கதையாசிரியர் தொகுப்பு: மணி அமரன்

1 கதை கிடைத்துள்ளன.

ராஜாவாகப் போகிறிர்களா?

 

 “அண்ணா குடிக்காதிங்க.. அண்ணா குடிக்காதிங்க”.. என்று வயது வித்தியாசம் பார்க்காமல் டாஸ்மாக் வாசலில் நின்று குடிக்க வருவோரின் கால்களிலும் பாரில் குடித்து தள்ளாடிச் செல்வோரின் கால்களிலும் விழுந்து புலம்பிக் கொண்டிருந்தான் அந்த மனநிலை பாதித்த இளைஞன். கிழிந்த சட்டையும் கரிபடிந்த உடம்பும் பரட்டைத் தலைத் தாடியுடன் கண்களில் ஏதோ கனத்த சோகத்தையும் சுமந்த அந்த மனநிலை பாதித்த இளைஞனை சில குடிமகன்கள் அடித்து விரட்டி விடுவது தினசரி வாடிக்கையாகி விட்டது. இதோ அவன் தனக்குத் தானே புலம்பிக்