கதையாசிரியர் தொகுப்பு: நா.பாலேஸ்வரி

2 கதைகள் கிடைத்துள்ளன.

தீரப்பு

 

 திருக்கோணேஸ்வர ஆலயத்தின் மலையடிவாரத்தைத் தழுவிச் சென்ற கடலலைகள் அன்று மிகவும் உக்கிரமாக வீசுவது போன்ற உணர்ச்சியில் மூர்த்தி கண்ணிமைக்காமல் சில நிமிட நேரம் அந்த அலைகளையே பார்த்து நின்றான். சிறுவர்கள் விளையாடும் போது சிலவேளைகளில் எப்படிப் பெரியவர்கள் தங்களை அவதானிப்பதை விரும்பமாட்டார்களோ அப்படித்தான் மூர்த்தியும் தன்னை அவதானிப்பதை விரும்பாதது போல் அந்த அலைகளும் வானளாவ எழுந்து தண்ணீரை அவன் மீது வாரி இறைத்தன. அவற்றில் ஓரிரு துளிகள் அவன் உதட்டோரத்திற் பட்டுத் தெறித்தபோது அவனுந் தன் நினைவு


தெய்வம் பேசாது!

 

 சேகரன் ஒருபடியாகத் தன் மனைவி சுசீலாவை வைத்தியசாலையில் அனுமதித்துவிட்டான். ஆனால் அவளுக்கு சுகப்பிரசவமாக வேண்டுமானால் டாக்டர் எழுதிக் கொடுத்திருக்கும் ஊசி மருந்தை வாங்கிக் கொடுத்தே யாகவேண்டும். அதில் மூன்று குப்பிகள் இருக்குமென்றும் அவற்றின் விலை நூற்றிருபத்தைந்து ரூபாவாகும் என்றும் டாக்டர் சுருக்கமாகக் கூறிவிட்டார். ஆனால் பணம்? அவனை நம்பி அத்தனை பெரிய தொகையை யார் கொடுப்பார்கள். மனைவியை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கே அவன் தன் நண்பன் ராசுவிடம் இருந்து ரூபா பத்துப் பெற்றுக் கொண்டான். அவன் கேட்டவுடன் இல்லை