கதையாசிரியர் தொகுப்பு: பிரசன்னகிருஷ்ணன்

3 கதைகள் கிடைத்துள்ளன.

மனம் ஒரு குரங்கோ?

 

 மதியமே வேலை முடிந்துவிட்டது.. அலுவலகத்தில் இருக்கும் சொச்ச நண்பர்களையும் பார்த்து அவர்களின் பிராஜக்ட் நலத்தை விசாரித்து, வழக்கம் போல அலுவலகத்தில் இருக்கும் ஏதோ ஒரு பெண்ணின் உடையலங்காரத்தை மிகவும் மட்டமாக விமரிசித்து, வாய் கிழிய சிரித்தாயிற்று.. அடுத்தது கிளம்ப வேண்டியது தான் பாக்கி.. 5 மணிக்கு மேனேஜரிடம் போய் “ஷல் ஐ லீவ், ஃபினிஷ்ட் டுடேஸ் வொர்க்…. “, என்றால் அவன் அவர் பெண்ணை மணமுடிக்க கேட்ட முக பாவனையுடன் “வாட் நௌ இட்செல்ஃப் …” என்று


சின்ன சின்ன கனவுகள்

 

 பள்ளி வாசலில் மழலையின் சத்தங்கள். மணல்துகள்கள் அந்தரத்தில் அலைபாய்ந்தபடி இருந்தன. வருகின்ற அத்தனை மழலைகளின் வெள்ளை சட்டைகளிலும் டிசைன் டிசைனாக மை கறைகள். வெகுளி சிரிப்புகள். 15 நிமித்திற்கு முன்பிலிருந்தே வெயிலில் கால் கடுக்க காத்துக்கொண்டிருக்கும் ஸ்ப்லெண்டர்களும்,அபேச்சியும்,பஜாஜ் கப்பும் வைத்திருக்கிற ஆபீசுக்கு பெர்மிஷன் போட்டு பள்ளியின் வாசலில் இருக்கும் அப்பாக்களும், காலை உணவை முடித்துவிட்டு வீட்டு வேலைகள் முடித்து, மதிய நேர சீரியல்களை பார்க்க முடியாத வருத்தத்தோடு அம்மாக்களும், கடைசி பரீட்சையை முடித்துவிட்டு அடுத்த 2 மாதங்களை


நானும் அவனும்

 

 இப்போது 2012 இல் என்னுடைய 37 ஆவது அகவையில் கிருஷ்ணன் மற்றும் என்னுடைய வாழ்க்கை சரித்திரத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். ஆங்கிலத்தில் ஆட்டோ-பயோக்ராஃபி.. இதையெல்லாம் புத்தகமாக வெளியிட ஏதாவதொரு மடையன் முன்வர வேண்டும்..அப்படி என்ன நான் கிழித்து விட்டேன் என்று இதை படிக்க நேரும் போது உங்களுக்கு தெரியும். 37 மாதங்களில், 37 நாட்களில், 37 மணி நேரங்களில், ஏன் 37 மணி துளிகளிலும் கூட என் இனத்தவர்கள் அழிந்ததுண்டு. ஆனால் என் ஜன்ம சாபல்யம்,