கதையாசிரியர் தொகுப்பு: மகேஷ் சேந்தலிங்கம்

3 கதைகள் கிடைத்துள்ளன.

ரயில்வே கேட்

 

 எங்கள் தெருவில் இருந்து அரைக் கிலோமீட்டர் வரை பயணம் செய்தால் நெல்லை டூ திருச்செந்தூர் வரை செல்லும் ரயில் தண்டவாளத்தை கடக்க நேரிடும். என்னைப் பொறுத்த வரை எங்க ஊர் ரயில்வே கேட் தனித்துவமானது. எங்கள் ஊரின் ஆண்கள் பூங்கா என்றால் அது கண்டிப்பாக ரயில்வே கேட்டாகத் தான் இருக்கும். அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் ஐம்பது வயதைக் கடந்தோர் குறிச்சியில் இருந்தும் கொக்கிரகுளத்தில் இருந்தும் நடைப்பயிற்சி செய்து வந்து சங்கமிக்கும் இடம் இந்த ரயில்வே கேட் தான்.


அப்பாவின் கைநெடிக் சபாரி வண்டி

 

 திருநெல்வேலியின் மிக முக்கியமான இடங்களில் நெல்லை டவுனும் ஒன்று. பழங்காலம் தொட்டு இப்போது வரை எப்போதுமே பரபரப்பாக இருக்கும் இடம் இது தான். டவுன் என்றாலே எல்லோர் மனதிலும் நெல்லையப்பரும் காந்திமதி அம்பாளும் வீற்றிருக்கும் நெல்லையப்பர் கோவில் தான் நினைவுக்கு வரும். அதைத் தாண்டி டவுன் மிகச் சிறந்த வியாபாரத் தலமும் கூட. மிகப் பெரிய ஆடை ரெடிமேட் கடைகளான போத்திசும் ஆர்.எம்.கே.வியும், நிறைய நகைக்கடையும்,பல மளிகைக் கடையும், சினிமா தியேட்டர்களும் மட்டுமல்லாது எஸ்.என் ஹை ரோட்டில்


வாட்ச்

 

 எல்லாருமே அலுவலகத்தில் பரபரப்பாக வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். மணியும் 1:30 நெருங்கிக் கொண்டிருந்தது. அருகில் இருப்பவருக்கு பசி வர ஆரம்பித்துவிட்டது. எங்கள் டீமில் அனைத்து நபர்களையும் சாப்பாட்டுக்கு ஒன்றாக அழைத்துச் செல்வது என்பது கடினமான பாறையை சிறு ஆணி கொண்டு பிளக்க முயற்சிப்பதாகும். இருந்தாலும் ஒவ்வொரு நாளும் அதில் வெற்றியே கிடைக்கும். ஒரு வழியாக எல்லாருமே சாப்பிட வந்தாயிற்று. இப்போது இன்னொரு பிரச்சனை என்னவென்றால் இடம் தேட வேண்டும். ஒன்று இரண்டு என்றால் பரவாயில்லை. நாங்களோ பத்து