கதையாசிரியர் தொகுப்பு: மா.தாமோதரகண்ணன்

1 கதை கிடைத்துள்ளன.

தகிடின் சரித்திரம்

 

 ‘‘ தகிடு செத்துட்டான்…” இதுதான் விறகு விற்கும் சந்தையில் விளம்பரமாய் இருந்தது.சிறுவியாபாரிகள் ஒன்று கூடி தகிடுவின் அடையாளமான ஈர்க்குச்சியின் உடம்பைப் பார்த்தார்கள்.வெயிலுக்கும் மழைக்கும் குளிருக்கும் ஒதுங்கிக் கொள்ளும் கட்டிடத்துக்குள் தகிடுவின் உடலைக்கொண்டு செல்வதென முடிவெடுத்தார்கள். இரண்டுபேர் தூக்கிக் கொண்டு கட்டிடத்தின் தரையில் கிடத்தினார்கள். மீண்டும் ஆலோசனை நடந்தது.மாலை, தேங்காய், ஊதுபத்தி கூடவே செண்டு பாட்டிலும் கோடித்துணியும் வாங்கிவர சில்லரைக் காசுகளையும் ரூபாய் நோட்டுகளையும் அருகே இருந்த முப்பதுவயதான வியாபாரியிடம் கொடுத்தார்கள். வியாபாரி1: ‘‘ நேத்து நல்லாத்தானே இருந்தான்.இராவுல