்தால் நன்றாக இருக்குமே என்கிறாள் கடைசிப்பெண்.முன்பென்றால் துணிந்து வாங்கிவிடுவேன்.இப்போது வேலைக்குப்போகாத நிலையில் வீட்டிற்குப்பாரமாகிவிட்டேனோ என்கிற நினைப்பு வர ஓய்ந்து போன ஒரு மனநிலையும் வந்துவிட்டது.கம்பீரமாக வேலை,வீடு,நண்பர்கள்,புத்தகம்,பிள்ளைகள் என வலம்வந்தவனை முடக்கிப்போட்டுவிட்டது இந்த கொறோனா…வேலைக்கு போகாமல் வீட்டினுள் முடங்க எல்லாம் இழந்ததுபோல…படுக்கை,கணினி என இந்த


(ஆ)சாமி வரம்

 

 இருள் சூரியனை இழுத்து தன்னுள் அமுக்கிக் கொண்டது. அப்பா சொல்லி வைத்தது போல சின்னமணியும் தனது சிறிய லொறியுடன் வந்திருந்தான். ‘ஏன் வீட்டுக்காரர் வரேல்லையே?’ அப்பா கேட்டார். ‘இல்லை அண்ணை நாளை வீரபத்திரர் கோயில் கொடியேறுது, அதான்..’ சின்னமணி இழுத்தான். அப்பா வீட்டுக்குள் வந்து பார்த்தார். ‘என்ன இன்னும் வெளிக்கிடேல்லையே?’ பார்வை கேள்வியாய் விழுந்தது. அடிவளவில் கட்டியிருந்த மாடு எதற்கோ கத்தியது. அப்பா வீட்டில் இன்றியரவு நிற்க மாட்டார் என்று அந்த மாட்டுக்கும் தெரியுமோ? அப்பாவுக்கு பிள்ளைகளைவிட


நிலவு முளைத்தது

 

 தூக்கம் வராமல் எழுந்து உட்கார்ந்தான். சுற்றும் முற்றும் விழிகளை சுழல விட்டான். மங்கிய இருளில் ஆங்காங்கே சிலர் படுத்திருந்தனர். சிறு துவாரத்தின் வழி வருகின்ற மின்விளக்கின் வெளிச்சத்தில் முகங்களை சரியாக தெரியவில்லை. இவன் நிமலன்…. அவன் பார்த்திபன்…. அந்த மூலையில் கிடப்பவன் திலகன். வந்த சில நாட்களுக்குள் பெயர்களை மட்டும் தெரிந்து வைத்திருக்கிறான். அவர்கள் உண்மையிலேயே குற்றம் செய்தவர்களா? சந்தேகத்தின் பேரில் கைதாக இங்கு கொண்டு வரப்பட்டவர்கள் தானா? வுப்சாரிக்கும் துணிச்சல் இன்னும் வரவில்லை. பொலிஸ்காரர்களைப் பற்றிய


அப்பாவின் முகம் பார்க்கும் கண்ணாடி

 

 அப்பா என்றில்லை..யாவர்க்கும் பொதுவான குணம்தான்.அப்பா என்பதினால் அதிகமாய் கவனத்தில் கொள்கிறோம். அவ்வளவே. காலை, மாலை, இரவு என மாறுகின்ற பொழுதுகளுடன் நாமும் நகர்ந்துகொண்டிருக்கிறோம். தன்னம்பிக்கை மிக்கவர் அப்பா.வாழ்வின் சகல அசௌகரியங்களுக்கும் முகம்கொடுத்து தன்னைத்தானே வடிவமைத்துக் கொண்டவர். ஒருநாள் மாலைநேரம் இரத்தம் சொட்டச் சொட்ட பரிதவித்துவந்தது பூனை.. விறாந்தை முழுக்க ரத்தம். அப்படியே அனைத்துத் தூக்கிப்பிடிக்க அம்மா துணியால் துடைத்துவிட்டு இன்னொரு துணியால் இரத்தம் வந்த பகுதியை கட்டிவிட்டால்.வலியால் பூனை துடித்தது. அம்மா அப்பாவைத் திரும்பிப்பார்த்தாள். ‘உடைஞ்சு போச்சு


உறவே! உயிரே!!

 

 அன்று திங்கட்கிழமை. இரண்டுமணிக்குபிறகு போனால் முதலாளி நிற்பார்..போய் கேட்கலாம்… நீ எழுத்தாளனெண்டா கொம்பு முளைச்சிருக்கோ? விற்கக் கொடுத்த புத்தகத்தைப் பற்றிக் கேட்கப்போய்..கடைசியில கடைக்காறன் இப்படிக்கேட்டுவிட்டான். செத்துவிடலாம் போலிருந்தது. கொஞ்சமாய் சில சமயம் கனக்க கர்வம் ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் இருக்கும். எம்மை அறியாமலேயே கொஞ்சம் கொஞ்சமாக கட்டி எழுப்பப்பட்ட பிம்பத்தை யாரோ ஒருவர் உடைத்தெறிகிறபோது அத்திவாரமே ஆடிப்போவதாய் ஒரு உணர்வு கொப்பளிக்கும்.கடைசியில் தன் மீதே கோபம் வந்துவிழும்..விரக்தி தலைதூக்கும்.. ஒவ்வொரு எழுத்தையும் யாரும் விலைகூறி விற்பதில்லை..ஆனாலும் அந்த ஒவ்வொரு