கதையாசிரியர் தொகுப்பு: பாரதிமணி

3 கதைகள் கிடைத்துள்ளன.

நேர்பட பேசு

 

 அவசரமாக பஸ்ஸை பிடித்து, அந்த கம்பெனி வாசலை நான் அடையும் பொழுதே காலை மணி 9.45 ஆகி விட்டது. இன்று காலை 10 மணிக்கு வரவேண்டும் என நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்தேன். செக்யூரிட்டி அதிகாரியின் விசாரிப்பு, அடையாள அட்டை, அனுமதி என்ற அனைத்து வித சடங்குகளுக்கு பிறகே… வரவேற்பு அறையில் பத்தோடு பதினொன்றாக அமர்ந்தேன். ஆம், உண்மையாகவே எனக்கு முன்பே…அங்கு பத்து பேர் வெவ்வேறு விதமான முக பாவங்களுடன் அங்கு இருந்தார்கள். என் பெயர் வந்தியத்தேவன். பெயர்


எது பணிவு!?

 

 ‘பணிவு சிலருக்கு வேசம்.. பலருக்கு பயம் கலந்த மரியாதை’ இப்படி மணிமேகலை பலமுறை யோசித்திருக்கிறாள். அலுவலகத்திற்க்குபோனால்….பணிவாக பேசுபவர்களே நல்லவர்கள் என்று மேலதிகாரி நினைக்கிறார். வீட்டில் மாமியாரும் அப்படியே! நம் மனதில் பட்டதை வெளிப்படையா பேசினால், விரோதி போலவே நினைக்கிறார்கள். ‘புத்தி என்ன சொல்லுதோ அதை மனசு கேட்கணும்.! மனசு எதை நினைக்குதோ…அதையே வாய் பேச வேண்டும்’ என்று இருப்பதுதான் அவளுக்கு விருப்பம். ‘உண்மையாக இருப்பது…பேசுவது…யாருக்கும் பிடிப்பதில்லையே..ஏன்? பணிவு மனதில் இருந்தால் போதுமே? அதை நடித்துக்காட்டித்தான் நிரூபிக்க வேண்டுமா?’ அன்று அவளுடைய


பாடும் விழிகள்

 

 கோவையிலிருந்து சேலம் நோக்கி,ஒரு பேருந்து பயணம்… இருவர் அமரும் இருக்கையில் என்னோடு அமர்ந்திருந்த அந்த மனிதருக்கு சுமாராக நாற்பது வயது இருக்கலாம்.எதையும் தொட்டுத் தொட்டுப் பார்த்து உணரும் அவரது நடவடிக்கை,அவர் கண் பார்வையில்லாதவராக இருக்கக்கூடும் என்று எனக்குத் தோன்றியது. கறுப்பு நிறத்தில் கண்ணாடி வேறு அணிந்து இருந்தார். ஆனால் அவரது உடை மற்றும் தோற்றம் நேர்த்தியாக இருந்தது. பொதுவாகக் கண் பார்வையில்லாதவராக இருந்தால்… அவராகவே தன்னை தயார்ப் படுத்திக்கொள்வதில் சற்று சிரமாக இருக்கும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. அவரிடம் மெதுவாகப் பேச்சுக் கொடுத்தேன். “சார்,